விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ஆங்கிலம் வகுப்பு நடக்கும் இடத்திற்கு முத்து-மீனா இருவரும் சென்று விட்டார்கள். அங்கு ஸ்வேதா வந்தார். ஸ்வேதாவை பார்த்தவுடன் முத்துவிற்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஸ்வேதா, இது என்னுடைய தோழி நடத்தும் இன்ஸ்டிடியூஷன் தான். நான் இங்கு கிளாஸ் எடுப்பேன் என்றார். ஸ்வேதா, கிளாஸ் நடத்திக் கொண்டிருக்கும்போது முருகனும் வந்தார். முருகன், என் பொண்டாட்டி தொல்லை தாங்க முடியவில்லை. வெளிநாடுகளில் வேலை இருப்பதால் ஆங்கிலம் கற்றுக் கொள் என்று என்னை இங்கு அனுப்பி விட்டால் என்று புலம்பி கொண்டிருந்தார்.

மனோஜிற்கு சாப்பாடு வாங்கிக்கொண்டு ரோகிணி வந்தார். அதை பார்த்து மனோஜ் ரொம்பவே சந்தோசப்பட்டார். பின் இருவருமே நீண்ட நாட்களுக்கு பிறகு ரொம்ப சந்தோஷமாகவும் ஜாலியாகவும் பேசிக் கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் அண்ணாமலை, மீனாவின் வீட்டில் சந்தோசமாக பேசிக் கொண்டு இருந்தார். அப்போ சத்யா சோகத்தில் இருந்தார். இதை கவனித்த முத்து, சத்யாவிடம் விசாரித்தார். அப்போது சத்யா, எங்களுடைய காதல் விவகாரம் ரேகாவின் அப்பாவிற்கு தெரிந்து விட்டதா? என்று புரியவில்லை. ரேகாவை வெளிஊருக்கு அனுப்பி வைத்திருக்கிறார் என்றார்.
சிறகடிக்க ஆசை:
முத்து, எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம். தைரியமாக இரு என்றார். இன்னொரு பக்கம் சுருதியின் அம்மா சுதாவின் வீட்டிற்கு அவருடைய நண்பர்கள் வந்திருந்தார்கள். எல்லோருமே குடித்துக்கொண்டு ஆட்டம் பாட்டம் என்றார்கள். இதை பார்த்து விஜயாவுக்கு பிடிக்கவே இல்லை. சுதா, விஜயாவை நடனமாட சொல்லி கேட்டார். சுதாவின் நண்பர்களுமே கட்டாயப்படுத்தினார்கள். ஒரு கட்டத்தில் கொந்தளித்த விஜயா, குடிகாரர்களுக்கு மத்தியில் நான் என்ன நடனமாடுபவளா? என்று திட்டிவிட்டு அங்கிருந்து சென்றார். பின் விஜயா, மனோஜ் ஷோரூமில் தங்கிக் கொள்வதாக முடிவு எடுத்து சென்று விட்டார். ரோகிணி, விஜயாவை பார்த்தவுடன் ஒளிந்து கொண்டார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ஸ்ருதி- ரவி இருவருமே விஜயாவை பற்றி கேட்கிறார்கள். அதற்கு சுதா, யாரிடமும் சொல்லவில்லை கிளம்பிவிட்டார் என்று சொல்கிறார். பின் ஸ்ருதி கேள்வி மேல் கேள்வி கேட்டதால் வீட்டில் நடந்ததை எல்லாம் சுதா சொல்கிறார். இதைக் கேட்டு ஸ்ருதி ரொம்பவே கோபப்படுகிறார். ரவி, தன் அம்மாவை நினைத்து ரொம்பவே வேதனைப்படுகிறார். அதற்குப்பின் சுருதி- ரவி இருவரும் விஜயாவை தேடி போகிறார்கள். இன்னொரு பக்கம் இங்கிலீஷ் இன்ஸ்டிடியூட்டில் முத்து- மீனா இருவரும் இருக்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:
அங்கு நடத்தும் பாடங்களை எல்லாம் கவனமாக கவனித்தும், கேள்விகளுக்கு பதில் சொல்லியும் கொண்டிருக்கிறார்கள். அந்த சமயம் பார்த்து சுருதி- ரவி இருவருமே அங்கு வருகிறார்கள். உடனே முத்து-மீனா இருவரும் என்ன நடந்தது என்று விசாரிக்கிறார்கள். அப்போது சுருதி, தன்னுடைய வீட்டில் நடந்த விஷயத்தை எல்லாம் சொல்லி விஜயா காணவில்லை என்று சொல்கிறார். மீனா, ரொம்பவே பதறுகிறார். முத்து, நாங்கள் கண்டுபிடிக்கிறோம். தைரியமாக இரு என்று ஆறுதல் சொல்கிறார். இன்னொரு பக்கம் மனோஜ், தன் அம்மாவிற்காக சமைத்து கொடுக்கிறார். விஜயா ரொம்பவே வேதனையில் இருக்கிறார்.






