சொத்தில் பங்கு கேட்ட மனோஜ், வெளுத்து வாங்கிய முத்து, விஜயா எடுக்கும் முடிவு – சிறகடிக்க ஆசை

0
185
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் பங்களா வீட்டினுடைய போலி ஓனர்கள், மனோஜிடம் மீதி பணத்தை வாங்கிக் கொண்டு அந்த இடத்தை விட்டு எஸ்கேப் ஆனார்கள். ஆனால், முத்துவிற்கு சந்தேகம் வந்தது. பின் எல்லோருமே பங்களாவை சுத்திப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
வீட்டிற்கு பெயர் வைக்க நியூமராலஜிஸ்ட்டை வரவைத்தார்கள். இதை பார்த்து முத்து, ரவி கிண்டல் செய்தார்கள். பின் அந்த நபர் மனோஜ்-ம,ரோகினி-ரோ,விஜயா-யா எழுத்து எடுத்து பெயர் வையுங்கள். ‘ரோமயா’ அருமையாக இருக்கும் என்று சொன்னவுடன் அண்ணாமலை, முத்து சிரித்தார்கள்.

-விளம்பரம்-

சந்தோஷத்தில் விஜயா, ரோமயா என்று கத்தி இருந்தார். அதற்கு பின் அங்கு வந்த பார்வதி, வீட்டை பார்த்து புகழ்ந்து பேசி இருந்தார். பின் வீட்டில் பேய் இருக்கிறதா? என்று சோதனை செய்ய வேறொரு பெண் மந்திரவாதி ஒருவரை வர வைத்தார்கள். இதெல்லாம் பார்த்து முத்து கிண்டல் செய்தார். நேற்று எபிசோட்டில் பேய் விரட்டும் பெண் மந்திரவாதி வந்தவுடன் எல்லோருமே பயத்தில் இருந்தார்கள். அவர் எல்லா லைட்டை போட சொல்லி கண்ணை மூடி, கையை தூக்கி நின்றார்.

- Advertisement -

சிறகடிக்க ஆசை:

பின் வீட்டில் உள்ள எல்லா லைட்டுகளுமே ஆட, ஜன்னல் கதவெல்லாம் சத்தம் கேட்டது. இதனால் எல்லோருமே பேய் தான் இருக்கிறது என்று பயந்து விட்டார்கள். உடனே எல்லா லைட்டும் அணைந்து வியந்து. இதனால் எல்லாருமே பயப்பட, நான் தான் மெயின் ஆஃப் பண்ணேன் என்று முத்து சொன்னார். இருந்தாலுமே அந்த மந்திரவாதி எதையும் கண்டுகொள்ளவில்லை. அவர் கண்ணை மூடிக்கொண்டு இருந்தார். ஸ்ருதி – முத்து இருவருமே மாத்தி மாத்தி கமெண்ட் போட்டுக் கொண்டே இருந்தார்கள்.

நேற்று எபிசோட்:

கடைசியில் அவர், இங்கு பேயில்லை என்று சொல்லி பணம் கேட்க, மனோஜ் கொடுத்து விட்டார். மனோஜ் அடுத்து என்ன செய்ய போகிறான்? என்று கலவரத்தில் மொத்த குடும்பமும் இருந்தது. இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் மனோஜ், புது பங்களா மீது லோன் போட்டு ரெண்டு கோடி ரூபாய் வரை லோன் வாங்குகிறார். பேங்க் மூலம் வந்தவர்கள் வீட்டை சுற்றி பார்த்தார்கள். மீதி 70 லட்சம் பணம் தேவை என்பதால் தன்னுடைய அப்பாவிடம் மனோஜ் கேட்கிறார்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

அப்போது அவர், வீட்டை விட்டு எனக்கான சேர் கொடுங்கள். நான் இந்த வீட்டை வாங்கணும் என்றவுடன் எல்லோரும் ஷாக் ஆகிறார்கள். பின் முத்து- ரவி எல்லோருமே கோபப்படுகிறார்கள். உடனே அண்ணாமலை, இது என்னுடைய வீடு இல்லை. விஜயா தான் முடிவெடுக்க வேண்டும் அது அவருடைய அப்பா தந்தது என்று சொன்னவுடன் மனோஜ் தன்னுடைய அம்மாவிடம் கேட்க, அவர் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருக்கிறார்.

சீரியல் ட்ராக்:

இதனால் முத்து, மனோஜ் இடையே சண்டை நடக்கிறது. அதற்குப்பின் முத்து, ரோகினி உடைய அப்பாவிடம் வாங்கி இந்த வீட்டை வாங்கு என்று சொன்னவுடன் எல்லோருமே ரோகினி பக்கம் திரும்புகிறார்கள். ரோகினி, என்ன செய்வது என்று புரியாமல் பயத்தில் நிற்கிறார். பின் அவர் தன் மாமாவிடம் பேசுவது போல் வித்தியாவிற்கு ஃபோன் செய்து பணம் கேட்டு நடிக்கிறார். ஆனால், கடைசியில் பணம் இல்லை என்று சொன்னதாக சொல்கிறார். இது எல்லாம் கவனித்த மீனாவிற்கு சந்தேகம் வந்து முத்துவிடம் சொன்னார். இன்னொரு பக்கம் ரவி, மனோஜ் செய்த வேலையை நினைத்து புலம்பி கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement