விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து- ஸ்வேதா- ஸ்ருதி- ரவி எல்லோருமே அதைப்பற்றி தான் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது மீனா, வியாபாரிகளின் பிள்ளைகளுக்கு இலவசமாக டியூஷன் எடுக்கலாம் என்றார். ஸ்வேதா, நானே இலவசமாக எடுக்கிறேன் என்றார். இதைப் பற்றி மீனா தன்னுடன் வேலை செய்பவர்களிடம் சொன்னார். எல்லோருமே மீனாவின் திட்டத்தை பாராட்டினார்கள். இதை அறிந்த சிந்தாமணி லஞ்சம் கொடுத்து எல்லோரையும் தன் பக்கம் விலைக்கு வாங்க திட்டம் போட்டார். இதெல்லாம் கவனித்த ரேகா, இந்த தேர்தலில் நிற்காதீர்கள் என்று தடுக்கின்றார். ஆனால் சிந்தாமணி கேட்கவில்லை.

தேர்தலில் மீனா வெற்றி பெற்று விட்டார். இதனால் கோபத்தில் சிந்தாமணி கொதிக்கிறார். மீனாவை எப்படியாவது தலைவி பதவியில் இருந்து விலக்கி, அவளுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று சிந்தாமணி திட்டம் போட்டுக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் நீத்துவின் கடை திறப்பு விழாவிற்கு ரவி போகாமல் இருப்பதற்காக சுருதியை அழைத்துக்கொண்டு டூர் போக சொன்னார் மீனா. பின் சுருதி-ரவி இருவரும் டூர் கிளம்பி போனார்கள். பின் ரெஸ்டாரண்டை மீனா- முத்து இருவரும் பார்த்துக் கொண்டார்கள்.
சிறகடிக்க ஆசை:
அப்போது வந்த நீத்து, ரவி எங்கே? என்று ஓட்டலில் பிரச்சனை செய்தார். மீனா, இருவரும் டூர் சென்றிருந்தார்கள் என்றார். கோபத்தில் நீத்து, முத்து-மீனா இருவரையும் மோசமாக பேசினார். ஒரு கட்டத்தில் மீனா, நீத்துவின் கன்னத்திலேயே பளார் என்று அறைந்து வெளியே துரத்துகிறார். இன்னொரு பக்கம் கோர்ட்டில் மனோஜ் விவாகரத்து வழக்கு நடக்கிறது. அப்போது ரோகிணி, கிரிஷை அழைத்துக் கொண்டு வந்தார். அப்போது ரோகிணி, என்னிடம் பணம் இல்லை. ரொம்ப கஷ்டத்தில் இருக்கிறேன். மனோஜை திருமணம் செய்து கொள்ள நான் நிறையவே கடன் பட்டு விட்டேன் என்று ரொம்ப எமோஷனலாக அழுது நடித்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மனோஜ், அவள் சொல்வதெல்லாம் பொய். நடிக்கிறாள் என்று சொல்கிறார். உடனே ரோகினி, முதலை கண்ணீர் வடித்து நிறைய டிராமா போடுகிறார். பின் நீதிபதி, இந்த வழக்கை நான் ஆறு மாதத்திற்கு ஒத்தி வைக்கிறேன். ஆனால், அதுவரை ரோகிணிக்கும் அவருடைய குழந்தைக்கும் தேவையான செலவை மனோஜ் தான் செய்ய வேண்டும். மாதம் 25,000 கொடுக்க வேண்டும் என்று சொல்லிவிடுகிறார். இதனால் ரோகிணி ரொம்பவே சந்தோஷப்படுகிறார். விஜயாவிற்கு பயங்கர கடுப்பாகிறது.

சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் வீட்டிற்கு சுருதி-ரவி இருவரும் வந்துவிடுகிறார்கள். எல்லோருமே நிச்சயதார்த்தத்திற்கு தயாராகிறார்கள். விஜயா, மனோஜ் நிச்சயதார்த்தத்திற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்கிறார். அப்போது வந்த மனோஜ், நிச்சயதார்த்த மோதிரத்தை காணவில்லை என்று சொல்கிறார். வீட்டில் யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. விஜயா, எங்கே போச்சு என்று பதறுகிறார். அண்ணாமலை ஷாக்கில் இருக்கிறார்.






