விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் எலியை பிடிப்பதற்காக எலி கூண்டை வைத்துக்கொண்டு இரவு முழுக்க மனோஜ் சுற்றிக் கொண்டிருந்தார். இதையெல்லாம் அறிந்த சிந்தாமணி, ரோகினியை வரவைத்து விஜயா குடும்பத்தை பற்றி சொன்னார். மனோஜை உன் வசம் கொண்டு வர இதுதான் சந்தர்ப்பம். என்றார். ரோகினியும் மனோஜை தன் வீட்டில் தங்க வைப்பதற்காக யோசித்தார். இன்னொரு பக்கம் முத்து- மீனா இருவரும் எப்படியாவது வீட்டை மீட்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.

ரோகிணி, மனோஜை சந்தித்து பேசி இருந்தார். மனோஜ், ஷோரூமில் தூங்க முடியாமல் கஷ்டப்படுவதை எல்லாம் சொல்லி புலம்பினார். ரோகினி, நான் இருக்கிறேன் கவலைப்படாதே என்று மனோஜை தன் பக்கம் இழுக்க பார்த்தார். இன்னொரு பக்கம் ஸ்ருதியின் ஓட்டலில் முத்து-மீனா எல்லோருமே வீட்டை விற்பதை பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது வந்த ஸ்வேதா, பெரிப்பா பெரியம்மா இருவரும் என் வீட்டில் தங்கி கொள்ளட்டும். நான் 5 லட்சம் ரூபாய் பணம் தருகிறேன் என்றார். முத்து, உன்னுடைய நல்ல மனதிற்கு ரொம்ப நன்றி. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றார்.
சிறகடிக்க ஆசை:
அதற்குப்பின் ஸ்ருதியின் அம்மா, தனக்கு வேலை இருப்பதாக சொல்லி வீட்டில் உள்ள எல்லா ரூம்களையும் பூட்டிவிட்டு விஜயா இருக்கும் ரூமை மட்டும் பூட்டாமல் சென்றார். இதையெல்லாம் பார்த்து விஜயாவிற்கு கடுப்பானது. பின் பார்வதிக்கு போன் செய்த விஜயா, எனக்கு இங்கு இருக்கவே பிடிக்கவில்லை. நான் உன்னுடைய வீட்டிற்கு வருகிறேன் என்றார். பார்வதி, நீ என்னுடைய வீட்டிற்கு வருவதாக இருந்தால் அண்ணாமலை அண்ணாவையும் அலைத்துக் கொண்டு வா. அண்ணாமலை அண்ணா இருக்கும் இடத்திற்கு போ என்றார். இதனால் விஜயாவுக்கு இன்னும் கோபம் அதிகமாகின்றது.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜயா, ஸ்ருதியின் வீட்டில் மரியாதை இல்லாமல் நடத்துவதால் ரொம்ப வேதனையோடும் கவலையோடும் இருக்கிறார். பின் தன் கணவர் அண்ணாமலைக்கு போன் செய்து விஜயா அக்கறையுடன் விசாரிக்கிறார். அண்ணாமலையும் பதிலுக்கு விசாரிக்கிறார். விஜயா, உண்மையை சொல்லாமல் நான் ரொம்ப சந்தோசமாக இருக்கிறேன் என்று பொய் சொல்லி விடுகிறார். அதற்குப்பின்
முத்து-மீனா இருவரும் இங்கிலீஷ் கற்றுக்கொள்வதற்காக கிளாஸுக்கு செல்வதாக அண்ணாமலை இடம் சொல்கிறார்கள். அண்ணாமலையும் சந்தோசமாக அவர்கள் இருவரையும் பாராட்டி அனுப்பி வைக்கிறார்.

சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் ஆங்கிலம் வகுப்பு நடக்கும் இடத்திற்கு முத்து-மீனா இருவரும் சென்று விடுகிறார்கள். அங்கு ஸ்வேதா வருகிறார். ஸ்வேதாவை பார்த்தவுடன் முத்துவிற்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஸ்வேதா, இது என்னுடைய தோழி நடத்தும் இன்ஸ்டிடியூஷன் தான். நான் இங்கு கிளாஸ் எடுப்பேன் என்று சொல்கிறார். ஸ்வேதா, கிளாஸ் நடத்திக் கொண்டிருக்கும்போது முருகனும் வருகிறார். முருகன், என் பொண்டாட்டி தொல்லை தாங்க முடியவில்லை. வெளிநாடுகளில் வேலை இருப்பதால் ஆங்கிலம் கற்றுக் கொள் என்று என்னை இங்கு அனுப்பி விட்டால் என்று புலம்பி கொண்டிருக்கிறார்.






