விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் லட்சுமி, கிரிஸ் இருவரும் வந்து கொண்டிருந்தார்கள். அப்போது லட்சுமி, மீனாவிற்கு தெரிந்த உண்மை மொத்த வீட்டிற்கு தெரிந்தால் ரோகினி நிலைமை என்ன ஆகுமோ? என்று தன் மகளைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து முத்து அங்கு வந்து விட்டார். பின் முத்து, எப்ப வந்தீர்கள் என்றெல்லாம் விசாரிக்கிறார். அதற்கு லட்சுமி, என் கணவருக்கு திதி கொடுக்கணும் என்றார்.

முத்து, லட்சுமி- கிரிஷ் இருவரையும் வீட்டில் அழைத்தார். முடிந்தவரை லட்சுமி முடியாது என்றார். இருந்தாலுமே முத்து கேட்கவில்லை. அவர்கள் இருவரையும் வீட்டிற்கு அழைத்து வந்தார். இன்னொரு பக்கம் மீனா கோபத்தில் இருந்தார். ரோகினியிடம் உண்மையை சொல்ல சொன்னார். ரோகினி, நேரம் வரும்போது சொல்கிறேன். தயவு செய்து அமைதியாக இருங்கள் என்று கெஞ்சினார். அந்த சமயம் பார்த்து லக்ஷ்மி, கிரிஷ் இருவரையும் முத்து வீட்டில் அழைத்து வந்தார். இதை பார்த்து ரோகிணி ரொம்பவே பயந்து விட்டார்.
சிறகடிக்க ஆசை:
மீனாவிற்கு அவர்களை பார்த்தவுடன் இன்னும் கோபம் அதிகமானது. பின் அண்ணாமலை, பாட்டி எல்லோருமே அவர்களை வரவேற்றார்கள். அதற்குப்பின் வீட்டில் உள்ள எல்லோருமே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். சாப்பிடும் போது மனோஜ், முட்டையை சோத்தில் மறைத்து வைத்துவிட்டு எனக்கு முட்டை வைக்கவில்லை என்றார். உடனே, கிரிஷ் உண்மையை சொன்னார். இதனால் அண்ணாமலை, பாட்டி திட்டிக் கொண்டிருந்தார்கள். முத்து, இந்த வீட்டிலேயே பொய் சொல்லி மறைப்பது மனோஜ் தான் என்றார். இதையெல்லாம் கேட்டு ரோகிணி உள்ளுக்குள்ளே ரொம்பவே பதறிக் கொண்டு இருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தீபாவளி பண்டிகை முடிந்து எல்லோரும் வீட்டிற்கு வந்துவிடுகிறார்கள். அப்போது ரோகினி, தயவு செய்து உண்மையை வீட்டில் சொல்லாதீர்கள். எங்கள் ரெண்டு பேருடைய உயிர் உங்கள் கையில் தான் இருக்கிறது என்றெல்லாம் சொல்கிறார். இதை கேட்டு மீனாவிற்கு பயங்கர கோபம் வருகிறது. ரோகினியை திட்டி விடுகிறார். இன்னொரு பக்கம் பார்வதி-சிவன் இருவரும் சேர்ந்து குழந்தைகளுக்கு கதை சொல்லும் வீடியோவை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதை பார்த்து விஜயாவிற்கு பயங்கர கோபம் வருகிறது. அப்போது சிவன், நம்முடைய வீடியோ மக்கள் மத்தியில் நல்ல பிரபலமாகி இருக்கிறது என்று கேக் வெட்டி கொண்டாடுகிறார். அந்த சமயம் பார்த்து சிந்தாமணி தன்னுடைய மகளை அழைத்துக் கொண்டு வருகிறார்.

சீரியல் ட்ராக்:
சிந்தாமணியின் மகள் ரேகா எல்லோரைப் பற்றியும் தெரிந்து வைத்துக் கொண்டு நல்ல சகஜமாக பேசிக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் மீனா, வீட்டில் உண்மையை சொல்ல முடியாமல் குற்ற உணர்ச்சியில் தவித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அவருடைய மனசாட்சி, ரோகிணி பொய் சொல்லி நடமாடுகிறார். நீ எல்லோரிடமும் சொல்லு உண்மை தெரிந்தால் உன்னையும் தான் தப்பாக நினைப்பார்கள் என்று அவருடைய உண்மையை சொல் என்று சொல்லிக் கொண்டிருக்கிறது. இதைக் கேட்டு மீனாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. ரொம்பவே குழம்பிப் போயிருக்கிறார். இன்னொரு பக்கம் தங்களுடைய புதிய ஆர்டர் வாங்குவதற்காக
ரோகிணி- மனோஜ் இருவருமே கம்பெனிக்கு சென்றிருக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.






