விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் ஸ்ருதி- ரவி இருவரும் தங்களுடைய முதல் திருமண நாளை சிறப்பாக கொண்டாட பங்க்ஷன் ஒன்று ஏற்பாடு செய்திருந்தார்கள். பின் முத்து, தன்னுடைய மொபைலை வித்யாவிடம் காண்பித்து விசாரித்தார். உஷாரான வித்யா, ஏதேதோ காரணங்களை சொல்லி சமாளித்தார். ஆனால், முத்துவும் விடாமல் உண்மையை வர வைக்க பேசி இருந்தார். ஆனால், வித்யா தெளிவாக பொய் சொன்னார். இதனால ஏமாற்றத்துடன் வீட்டிற்கு வந்த முத்து, நடந்ததை மீனாவிடம் சொல்ல, ரோகினிக்கு ஒரே சந்தோஷம். பின் ரோகினி, தன்னுடைய தோழியை சந்தித்து நன்றி சொன்னார். அவருமே அவருக்கு ஆறுதல் சொன்ன உடன் இருவருக்கும் இடையே இருந்த சண்டை விலகி விட்டது.

மேலும், மனோஜ், ரோகினியை குச்சியால் அடித்தார். வலி தாங்க முடியாமல் ரோகினி கதறினார். ஒரு கட்டத்தில் ரோகினி பேய் பிடித்தது போல் நடித்து, என்னுடைய அப்பாவின் ஆத்மா என் உடம்பிலிருந்து சென்றுவிட்டது. நான் குணமாகிவிட்டேன் என்று சொன்னவுடன் மனோஜ் நம்பி விட்டார். இன்னொரு பக்கம் ரவி, ரெஸ்டாரண்டில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது தன்னுடைய திருமணநாளுக்கு லீவு வேண்டும் என்று தன்னுடைய ஓனரிடம் கேட்ட உடன் அவரும் சம்மதித்தார். அந்த சமயம் பார்த்து ஓனர் கீழே விழுந்ததால் அவரை தூக்கி கொண்டு வெளியில் வந்தார்.
சிறகடிக்க ஆசை:
இதை பார்த்த சுருதி பயங்கரமாக கோபப்பட்டு அங்கிருந்து சென்று விட்டார். ரவி, சுருதியை சமாதானம் செய்ய வீட்டிற்கு வந்தார் . ஆனால், சுருதி வீட்டிலேயே இல்லை. வீட்டில் உள்ள எல்லோருமே ஸ்ருதி எங்கே? என்று கேட்டதற்கு ரவி ஏதேதோ சொல்லி சமாளித்தார். இதை பார்த்து முத்துவிற்கு சந்தேகம் வந்து ரவியிடம் விசாரித்தார். ரவி எல்லா உண்மையும் சொல்லி விட்டார். உடனே முத்து-மீனா இருவரும் சுருதியை தேடி போனார்கள். மண்டபத்திற்கு வந்த அனைவரும் ஸ்ருதியை தான் விசாரித்தார்கள். ரவிக்கு என்ன சொல்வது என்று புரியாமல் சமாளித்தார்.

நேற்று எபிசோட்:
இதையெல்லாம் பார்த்த ஸ்ருதியின் அப்பா, அம்மாவிற்கு சந்தேகம் வந்தது. நேற்று எபிசோட்டில் முத்து-மீனா இருவரும் ஸ்ருதியை தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் மண்டபத்தில் சுருதி வரவில்லை என்று ரவி கவலையில் இருந்தார். எல்லோரும் சுருதி எங்கே? என்று கேட்க, ரவி திசை திருப்ப விஜயாவை நடனமாட வைத்தார். ஆனால், சுருதியின் அப்பாவிற்கு மட்டும் ரவி மீது சந்தேகமாக இருந்தது. பின் இதைப்பற்றி அவர், ரவியை அழைத்து பேச, ஏதேதோ காரணம் சொல்லி ரவி சமாளித்தார்.

இன்றைய எபிசோட்:
ஒரு வழியாக முத்து-மீனா இருவரும் சுருதி இருக்கும் இடத்திற்கு சென்று விட்டார்கள். அப்போது அவரிடம் விசாரிக்க சுருதி, இனிமேல் அவனுடன் வாழ முடியாது. நான் வக்கீலை பார்த்து விவாகரத்து கொடுக்கப் போகிறேன் என்று சொன்னவுடன் இருவருமே ஷாக் ஆனார்கள். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ஸ்ருதி, ரவியின் உடைய சுயரூபம் எனக்கு தெரிந்து விட்டது. இனி நான் அவனுடன் வாழ மாட்டேன். வக்கீலை பார்த்து விவாகரத்து வாங்க போகிறேன் என்று சொன்னவுடன் முத்துவிற்கு பயங்கர கோபம் வருகிறது. பின், மீனா ரவியின் ஹோட்டலில் நடந்த விபரத்தை சொன்னவுடன் ஸ்ருதி, தான் செய்த தவறை உணர்கிறார்.

சீரியல் ட்ராக்:
பின் மூவருமே மண்டபத்திற்கு கிளம்பி வருகிறார்கள். இன்னொரு பக்கம் மண்டபத்தில் எல்லோருமே ரவியை சூழ்ந்து கொண்டு ஸ்ருதி எங்கே? என்ன பிரச்சனை? என்று கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்கள்.
எந்த பதிலும் சொல்ல முடியாமல் ரவி திணறுகிறார். அந்த சமயம் பார்த்து ஸ்ருதி மண்டபத்திற்குள் வருகிறார். எல்லோருமே அமைதியாகிவிடுகிறார்கள். பின் நல்லபடியாக தங்களுடைய திருமண நாளை ரவி- சுருதி இருவருமே கொண்டாடுகிறார்கள். பின் அவர்கள், தங்களுக்கு துணையாக இருந்த முத்து,மினாவை பற்றி ரொம்ப பெருமையாகவும் பேசுகிறார்கள். அதற்கு பின் பாடல் நிகழ்ச்சி நடக்கிறது. இத்துடன் சீரியல் முடிகிறது.






