விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அண்ணாமலைக்கு விருப்பமில்லை என்றாலும் விஜயாவின் பயத்திற்காக ஒத்துக் கொண்டார். அதற்குப்பின் முத்துவை அழைத்துக் கொண்டு பாட்டியின் வீட்டிற்கு அண்ணாமலை, விஜயா வந்தார்கள். அப்போது நடந்ததை பாட்டியிடம் விஜயா சொன்னார். பாட்டியுமே ஒத்துக் கொண்டார். ஆனால், முத்து தன்னுடைய அம்மாவை விட்டு பிரியா விருப்பம் இல்லாமல் கதறி அழுதார். இருந்தாலும் ஜோசியர் சொன்னதற்காக அங்கிருந்து விஜயா கிளம்பி விட்டார்.

முத்துவை பார்க்க அண்ணாமலை தான் அடிக்கடி வந்தார். ஆனால், ஜோசியர் சொன்னதால் விஜயா வரவே இல்லை. இதனால் முத்துவிற்கு தன் அம்மாவின் மீது கோபம் வந்தது. முத்து தன்னுடன் விளையாடும் பசங்களுடன் சண்டை போடுவதை பார்த்து விஜயா வருத்தப்பட்டார். அதற்கு பின் விஜயா, முத்துவை பற்றி கவலைப்படவே இல்லை. முத்துவும் தன் பாட்டி வீட்டில் சந்தோசமாக இருந்தார். பின் ஆறு வருடம் கழித்து முத்துவும் வளர்ந்து விட்டார். முத்துவை அழைத்து போக விஜயா, அண்ணாமலை இருவருமே பாட்டி வீட்டுக்கு வந்தார்கள்.
சிறகடிக்க ஆசை:
அப்போது முத்து, நான் பாட்டியுடன் இருக்கிறேன் வரமாட்டேன் என்று அடம் பிடித்தார். இருந்தாலுமே வலுக்கட்டாயமாக விஜயா, முத்துவை அழைத்துக் கொண்டு போனார். வீட்டில் மனோஜ் வேண்டும் என்று முத்துவை வெறுப்பேற்றி பேசிக் கொண்டிருந்தார். இதனால் கோபத்தில் முத்து தட்டை தூக்கி எறிந்து விட்டார். முத்துவிற்கு அங்கு இருக்கவே பிடிக்கவில்லை. உடனே விஜயா, முத்துவிற்கு காலில் சூடு போட்டு விட்டார். வேதனையில் முத்து தன்னுடைய பாட்டிற்கு ஃபோன் செய்து அழுது புலம்பினார்.

நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் மனோஜ் ஒவ்வொரு பிரச்சனையையும் செய்துவிட்டு அதை முத்துமேல் பழி போட்டு விட்டார். இதனால் கோபத்தில் விஜயா, என்ன என்று கூட விசாரிக்காமல் முத்துவை தான் அடித்தார். இதனால் மனோஜ் வீட்டில் மட்டுமில்லாமல் பள்ளியிலுமே படிக்கும் மாணவர்களுடன் பிரச்சனை செய்துவிட்டு முத்து மீது பழி போட்டு விட்டார். பின் பள்ளியில் தன்னைவிட அதிகமாக மதிப்பெண் எடுத்த மாணவனை மனோஜ் கல் எடுத்து அடிக்க போனார். அந்த சமயம் பார்த்து ஹெட்மாஸ்டர் தலையில் விழுந்ததால் மனோஜ் ஓடி விட்டார். முத்து தான் இதை செய்தான் என்று எல்லோரிடமும் மனோஜ் வீண் பழி சுமத்தி விட்டார். இதனால் கோபத்தில் விஜயாவுமே முத்துவை தான் அடித்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்துவை சிர்த்திருத்த பள்ளிக்கு அனுப்பப் போவதாக பள்ளிக்கூடத்தில் செல்கிறார்கள். இதை கேட்ட விஜயாவுமே எதுவும் சொல்லவில்லை அமைதியாகவே இருந்தார். பின் வீட்டில் நடந்ததை விஜயா, அண்ணாமலையிடம் சொல்கிறார். முத்து, தன்மீது எந்த தவறும் இல்லை என்று சொல்லியுமே விஜயா நம்பவில்லை. அந்த சமயம் பார்த்து சீர்திருத்த பள்ளியில் இருந்து முத்துவை அழைத்துப் போக வருகிறார்கள். முத்து போக மாட்டேன் என்று கதறுகிறார். அண்ணாமலை கெஞ்சி கேட்டுமே அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. அப்போது விஜயா, அவனை அழைத்துப் போகட்டும் விடுங்கள் என்று சொல்வதால் முத்து உடைந்து போய்விடுகிறார். இதையெல்லாம் முத்து, மீனாவிடம் சொல்லி ரொம்ப எமோஷனலாக கதறி அழுகிறார். மறுநாள் காலையில் பள்ளிக்கு அடிபட்ட அந்த சிறுவனின் அப்பா கிரிஷிடம் கேள்வி கேட்க வருகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது






