விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் பைனான்சியர், பணத்தை மனோஜ் மாதம் கொடுக்க வேண்டும். அதற்கு ரோகினி- மனோஜ் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று சொல்லி பத்திரத்தில் கையெழுத்து போட சொன்னார். பைனான்சியர். மனோஜ், அமைதியாகவே தயங்கி நிற்பதால் விஜயாவே திட்டி கையெழுத்து போட சொன்னார். அதற்கு பின் பைனான்சியர் அங்கிருந்து சென்று விட்டார். அதற்குப்பின் ரோகினி- மனோஜ் இருவரும் பிசினஸை எப்படியாவது டெவலப் செய்து கடனை எல்லாம் அடைக்க வேண்டும் என்றார்கள்.

ரோகிணி, இப்போது இருக்கும் தொழிலை டெவலப் செய்தால் போதும் என்று ஆறுதல் சொல்லி தைரியப்படுத்தினார். அதற்குப்பின் கிரிஷ், ஸ்கூலில் பீஸ் கட்ட சொல்லி லெட்டர் கொடுத்திருந்தார். அதை பார்த்து முத்து, நான் கட்டுகிறேன் என்றார். கிரிஷ் கேட்டுக் கொண்டதால் ரோகிணி, மனோஜை கட்ட சொல்கிறார். உடனே விஜயா திட்டினார். பின் ஒரு வழியாக முத்து பணத்தை கட்ட ஒத்துக் கொண்டார். அதற்கு பின் அண்ணாமலை, தன் அம்மாவை இழந்த சோகம் கிரிஷ் முகத்தில் கொஞ்சம் கூட இல்லை. கிரிஸ் பாட்டி, எதற்காக கிரிஷை இங்கு விடணும். ஏதோ மர்மம் இருக்கிறது. அதை கண்டுபிடிக்கணும் என்றார்.
சிறகடிக்க ஆசை:
இன்றைய எபிசோட்டில் முத்து. அண்ணாமலை இருவரும் கிரிஷ் மீது சந்தேகப்படுவதால் மர்மத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள். இதை அறிந்த மீனா, ரோகினியை மாடிக்கு அழைத்து பேசுகிறார். அப்போது மீனா, இனிமேல் உண்மையை மறக்க முடியாது. மாமாவிற்கும் என் கணவருக்கும் சந்தேகம் வந்துவிட்டது. இன்னும் ஒரு வாரத்திற்குள் நீ உண்மையை சொல்ல வேண்டும். இல்லை என்றால் நானே வீட்டில் சொல்லி விடுவேன். என்னால் இனிமேல் நடிக்க முடியாது என்று சொல்கிறார். ரோகினி எவ்வளவோ கெஞ்சி கேட்டுமே மீனா ஒற்றுக்கொள்ளவில்லை. 7 நாள் கெடு என்று சொல்லிவிட்டு மீனா செல்கிறார்.

சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் மீனா, நான் கிரிஷ் பாட்டியிடம் பேசி இருக்கிறேன். ஏழு நாட்களுக்குள் வந்து எல்லா விஷயத்தையும் சொல்வதாக சொன்னார். நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள் என்று தன்னுடைய மாமனாரிடமும் சொல்கிறார். அதற்கு பின் மீனா அம்மாவிற்கு பிறந்தநாள் என்பது வீட்டில் அலங்காரம் செய்து வைத்திருக்கிறார்கள். சீதா அருண் இருவரும் வீட்டிற்கு வருகிறார்கள். பின் எல்லோருமே சேர்ந்து மீனா அம்மாவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடுகிறார்கள். அந்த சமயம் மீனாவிற்கு போன் செய்த மகேஸ்வரி, வீட்டில் ரோகிணி பற்றி உண்மை சொல்லாதீர்கள். வேறு ஏதாவது செய்யலாம் என்று ஏதேதோ பேசி கெஞ்சுகிறார். ஆனால், மீனா தன்னுடைய முடிவிலிருந்து மாறவில்லை உறுதியாக இருக்கிறார். இதனால் ரோகிணி என்ன செய்வது என்று புரியாமல் பயப்படுகிறார்.
https://www.youtube.com/watch?v=EezElAXklVo
சீரியல் ப்ரோமோ:
இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் முத்து, கிரிஷின் பெரியம்மா, பெரியப்பாவை சந்தித்து பேசுகிறார். பின் அவர்களை தன் காரில் முத்து சவாரிக்கு அழைத்து செல்கிறார். அப்போது ஒரு போட்டோ கடையில் கிரிஷ் பெரியம்மா, பெரியப்பா இருவரும் ரோகிணி, அவர் கணவரின் புகைப்படத்தை எல்லாம் பிரேம் போட சொல்லி கொடுக்கிறார்கள்.. இதை பார்த்து முத்து ஷாக் ஆகிறார். பின் இதைப்பற்றி முத்து அவர்களிடம் விசாரிக்கிறார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த முத்து வீட்டிற்கு வந்து பயங்கரமாக கருதுகிறார்.






