விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் விஜயா, ரோகினி சம்மந்தப்பட்ட போட்டோவை எல்லாம் எடுத்து மனோஜிடம் சொல்லி எரிக்க சொன்னார். அந்த சமயம் பார்த்து பைனான்சியர் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் எல்லோருமே ஷாக் ஆனார். அப்போது பைனான்சியர், மனோஜ் ஒன்னுத்துக்கும் லாகில்லாதவன். நான் ரோகினியை நம்பி தான் பணத்தை இருந்தேன். இனிமேல் மனோஜ் பணத்திற்கு யார் கேரன்டி கொடுப்பது என்றார். கோபத்தில் விஜயா, மனோஜ் பணம் கொடுக்கவில்லை என்றால் அதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்றார்.
வீட்டில் எல்லோரும் தடுத்தும் விஜயா கேட்கவில்லை.

பைனான்சியர், சிந்தாமணிக்கு போன் செய்து முத்து வீட்டில் நடந்தது எல்லாம் சொன்னார். சிந்தாமணி இதுதான் சந்தர்ப்பம் என்று விஜயாவின் வீட்டை எழுதி வாங்குவதற்கு திட்டம் போட்டார். அதற்குப்பின் ரோகிணி இடம் சிந்தாமணி, உன்னுடைய மாமியார் விவாகரத்திற்கு ஏற்பாடு செய்கிறார் என்றார். இதை கேட்டு ரோகினிக்கு பயங்கர கோபம் வந்தது. இன்னொரு பக்கம் பார்வதியை சந்தித்த விஜயா, மனோஜ்க்கு விவாகரத்து வாங்குவதை பற்றி பேசிக் கொண்டிருந்தார். பின் மனோஜ் வாங்கிய கடனை அடைக்க வேண்டும் என்று புலம்பி கொண்டிருந்தார். அந்த சமயம் வந்த சிந்தாமணி, எனக்கு தெரிந்த பைனான்சியர் மூலம் பிரச்சனை முடிக்கலாம். அவருக்கு அடமானம் போட பொருள் வேண்டும் என்றார்.
சிறகடிக்க ஆசை:
அதற்கு விஜயா, வீட்டைத் தவிர வேறு எதுவும் இல்லை என்றார். இன்னொரு பக்கம் சத்யா நண்பர், முத்து காரில் இருந்து பிரேக் ஒயர் கட் பண்ணது சிட்டி தான். அதை ரோகிணி தான் செய்ய சொன்னார் என்று நடந்ததை எல்லாம் சொன்னார். இதை சத்யா, மீனா- முத்துவிடம் சொல்லிவிட்டார். முத்து வீட்டில் உள்ள எல்லோரிடமும் சொல்லி ரோகினி மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுப்பதாக சொன்னார். அந்த சமயம் வந்த வித்யா, ரோகினி சேர்ந்த எல்லா சதி வேலைகளையும் புட்டு புட்டு வைத்தார். இதைக் கேட்டு விஜயாவிற்கு தலை சுற்றுகிறது. மனோஜ், போலீசில் புகார் கொடுக்க இருந்தார். உடனே அண்ணாமலை, நான் ஒரு முடிவெடுத்திருக்கிறேன். ரோகினி இந்த வீட்டு மருமகள் கிடையாது. மனோஜ்க்கு விவாகரத்து வாங்கி கொடுப்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்றார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜயா, மனோஜ் இருவரும் சேர்ந்து ரோகிணிக்கு விவாகரத்து கொடுப்பதற்காக வக்கீலை சந்தித்து பேசுகிறார்கள். வக்கீல், ரோகினிக்கு விவாகரத்து நோட்டீஸ் சம்மந்தமாக மெயில் அனுப்புகிறார். இன்னொரு பக்கம் மீனாவின் தோழிகள், ரோகினி செய்த வேலையை சொல்லி திட்டிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் வக்கீல் நோட்டீஸ் வந்ததை பார்த்து ரோகினி ஷாக் ஆகிறார். அதற்குப்பின் ரோகினி, கிருஷை பள்ளியில் விட்டு வருகிறார். அப்போது மீனாவின் தோழிகள் ரோகினியை வண்டிக்குள் ஏற்றி அடி அடி என்று துவைக்கிறார்கள். இவர்களுக்கு சத்யா உதவி செய்கிறார். பின் ரோகினியை, முத்து,மீனா இருக்கும் இடத்திற்கு அழைத்து வருகிறார்கள்.

சீரியல் ட்ராக்:
அதை பார்த்து முத்து-மீனா இருவருக்குமே ஷாக் ஆகிறது. எதற்காக இப்படி செய்தீர்கள் என்று இருவரும் கேட்கிறார்கள். அதற்கு மீனாவின் தோழிகள், உங்களுக்கு செய்த துரோகத்திற்கு இதெல்லாம் குறைவு. இவர்களை சும்மா விடக்கூடாது. நீங்களும் அடியுங்கள் என்று சொல்கிறார். பின் மீனா, தன்னுடைய தோழிகளை திட்டுகிறார். இருந்தாலும் ரோகினி, மீனா- முத்துவின் மீது தான் பயங்கரமாக கோபப்படுகிறார். பின் மனோஜ் கடைக்கு சென்ற ரோகினி, முத்து-மீனா செய்ததை சொல்லி அழுகிறார். உடனே கோபத்தில் மனோஜ், ரோகினியை திட்டி அனுப்பி விடுகிறார். பின் வீட்டிற்கு வந்த மனோஜ், முத்து-மீனா செய்த வேலையை அண்ணாமலையிடம் சொல்கிறார். மீனா, நாங்கள் அடிக்கவில்லை. இதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று சொல்கிறார்.






