விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் ரோகினி, கடையில் வியபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது பொருள் வாங்க வந்த பெண்ணை பார்த்து மனோஜ் ஜொள்ளு விட, இதெல்லாம் பார்த்து ரோகினிக்கு பயங்கர கோவம் வந்தது. அந்த சமயம் பார்த்து கிரிஷ் பாட்டி, ரோகினிக்கு போன் செய்து பள்ளியில் பேரன்ட்ஸ் மீட்டிங் இருப்பதை பற்றி சொன்னார். ரோகினியும், நீங்க பார்த்துக் கொள்ளலாம் என்றார். அதற்குப்பின் மீனாவிற்கு முத்து வண்டி ஓட்டுவதை சொல்லிக் கொடுத்திருந்தார். அங்கு வந்த மீனாவின் தோழிகள் அதை பார்த்து பெருமையாக முத்து-மீனாவை பற்றி பேசி இருந்தார்கள்.

அருண், மார்க்கெட்டில் காய் வாங்கிக் கொண்டிருந்தார். அதை பார்த்த முத்து, அவரிடம் வம்பு வாங்க சோசியல் மீடியாவில் வீடியோ போட்ட விஷயத்தை சொன்னவுடன் அருண் பயங்கரமாக கோபப்பட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாகி கைதடி அளவிற்கு சண்டை ஆனது. அப்போது அருண் எதிர்பாராத விதமாக கீழே விழ போனார். முத்து பிடிக்க போய் அவர் சட்டை பாக்கெட் கிழிந்து விட்டது. இதை அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் பார்த்து சிரித்ததால் அருணுக்கு கோபம் அதிகமானது. முத்துவின் மீது இருக்கும் பகை இன்னும் அதிகமானது.
சிறகடிக்க ஆசை:
அதன்பின் வீட்டில் மீனா எல்லோருக்கும் சமைத்து வைத்து இருந்தார். விஜயா டயட் இருப்பதாக சொல்லி யாருக்கும் தெரியாமல் சாப்பிட்டார். அதன் பின் பள்ளியில் பேரன்ஸ் மீட்டிங் இருப்பதால் அண்ணாமலை கிளம்பி இருந்தார். அதற்குப்பின் பள்ளியில் கிறிஸ், அவருடைய பாட்டியையும் பார்த்து மீனா- முத்து இருவரும் பேசினார்கள். ஆனால், கிரிஷ் பாட்டி ஏதோ காரணங்களை சொல்லி அங்கிருந்து சென்று விட்டார்.
இதனால் முத்து- மீனா ரொம்ப வருத்தப்பட்டார்கள். அதற்குப்பின் வீடியோ கால் மூலம் பேரன்ஸ் மீட்டிங் அட்டென்ட் பண்ணுவதற்காக ரோகிணி பயங்கரமாக கெட்டப் எல்லாம் போட்டார்.

கடந்த வாரம் எபிசோட்:
அப்போது க்ரிஷ் அந்த பள்ளியில் தான் படிக்கிறார் என்ற உண்மை அண்ணாமலைக்கு தெரிய வந்தது. அதற்குப்பின் வீடியோ கால் மூலம் ரோகினி டீச்சரிடம் பேசி இருந்தார். அதை அண்ணாமலை உன்னிப்பாக கவனித்தார். தன் மாமனாரிடம் மாட்டிக்கொள்வோமா? என்று ரோகினி பயப்பட்டார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் அண்ணாமலைக்கு கடைசி வரை கிரிஸ் அம்மா யார் என்று தெரியவில்லை? ஏதேதோ பேசி ரோகினி, கிரிஷ் ஆசிரியரை சமாளித்து விடுகிறார். ஆனால், இது நம்முடைய அம்மாவே இல்லையே என்று கிரிஷ் சொல்ல, அவர் பாட்டி அமைதியாக இருக்க சொல்கிறார்.

இன்றைய எபிசோட்:
அதற்குப்பின் வெளியே வந்த கிரிஷிடம் முத்து-மீனா பேசுகிறார்கள். ஆனால், கிரிஷ் பாட்டி அவர்களிடம் சரியாக பேசாமல் சென்று விடுகிறார். இதனால் மீனாவிற்கு நிறைய சந்தேகம் வருகிறது. அப்போது அவர், உங்களுடைய அண்ணன் தான் கிரிஸ் உடைய அப்பா, ஜீவா தான் அவருடைய அம்மாவாக இருக்கனும். அவர்கள் நம்மிடம் மறைக்க பார்க்கிறார்கள் என்று சொன்னவுடன் முத்துவிற்குமே சந்தேகம் ஏற்படுகிறது. அதற்குப்பின் வீட்டில் பேரன்ஸ் மீட்டிங்கில் நடந்ததை பற்றி அண்ணாமலை சொல்லிக் கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:
அப்போது முத்து, வீடியோ காலில் எதற்கு மாஸ்க் போட வேண்டும்? எதையோ மறைக்க பார்க்கிறார்கள் என்று எல்லோரும் மாத்தி மாத்தி பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் கேட்ட ரோகினிக்கு பயம் ஏற்படுகிறது. உடனே அவர், அடுத்தவர்களை பற்றி நாம் எதற்கு பேசனும் என்று அந்த இடத்தை விட்டு மனோஜை அழைத்துக் கொண்டு செல்கிறார். இதையெல்லாம் பார்த்த முத்து,மீனாவிற்கு சந்தேகம் அதிகமாகிறது. இருவரும் எப்படியாவது, கிரிஷ் பின் மறைந்து இருக்கும் ரகசியத்தை கண்டுபிடிக்கும் என்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.






