விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் மீனா, மண்டபத்தில் நடந்ததை தன்னுடைய அம்மாவிடம் சொல்லி வருத்தப்பட்டார். உடனே அவர் தம்பி, எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் வா என்று மீனாவை தனக்கு தெரிந்த போலீஸ் இடம் அழைத்து சென்றார். பின் அவரிடம் மீனா நடந்ததை சொல்ல, அவர் பத்திரத்தில் என்ன இருக்கோ அதுதான் கோர்ட் ஏற்றுக்கொள்ளும். இதை வைத்து ஒன்னும் செய்ய முடியாது என்றார். இதனால் மீனா இன்னும் மனமடைந்து விட்டார். அந்த சமயம் பார்த்து போன் செய்த முத்து, பணம் எல்லோருக்கும் கொடுத்து விட்டாயா? எல்லா வேலையும் முடிந்து விட்டதா? என்று கேட்க, உள்ளுக்குள் வேதனையை வைத்துக்கொண்டு வெளியில் காண்பிக்காமல் மீனா பேசி இருந்தார்.

அதற்குப்பின் வீட்டிற்கு வந்த மீனாவிடம் விஜயா, ஏன் சமைக்கவில்லை? எங்கே போய் ஊர் சுற்றுகிறாய்? என்று வழக்கம்போல் அவரை சண்டை போட்டார். மீனா, எனக்கு மனசு சரியில்லை என்று சொல்ல, விஜயா கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். உடனே மீனா, சிந்தாமணி எதுவும் சொல்லவில்லையா? அவரிடம் தெரிந்து கொள்ளுங்கள் என்று கோபப்பட்டார். அப்போது அண்ணாமலை வீட்டிற்கு வந்தார். அவர், கடைக்காரன் என்னை ஏமாற்றி விட்டான். நான் அவன் வழியிலேயே ஏமாற்றி விட்டேன் என்று சொன்னவுடன் மீனாவும் இதுதான் சரியான வழி. அந்த மேனேஜருக்கு பாடம் புகட்டனும் என்று நினைத்தார்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் மீனா, சிந்தாமணிக்கு பாடம் புகூட்ட வேண்டும் என்று யோசித்தார். அப்போது அவர், சீதாவிடம் சிந்தாமணிக்கு போன் செய்து மண்டபத்திற்கு டெக்ரேசன் ஒர்க் பண்ண வேண்டும் என்று செய்ய சொன்னார். சீதா, மீனா சொன்னது போலவே பேசியதால் சிந்தாமணி ஒத்துக் கொண்டார். பின் அவர் பேசியதை ரெக்கார்ட் செய்து அதை ஸ்ருதி இடம் போட்டு காண்பித்து சிந்தாமணி குரலில் மேனேஜரிடம் பேச சொன்னார் மீனா. சுருதியும் சிந்தாமணி போலவே பேசி அந்த மேனேஜரை பொன்னியம்மன் கோயிலுக்கு பணத்தோடு வரவைத்தார்.

நேற்று எபிசோட்:
அதற்குப்பின் சீதா, சிந்தாமணிக்கு போன் செய்து பொன்னியம்மன் கோயிலுக்கு வரவைத்தார். இதற்கிடையில் அந்த மண்டபத்தின் ஓனரையும் அந்த கோயிலுக்கு மீனா வரவைத்தார். பின் கோயிலுக்கு வந்த மேனேஜர்- சிந்தாமணி இருவருமே மீனா ஏமாந்து போனதை பற்றி பேசி சிரித்தார்கள். இதை மீனா, மண்டபத்தின் ஓனர் எல்லோருமே பார்த்து விட்டார்கள். உடனே கோபத்தில் அந்த ஓனர், மேனேஜரை வெளுத்து வாங்கி திட்டி இருந்தார். அதோடு சிந்தாமணியையும் திட்டினார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மண்டபத்தின் ஓனர் பணத்தை மேனேஜரிடம் வாங்கி மீனாவிடம் கொடுத்துவிடுகிறார். பின் அவர், இனிமேல் இந்த மண்டபத்தின் பக்கமே உன்னையும், சிந்தாமணியும் பார்க்க கூடாது என்று திட்டி விடுகிறார். அதற்கு பின் இனிமேல் என்னுடைய மண்டபத்திற்கு வரும் எல்லா ஆர்டருக்கும் உனக்குதாம்மா என்று சொன்னார். சந்தோஷத்தில் மீனா அங்கிருந்து கிளம்புகிறார். அதற்குப்பின் பணம் வட்டிக்கு வாங்கிய பைனான்சியரை சந்தித்து நடந்ததை சொல்லி பணத்தை கொடுத்து விடுகிறார். பைனான்சியர், இனி உனக்கு எந்த உதவி என்றாலும் என்னிடம் கேளுமா என்று சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் முத்துவிற்கு ஃபோன் செய்த மீனா, நடந்ததை எல்லாம் சொல்ல, அவர் ரொம்பவே ஷாக் ஆனார். உடனே முத்து, எனக்கும் சவாரி முடிந்துவிட்டது, நானும் வருகிறேன் என்று சொல்கிறார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த முத்து, மீனாவிற்கு மாலை அணிவித்து அவர் செய்த சாகசத்தை வீட்டில் சொல்கிறார். இதைக் கேட்டவுடன் விஜயா ஷாக் ஆகிறார். மனோஜ் வழக்கம்போல முத்து,மீனாவை நக்கல் அடித்து பேசுகிறார். ஆனால், அண்ணாமலை திட்டி விடுகிறார். அதற்குப்பின் எல்லோருக்கும் முத்து ஸ்வீட் கொடுக்கிறார்கள். விஜயா மட்டும் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






