முத்துவிற்காக மீனா செய்த வேலை, சாமியார் பேச்சை கேட்டு புது சிக்கலில் மாட்டும் மனோஜ்? சிறகடிக்க ஆசை

0
546
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்றான ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மனோஜ், பணத்தை ஏமாந்ததால் மீனாவின் நகையை யாருக்கும் தெரியாமல் விற்று கவரிங் நகையை மாற்றி இருந்ததால் வீட்டில் பெரிய கலவரம் வெடித்தது. இதை செய்தது மனோஜ் மற்றும் விஜயா தான் என்பதை முத்து கண்டுபிடித்து விட்டார். இதனால் அண்ணாமலை, இனி என்னிடம் பேசாதே என்று விஜயாவிடம் கோபித்து இருந்தார். அதோடு விஜயா, தான் போட்டு இருந்த தங்க வளையலை கழட்டி மீனா மேலே தூக்கி எறிந்து பொறுக்கிக் கொள் என்று கேவலமாக பேசி இருந்தார்.

-விளம்பரம்-

இறுதியில் அந்த 4 லட்சத்திற்கு ரோகிணி பொறுப்பு ஏற்று 2 லட்ச ரூபாய் முத்துவிடம் கொடுத்து விட்டார். மீதி பணத்தை சீக்கிரம் தருகிறேன் என்று சொல்லி இருந்தார். வழக்கம் போல் விஜயா, எல்லாத்திற்கும் காரணம் மீனா தான் என்று திட்டுகிறார். இதை பார்த்த சுருதி, விஜயாவை வெளுத்து வாங்குகி இருந்தார். இதனால் விஜயாவிற்கு சுருதி மேல் பயங்கர கோபம். கடந்த வாரம் இந்த பிரச்சனையை முடிக்க முத்து பாட்டியை வரவழைத்து இருந்தார். பாட்டி வந்ததும் அண்ணாமலையை சமாதானப்படுத்தி விஜயாவிடம் பேச வைத்தார். விஜயாவும் அண்ணாமலையிடம் மன்னிப்பு கேட்கிறார்.

- Advertisement -

சிறகடிக்க ஆசை:

கடைசியில் முத்து, 29 லட்சத்தை மனோஜ் மாதம் மாதம் கொடுத்தால் போதும் என்று சொல்கிறார். பாட்டியும் இது நல்ல யோசனை, மாதம் மாதம் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை மனோஜியிடமிருந்து வாங்கிக் கொடுப்பது விஜயாவின் பொறுப்பு என்றும் சொல்லிவிடுகிறார். கடைசியில் விஜயா ரோகினிடம், உன் அப்பாவிடம் இருந்து பணத்தை வாங்கி கொடுத்து விடு என்று கூறுகிறார். ரோகினி என்ன செய்வது என்று புரியாமல் இருக்கிறார். பின் முத்து புது காரை வாங்கி வீட்டிற்கு வருகிறார். அதைப் பார்த்து விஜயா நக்கல் அடித்து இருந்தார்.

சீரியல் கதை:

இன்னொரு பக்கம், மனோஜ்க்கு யாரோ ஒருவர் மொட்டை கடிதம் எழுதி அனுப்பி இருந்தார். அதைப் பார்த்து பயந்த மனோஜிடம், இது யாரோ பிராங்க் பண்றாங்க, நீ பயப்படாதே என்று ரோகிணி ஆறுதல் சொன்னார். இருந்தும் மனோஜ் பயந்து சாமியாரை பார்த்து இருந்தார். அவர் சொன்ன பரிகாரங்களை மனோஜ் செய்கிறார். இதை பார்த்து வீட்டில் உள்ள எல்லோரும் கேள்வி கேட்க மனோஜ் பதில் சொல்லவில்லை. அதோடு அவர் எல்லோர் மீதும் சந்தேகம் படுகிறார். நேற்று எபிசோடில், முத்து வாங்கிய புதிய காரை ஓட்டுவதற்காக முத்துவின் நண்பர் வீட்டுக்கு வந்தார்.

-விளம்பரம்-

நேற்று எபிசோட்:

அண்ணாமலை, கார் சாவியை ஆசிர்வாதம் பண்ணி அந்த பையனிடம் கொடுத்தார். பின் முத்து, வீடு கட்டுவதற்காக உண்டியலை தன் அப்பாவிடம் காட்டுகிறார். இதற்கு விஜயா, பிச்சை எடுக்கப் போகிறீர்களா, கடைசியில் இதற்கு தான் வருவீர்கள் என்று தெரியும், போங்க என்று சொன்னவுடன் மனோஜ் வருகிறார். அதை பார்த்தவுடன் பிச்சைக்காரன் வந்துட்டான் என்று முத்து கத்துகிறார். ஆனால், மனோஜ் எதுவும் பேசாமல் உள்ளே சென்று விடுகிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில், மீனா பூக்கட்டும் நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறார். அப்போது அவர்கள் சமையலைப் பற்றி சொல்கிறார்கள். உடனே, மீனா என்னுடைய கணவர் நான் எது சமைத்துக் கொடுத்தாலும் சாப்பிட்டு பாராட்டுவார் என்று பந்தயம் வைக்கிறார்.

இன்றைய எபிசோட்:

பின் மீனா, பச்சைப்பயிறு வைத்து வித்தியாசமான உணவை சமைத்துக் கொடுக்கிறார். எல்லோருமே சாப்பிட்டு புகழ்ந்து தள்ளுகிறார்கள். ஆனால், முத்து மட்டும் போன் பேசிக்கொண்டு அதை கண்டுகொள்ளாமல் சென்று விடுகிறார். இதனால் மீனா வருத்தப்படுகிறார். இன்னொரு பக்கம், மனோஜ் நினைத்து ரோகினி, விஜயா வருத்தப்படுகிறார்கள். இருந்தாலுமே மனோஜ், நம்மை மீறி ஒரு சக்தி இருக்கிறது. அதை நான் நம்புகிறேன் என்று சாமியார் சொன்னதை செய்கிறார். பின் கடையில் ரோகினி தன் மகனுடன் பேசி கொண்டு இருக்கிறார். அப்போது வந்த மனோஜ், யாரிடம் பேசுகிறாய்? என்றதற்கு கிளைன்ட் என்று ரோகினி சமாளித்து விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது. நாளை எபிசோடில், ரோகினி தன் மகனின் பிறந்த நாளுக்காக துணி வாங்க கடைக்கு போகிறார். அந்த கடைக்கு விஜயா, பார்வதி இருவருமே வருகிறார்கள். இனிவரும் நாட்களில் ரோகினியின் உண்மை முகம் வெளிவருமா? விஜயா கண்டு பிடிப்பாரா? போன்ற விறுவிறுப்பில் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

Advertisement