விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து, மீனா இருவரும் செல்வம் விஷயத்தைப் பற்றி சொன்னார்கள். அண்ணாமலை, எப்படியாவது செல்வத்தை அந்த பிரச்சனையில் இருந்து வெளிக்கொண்டு வா என்றார். இன்னொரு பக்கம் கிரிஸ் உடல்நிலை ரொம்ப மோசமாக இருக்கிறது. பின் ரோகிணி டாக்டரிடம் போன் செய்து சொன்னார். அப்போது கிரிஷ், முத்து- மீனா பெயரை சொல்லிக் கொண்டிருப்பதால் ரோகிணிக்கு ஒன்றுமே புரியவில்லை.

லட்சுமி, மீனா- முத்துவை பார்த்தால் கிரிஸ் உடம்பு சரி ஆகிவிடும். அவர்களிடம் பேசு என்றார். ரோகினி, தன் அம்மாவை திட்டி விட்டார் இன்னொரு பக்கம் அண்ணாமலை, வீட்டில் உள்ள எல்லோரையும் அழைத்து நான் ஒரு முடிவெடுத்திருக்கிறேன். மனோஜ் ரூமில் முத்து-மீனா தங்கிக் கொள்ளட்டும். மனோஜ் வெளியில் தூங்கட்டும் என்று சொன்னார். இதனால் விஜயா ருத்ர தாண்டவம் ஆடினார். மனோஜ், ரூம் தர முடியாது என்றார். கடைசியில் அண்ணாமலை, மனோஜை திட்டி விட்டு முத்து- மீனாவை ரூமில் தங்க சொன்னார்.
சிறகடிக்க ஆசை:
அதற்குப்பின் ஸ்ருதி ஹோட்டலுக்கு வந்த ரோகினி, கிரிஷ் உடல்நிலை சரியில்லை. அவன் முத்துவையும் உங்களையும் பார்க்கணும் என்றார். அதற்கு மீனா, எதுவாக இருந்தாலும் மாமாவிடம் கேட்டுதான் செய்தேன் என்றார். இன்னொரு பக்கம் சிந்தாமணி சந்தித்த விஜயா, மனோஜ்க்கு கல்யாணம் செய்யணும். நல்ல பொண்ணை பாருங்கள் என்றார். அதற்கு சிந்தாமணி, ரவி படித்திருக்கிறான். ஆனால், முத்து-மீனாவை பற்றி என்ன சொல்வீர்கள்? அவர்களை வீட்டை விட்டு வெளியே அனுப்புங்கள் என்றார். விஜயா, சீக்கிரத்தில் அதை செய்கிறேன் என்றார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சத்யாவின் வீட்டிற்கு வந்த ரேகா, எனக்கு உங்களை ரொம்ப பிடித்திருக்கிறது. நான் காதலிக்கிறேன், நாம் கல்யாணம் செய்து கொள்ளலாம். உங்களுடைய முடிவை சொல்லுங்கள் என்கிறார். சத்யாவிற்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. டைம் வேண்டும் என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் விஜயா- மனோஜ் இருவரும் ரூம் வேண்டும் என்று பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார்கள். இதனால் அண்ணாமலை மீண்டும் திட்டி விடுகிறார். அப்போது மீனா, ரோகினி கிருஷை பார்க்க சொன்ன விஷயத்தைப் பற்றி சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:
கொந்தளித்த விஜயா மீண்டும் மீனாவிடம் சண்டைக்கு போகிறார். அண்ணாமலை, இதில் ஏதாவது பிரச்சனை இருக்கிறது. கிரிஷை வேறு வழியில் சந்திக்கலாம். ரோகினி வீட்டிற்கு போக வேண்டாம் என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் நீத்துவை சந்திக்க சுருதியின் அப்பா- அம்மா இருவரும் போகிறார்கள். நீத்து வழக்கம் போல ரவியை காதலிப்பதாக சொல்லிக் கொண்டிருக்கிறார். கோபத்தில் ஸ்ருதியின் அப்பா, இந்த ஊரை விட்டு சென்று விடு. என் மகளின் வாழ்க்கையில் தலையிடாதே என்றெல்லாம் மிரட்டுகிறார். அதற்கு எல்லாம் பயப்படாமல் நீத்து சவால் விடுகிறார். இன்னொரு பக்கம் ரோகினியை சந்தித்த சிந்தாமணி, கிரிஷுக்கு மனோஜ் ஞாபகம் இருப்பதாக சொல்லி மனோஜை உன் பக்கம் கொண்டு வா என்றெல்லாம் சொல்கிறார்.






