விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து-மீனா இருவருமே கதிரையும் அவர் மனைவியும் பார்த்து ஷாக் ஆகி அவர்களை மிரட்டி பணம் கேட்டார்கள். மனோஜ், ரோகினிக்கு தகவல் சொல்லி வர வைத்தார்கள். அதற்குப் பின் முத்து, போலீசுக்கு சொல்லிவிட்டார். போலீஸ் கதிர், அவர் மனைவி இருவரையும் கைது செய்தது. ரோகினி, முத்து மீது கோபப்பட்டார். பின் வீட்டிற்கு வந்த நான்கு பேருமே கதிர் விஷயத்தை சொன்னார்கள். பணம் கிடைக்கவில்லையா? என்று விஜயா கேட்க, போலீஸ் விசாரித்து சொல்வார்கள் என்றார்கள். அதற்கு ரோகினி, எல்லாத்துக்கும் முத்து-மீனா தான் காரணம். போலீசுக்கு தகவல் சொல்லவில்லை என்றால் பணத்தை வாங்கி இருக்கலாம் என்று வழக்கம்போல குறை சொன்னார்.

மனோஜ்-ரோகினி இருவரும், முத்துவால் தான் எங்களுக்கு பணம் கிடைக்கவில்லை என்று சொன்னார்கள். உடனே அண்ணாமலை, முத்து செய்தது சரிதான் என்று அவர்களுக்கு சப்போர்ட் செய்து பேசி இருந்தார். அதற்குப் பின் ரோகினிக்கு போன் செய்த மேனேஜர், எனக்கு பணம் வேண்டும், இல்லையென்றால் உன்னை பற்றிய உண்மையை வீட்டில் சொல்லி விடுவேன் என்று வழக்கம்போல மிரட்டி இருந்தார். பின் சிட்டிக்கு போன் செய்த ரோகினி, மேனேஜர் ஃபோன் செய்ததை சொன்னார். அதற்கு சிட்டி,நீங்கள் எனக்கு முத்துவின் வண்டி சாவியை எடுத்து கொடுத்தால் அந்த மேனேஜர் உங்களை தொந்தரவு செய்யாமல் பார்த்துக்கொள்கிறேன் என்றார்.
சிறகடிக்க ஆசை:
ரோகினி ஒத்துக்கொண்டார். பின் இரவு எல்லோரும் தூங்கிய பிறகு வீட்டிற்கு வந்த சிட்டிவிடம் ரோகினி முத்துவின் வண்டி சாவியை யாருக்கும் தெரியாமல் கொடுத்து விட்டார். பின் சிட்டி, முத்துவின் காரில் பிரச்சனை ஏற்படுமாறு செய்து வைத்தார். மறுநாள் காலையில் அண்ணாமலை அனாதை இல்லத்திற்கு தான் போடாத, தேவையில்லாத துணிகளை எல்லாம் கொடுத்தார். இதனால் வீட்டில் உள்ள மற்றவர்களுமே தங்களுடைய தேவையில்லாத துணிகளை கொடுக்க ஒத்துக் கொண்டார்கள். ஆனால், விஜயா மட்டும் முடியாது என்றார்.

நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் சிட்டி, நான் முத்து காரின் பிரேக் ஒயரை கட் செய்து விட்டேன். அந்த கார் ஆயுள் முழுவதும் வெளியே வந்து விடும். நீங்கள் இருவரும் முத்துவின் கார் பக்கத்தில் சென்று உரசினால் போதும் வண்டி ஆக்சிடென்ட் ஆகி முத்து இறந்து விடுவான் என்று சொன்னார். இதனால் முத்து வண்டி எடுக்கிறானா? இல்லையா? என்று சிட்டி ஆட்கள் பார்க்கிறார்கள். இன்னொரு பக்கம் வீட்டில் சுருதி, முதன் முதலாக எல்லோருக்காகவும் உப்புமா சமைத்தார். இதனால் என்ன நடக்குமோ? என்று வீட்டில் உள்ளவர்கள் பயப்பட்டார்கள்.

சீரியல் ட்ராக்:
சமைத்து முடித்த சுருதி, எல்லோருக்குமே பரிமாறி இருந்தார். சுருதி சமைத்த சாப்பாடு தட்டிலே விழவில்லை. தட்டி தட்டி சாப்பாடு போட்டார் சுருதி. அதோடு யாராலும் அந்த உப்புமாவை சாப்பிட முடியவில்லை. இருந்தாலுமே ஸ்ருதி ஆசையாக சமைத்ததால் நன்றாக இருந்தது என்று பாராட்டி இருந்தார்கள். பின் சுருதி, தான் சமைத்ததை சாப்பிட்டு பார்த்து. நன்றாக இல்லை என்கிறார். இருந்தாலும் அண்ணாமலை சப்போராட்டாக பேசியதற்கு சுருதி சந்தோசப்பட்டார்கள். அதற்கு பின் முத்து, சவாரிக்கு கிளம்பும்போது காரின் மீது முட்டை சைக்கிள் மோதி விட்டது.
https://www.youtube.com/watch?v=A0mzBOfowJY
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் முத்து, கார் ஓட்டி செல்லும்போது பிரேக் பிடிக்கவில்லை. என்ன செய்வது என்று புரியாமல் முத்து ரொம்பவே பதறுகிறார். காரின் எதிரிலேயே நிறைய வண்டிகளும், குழந்தைகள், ஆட்களும் நடமாடுவதால் முத்து காரை தடுமாறி ஒட்டி செல்கிறார். ஒரு கட்டத்தில் முத்து ஒரு பைக்கின் மீது மோதி காரை ஒரு வழியாக நிறுத்தி விடுகிறார். பின் அந்த இடத்தில் அருண் இருப்பதை பார்க்கிறார். இனி அடுத்து என்ன? என்ற பரபரப்பில் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.






