விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனா, முத்து காணவில்லை என்று எல்லா இடத்திலும் தேடி விசாரித்தார். பின் தன்னுடைய தம்பி சத்யாவிற்கு ஃபோன் செய்து முத்துவை பற்றி சொல்ல, இருவருமே முத்து போகும் இடங்களுக்கு எல்லாம் சென்று விசாரித்தார்கள். இருந்தும் முத்து கிடைக்கவே இல்லை. இதனால் ரொம்பவே மனமுடைந்து மீனா வருத்தப்பட்டார். பின் வீட்டிற்கு வந்த மீனாவிடம் அண்ணாமலை விசாரிக்க, அவர் எங்கேயுமே இல்லை என்று சொன்னார். அந்த சமயம் வீட்டுக்கு வந்த முத்துவை பார்த்து அண்ணாமலை திட்டி இருந்தார்.
பின் முத்து-மீனா இருவரும் பேசி கொண்டு இருந்தார்கள். அப்போது மீனா, ஏன் சொல்லாமல் போனீர்கள்? என்று ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார். உடனே முத்து, உன்னை விட அதிகமாக சம்பாதிக்க வேண்டும். அதற்காகத்தான் சவாரிப் போயிருந்தேன் என்று சொன்னவுடன் மீனா ரொம்பவே வருத்தப்பட்டார். பின் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. அதன் பின் முத்து, மன்னிப்பும் கேட்டும் விட்டார். மனோஜ், புதிதாக வாங்கும் பங்களாவை பேசி முடித்து இருக்கிறேன். முன்பணம் கொடுக்கப் போகிறேன் என்று சொன்னவுடன் ரவி, முத்துவிற்கு சந்தேகம் வந்தது.
சிறகடிக்க ஆசை:
பங்களாவை இவ்வளவு குறைந்த விலைக்கு எப்படி தருகிறார்கள்? என்று கேட்க, ரோகினி-விஜயா இருவரும் ஏதேதோ காரணம் சொல்லி சமாளித்தார்கள். அதற்குப்பின் மனோஜ், புது பங்களாவை சுற்றிப் பார்க்கலாம் என்று சொல்ல, வீட்டில் உள்ள எல்லோரும் சம்மதித்தார்கள். அதற்குப்பின் கோவிலில் மீனா, தன்னுடைய அம்மாவிற்கு பணம் கொடுத்துவிட்டு முத்து செய்ததை பற்றி பேசிக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து மனோஜ்- ரோகினி இருவருமே கோயிலுக்கு வந்தார்கள். அப்போது ரோகினி கால் தடுத்து நிறைகுடம் கீழே விழுந்து விட்டது.
கடந்த வாரம் எபிசோட்:
இதை அபசகுணம் என்று மீனா அம்மா சொன்னார். உடனே இதை மீனா, ரோகினிடம் சொல்ல , மனோஜ் வேண்டாம் என்றார். பின் அந்த போலி ஓனர், ஒன்னுக்கு ரெண்டுக்காக ஏத்தி விட்டார். மீனா எவ்வளவு சொல்லியும் கேட்காமல் ரோகினி, பணத்தை அந்த போலி ஓனரிடம் கொடுத்தார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மீனாவிற்கு வேறொரு புதிய ஆர்டர் கிடைக்கிறது. பின் அந்த ஆர்டர் கொடுத்தவர்களை சந்தித்து பேசுகிறார். அப்போது மண்டபத்தின் மேனேஜர், இங்கு எப்போதுமே வழக்கமாக செய்பவர்கள் தான் டெக்கரேஷன் செய்யணும் என்கிறார்.
இன்றைய எபிசோட்:
அதற்கு மீனா, எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். நான் சரியாக செய்கிறேன் என்று பேசிக் கொண்டிருக்கும்போதே சிந்தாமணி அந்த இடத்திற்கு வந்து விடுகிறார். அவர் மீனாவை பார்த்து முறைக்கிறார். பின் அவர், நாங்கள் இருவரும் இந்த மண்டபத்தின் டெக்கரேஷனுக்கு தேவையான கொட்டேஷன் கொடுக்கிறோம். அதில் யாருடையது பிடித்திருக்கிறதோ அதை செய்யுங்கள் என்றார். மீனாவும், ஒத்துக்கொண்டு மும்முரமாக விலை, அளவுகள் எல்லாம் கேட்டு எழுதி கொண்டிருக்கிறார். ஆனால், சிந்தாமணி பேப்பர் படித்துக் கொண்டிருக்கிறார்.
சீரியல் ட்ராக்:
கடைசியில் மீனா கொடுத்ததை விட பாதி விலை தான் சிந்தாமணி கொடுத்திருக்கிறார். இதனால் அவர்களும் அந்த அடரை சிந்தாமணிக்கு கொடுத்து விடுகிறார்கள். பின் மீனா அங்கிருந்து அமைதியாக வந்து விடுகிறார். இன்னொரு பக்கம் புது பங்களாவை பார்க்க போவதற்காக விஜயா அலப்பறை செய்து கொண்டிருக்கிறார். ரோகினையும் தன்னுடைய கணவருடன் சேர்ந்து சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார். எல்லோரும் இரண்டு நாட்கள் தங்குவதற்கு துணி எடுத்து வைத்து இருக்கிறார்கள். மீனா மட்டும் வருத்தத்தில் இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.