விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் விஜயா, தன் மகனின் நிலைமை நினைத்து கஷ்டப்பட்டார். இதை அறிந்த சிந்தாமணி ரொம்பவே சந்தோஷப்பட்டார். ரோகிணி, சிந்தாமணியை சந்தித்து எமோஷனலாக அழுதார். சிந்தாமணி, உனக்காக தான் செய்தேன். நீ பணம் செலவு பண்ணி மனோஜை வெளியே கொண்டு வர முயற்சி செய். அது மனோஜ்க்கு தெரிய வேண்டும். அப்போதுதான் நீங்கள் இருவரும் சேருவீர்கள் என்று ஒன்றுக்கு இரண்டாக ஏற்றி விட்டார். இன்னொரு பக்கம் முத்து-மீனா இருவரும் வக்கீலை சந்தித்து மனோஜ் நிலைமையை எடுத்து சொல்லி புரிய வைத்தார்கள்.

போலீஸ் ஸ்டேஷனில் விஜயா, மனோஜை விட சொல்லி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தார். போலீஸ், விஜயாவை திட்டி வெளியே போக சொன்னார்கள். அந்த சமயம் ரோகினி, மனோஜை வெளியில் எடுப்பதற்கு போராடுவது போலவே நடித்து டிராமா பண்ணுகிறார். இதையெல்லாம் பார்த்து விஜயாவிற்கு கோபம் தான் வந்தது. அதற்குப்பின் வக்கீல், பைனான்சியர் கேஸை வாபஸ் வாங்கினால் தான் இந்த பிரச்சனை முடியும். இல்லையென்றால் ரொம்பவே கஷ்டம் என்றார். இன்னொரு பக்கம் சிந்தாமணி, முத்து- மீனாவை பழிவாங்கி விட்டதாக நினைத்து ரொம்பவே சந்தோஷப்பட்டு கொண்டிருந்தார்.
சிறகடிக்க ஆசை:
அப்போது வந்த மீனா, என் குடும்பத்தை எதுவும் செய்யாதே. உனக்கும் எனக்கும் தான் பிரச்சனை என்றார். சிந்தாமணி, பைனான்சியர் என்னுடைய ஆள் தான். நான் சொல்லி தான் கேஸ் கொடுத்தார். உன் வீடு எனக்கு வேணும். அந்த வீட்டை உங்களுக்கு கிடைக்க விட மாட்டேன். நான் உன் மாமியாரோட பழகினதே அந்த வீட்டை ஆட்டைய போட தான். நான் பூ வியாபாரம் மட்டும் நடத்தவில்லை. பிரச்சனை இருக்கும் வீட்டை என் வசம் கொண்டு வந்து அதை கோடிக்கணக்கில் விற்பேன். உங்கள் வீட்டோட மதிப்பு கோடி கணக்கில் போகும் என்று எல்லா உண்மையும் சொல்லி விட்டார். இதனால் மீனா, அந்த பைனான்சியர் இந்த கேசை வாபஸ் வாங்க வைக்கிறேன். ஒழுங்கு மரியாதையாக என் குடும்பத்தை விட்டு விலகி இரு என்று சவால் விட்டார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பைனான்சியரை சந்தித்த ரோகினி ரொம்பவே எமோஷனலாக அழுது மனோஜை வெளியே விட சொல்லி கேட்கிறார். பைனான்சியர் முடியாது என்று சொல்கிறார். பின் ரோகிணி, சிந்தாமணி இடம் பேசி பாருங்கள் என்கிறார். பைனான்சியர் சிந்தாமணியிடம் போன் செய்து ரோகினி வந்த விஷயத்தை சொல்கிறார். சிந்தாமணி, முடிந்த வரை அவளிடம் பணம் வாங்கிக்கொள் என்று சொல்கிறார். பைனான்சியர், உன் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. நான் கேட்கும் பணத்தை கொடுத்தால் மனோஜின் மீது இருக்கும் கேசை வாபஸ் வாங்குகிறேன் என்று சொல்கிறார். ரோகிணியுமே பைனான்ஸ் சொல்லும் கண்டிஷனுக்கு எல்லாம் ஒத்துக்கொள்கிறார்.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் வீட்டில் அண்ணாமலை ரொம்பவே மன உளைச்சலில் இருக்கிறார். முத்து, வக்கீல் உங்களிடம் கையெழுத்து வாங்கி வர சொல்லியிருக்கிறார் என்கிறார். அண்ணாமலையுமே வேதனையுடன் போடுகிறார். பின் சிந்தாமணியின் மோசமான செயலை எல்லாம் மீனா சொல்கிறார். விஜயா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். இன்னொரு பக்கம் கிறிஸ் பெரியப்பாவை சந்தித்து ரோகினி உதவி கேட்கிறார். அவர்களுமே தங்களால் முடிந்த 5 லட்சம் ரூபாய் பணத்தை கொடுக்கிறார்கள்.

பின் முத்து- மீனா சிந்தாமணிக்கு எதிராக ஆதாரங்களை எல்லாம் திரட்டிக் கொண்டிருக்கிறார். இதை அறிந்த சிந்தாமணி ரொம்பவே பயந்து இருக்கிறார். அந்த சமயம் வந்த ரோகினி, ஐந்து லட்சம் பணத்தை ரெடி பண்ண விஷயத்தை சிந்தாமணி இடம் சொல்கிறார். சிந்தாமணி, மீனாவின் மூலம் மனோஜ் வெளியே வரக்கூடாது. ரோகினி மூலம் வந்தால் தான் நமக்கு நினைத்தது நடக்கும் என்கிறார். பின் பைனான்சியருக்கு போன் செய்த சிந்தாமணி கேஸை வாபஸ் வாங்க சொல்கிறார்.






