விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனா, நான் கிரிஷ் பாட்டியிடம் பேசி இருக்கிறேன். ஏழு நாட்களுக்குள் வந்து எல்லா விஷயத்தையும் சொல்வதாக சொன்னார். அதற்கு பின் மீனா அம்மாவிற்கு பிறந்தநாள் என்பது வீட்டில் அலங்காரம் செய்து வைத்திருந்தார்கள். சீதா அருண் இருவரும் வீட்டிற்கு வந்தார்கள். பின் எல்லோருமே சேர்ந்து மீனா அம்மாவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்கள். அந்த சமயம் மீனாவிற்கு போன் செய்த மகேஸ்வரி, வீட்டில் ரோகிணி பற்றி உண்மை சொல்லாதீர்கள். வேறு ஏதாவது செய்யலாம் என்று ஏதேதோ பேசி கெஞ்சினார். ஆனால், மீனா தன்னுடைய முடிவிலிருந்து மாறவில்லை உறுதியாக இருந்தார்.

முத்து, கிரிஷ் பெரியம்மா- பெரியப்பாவை ரோட்டில் சந்தித்து பேசி இருந்தார். அப்போது அவர்கள் போட்டோ ஷாப் போகணும் என்று சொல்வதால் முத்து அவர்களை அழைத்துக் கொண்டு போனார். அங்கு கிரிஷின் பெரியப்பா, ரோகினி போட்டோவை பிரேம் செய்வதற்கு கடையில் கொடுத்தார். அந்த போட்டோவை பார்த்து முத்து ஷாக் ஆகி விசாரித்தார். அப்போது கிரிஷ் பெரியப்பா, இவங்க என்னுடைய தம்பி வைப் கல்யாணி. இப்போ இரண்டாவது கல்யாணம் ஆகி சென்னையில்தான் இருந்தார்கள். கிரிஷ் அம்மா இவங்க தான் என்று சொல்வதால் முத்துவிற்கு தலை சுற்றுகிறது.
சிறகடிக்க ஆசை:
இன்னொரு பக்கம் ரோகினி, வீட்டில் உண்மையை சொல்ல வேண்டாம். நான் முதலில் மனோஜிடம் பேசுகிறேன். அதற்கு பிறகு வீட்டில் சொல்லலாம் என்று கெஞ்சினார். மீனா வேறு வழியில்லாமல் ரோகிணி செல்வதற்கு ஒத்துக்கொண்டார். அதற்குப்பின் கோபத்தில் வீட்டிற்கு வரும் போது முத்து, ரோகினி சொன்ன விஷயங்களை எல்லாம் நினைத்து பார்த்தார். பின் முத்து, வீட்டில் எல்லோரையும் வரவைத்தார் ரோகினி பார்த்தவுடன் முத்து, என்ன கல்யாணி என்றார். இதை கேட்டு ரோகிணி பதறிப் போனார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்து, மனோஜ் சொன்னது போல் கிரிஷ் தத்து கொடுத்து விடலாம்.
நல்ல ஐடியா தான். கிரிசை தத்து கொடுத்துவதற்கு அவருடைய உறவினர்கள் யாராவது இருக்க வேண்டும். ஆனால், அவர் அம்மா இறந்து போகவில்லை. அவர் உயிருடன் தான் இருக்கிறார். அவரை நான் பார்த்தேன். அவர் தவறான தொழில் செய்து கொண்டிருக்கிறார். அவரிடம் கிரிஷ் வளர்வதை விட நீ சொன்ன இடத்தில் வருவது நல்லது என்று சொல்கிறார். இதைக் கேட்டு ரோகினிக்கு பயங்கர கோபம் வருகிறது. முத்து மேலும் மேலும் கிரிஷின் அம்மாவை பற்றி ரொம்ப மோசமாக பேசிக் கொண்டிருக்கிறார். இதனால் கொந்தளித்த ரோகிணி, உங்களுக்கு தெரியுமா? வாய்க்கு வந்தபடி பேச தேவையில்லை.

சீரியல் ட்ராக்:
கிரிஷ் அம்மா அப்படி கிடையாது என்றெல்லாம் சொல்கிறார். முத்து, உனக்கு தெரியுமா? கிரிஷ் அம்மா ரொம்ப கேவலமானவள் என்று சொல்கிறார். கோபத்தில் ரோகினி, நீ சொல்வதெல்லாம் பொய், நான்தான் கிரிஷ் அம்மா என்று ரோகிணி என்று உண்மையை உளறி விடுகிறார். மொத்த வீடுமே ஆடிப் போகிறது. அப்போது முத்து, இவள் பெயர் கல்யாணி. கிரிஷ் உடைய பாட்டி தான் ரோகிணி உடைய அம்மா என்று எல்லா உண்மையுமே சொல்லி விடுகிறார். இதைக் கேட்டு மனோஜ், விஜயா ரொம்பவே அதிர்ச்சியில் நிற்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.






