விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து மீது தவறு இல்லை என்று அந்த டிராபிக் போலீசை திட்டி இருந்தார். மேலும், போலீஸ் ஸ்டேஷனில் மனோஜ், போலீஸிடம் ரகசியமாக ஒரு விஷயம் சொன்னார் . இதை கேட்டவுடன் எல்லா போலீஸ்களும் அவரை அறைந்தார்கள். பின் இதைப் பற்றி முத்து கேட்ட உடன் பயங்கரமாக கூப்பிட்டார். ஆனால், என்ன விஷயம் என்று மட்டும் சொல்லவில்லை. இன்னொரு பக்கம் ஹாஸ்பிடலில் தாத்தா, பாட்டியின் உறவினர் ஒருவர் வந்தார் அவர், மன்னிப்பு கேட்டு அவர்களை அழைத்து சென்றார்.
இதை அறிந்த முத்து சந்தோஷப்பட்டார். பின் அந்த தாத்தா, ஒரு கவரை முத்துவிடம் கொடுத்தார். பின் வீட்டிற்கு வந்த முத்து, ஹாஸ்பிடல் நடந்ததை சொன்னவுடன் அண்ணாமலை சந்தோஷப்பட்டார். பின் அந்த தாத்தா தந்த கவரை முத்து பிரித்து பார்த்தார். அதில் அவருடைய போன் இருந்தது. அதை பார்த்தவுடன் ஷாக் ஆகி தன்னுடைய தந்தையிடம் முத்து சொன்னார். இதையெல்லாம் ரோகினி ஒழிந்து நின்று கேட்டு ஷாக் ஆகி இருந்தார். பின் இதை பற்றி தன்னுடைய தோழி வித்யாவிடம் ரோகினி கேட்க, அவர் ஆரம்பத்தில் சமாளித்தார். பின் உண்மையை சொன்னார்.
சிறகடிக்க ஆசை:
இருவருக்கும் இடையே பயங்கர வாக்குவாதம் நடந்தது. ஒரு கட்டத்தில் வித்யா, ரோகினியை எதிர்த்து பேசி திட்டி விட்டார். நேற்று எபிசோட்டில் கோபத்தில் ரோகினி, வித்யாவை திட்டி விட்டு கிளம்பி விட்டார். இன்னொரு பக்கம் முத்து, தன்னுடைய போனை யார் எடுத்திருப்பார் என்று தீவிரமாக யோசித்தார். மீனாவும் தனக்கு தோன்றிய விஷயத்தை சொன்னார். அப்போது முத்து, இது ரோகினி செய்த வேலையாக இருக்கும் என்று எனக்கு சந்தேகம் அதிகமானது. ரோகினி-வித்யா இருவரின் போட்டோவை தாத்தாவிடம் காண்பித்து யார் என்று கேட்டுக்கொள்ளலாம் என்று சொன்னவுடன் மீனாவும் சரி என்றார்.
நேற்று எபிசோட்:
பின் மறுநாள் காலையில் வித்யாவின் வீட்டுக்கு சென்ற மீனா, அவரிடம் ஏதேதோ பேசி அவரின் போட்டோவை எடுத்து விட்டார். பின் இதை முத்துவிடம் கொடுத்து விட்டார் மீனா. அவரும் தாத்தா உறவினர் ஒருவருக்கு போட்டோவை அனுப்பி வைத்தார். அதன் பின் முத்து, சத்யாவிற்கு ஃபோன் செய்து சிட்டியை பற்றி விசாரிக்க, பெரிதாக எந்த குழுவும் கிடைக்கவில்லை என்றார் சத்யா. சீக்கிரமாகவே ரோகினி சுயரூபம் வெளியே வந்துவிடும், கண்டுபிடிக்கிறேன் என்று முத்து தீவிரமாக இறங்குகிறார். இன்னொரு பக்கம் வீட்டில் ரோகினி, மனோஜை தேடி இருந்தார்.
இன்றைய எபிசோட்:
அப்போது மீனா பேய் போல் வேஷம் போட்டு நிற்க, அதை பார்த்தவுடன் ரோகினி பயங்கரமாக ஷாக் ஆகி கத்தி இருந்தார். இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் பேய் ரூபத்தில் மீனா பயமுறுத்த, ரோகினி ரொம்பவே பயந்து அலறுகிறார். ஆனால், அதெல்லாம் ரோகினி கனவு. இருந்தாலுமே, ரோகினி கனவில் இருந்து வெளிவராமல் கத்தி உருண்டு புரளுகிறார். இதையெல்லாம் பார்த்து மனோஜ்க்கு பயமாகி தன்னுடைய அம்மாவிற்கு ஃபோன் செய்து ரூமுக்கு வர வைக்கிறார். அப்போதுமே ரோகினி பேய் மாதிரி தான் கத்திக் கொண்டிருக்கிறார். இதையெல்லாம் பார்த்து விஜயாவிற்கு சந்தேகம் வருகிறது. பின் அவர் ரோகினியை நார்மல் நிலைக்கு கொண்டு வந்து அவளை தூங்க வைக்கிறார்.
சீரியல் ட்ராக்:
மனோஜ் பயந்து கொண்டே தான் தூங்குகிறார். மறுநாள் காலையில் ஸ்ருதி, ரவியிடம் வேண்டுமென்றே வாக்குவாதம் செய்து சண்டை வாங்கினார். ஐயோ சாமி என்று ரவி வீட்டை விட்டு வெளியே ஓடிவிடுகிறார். இதை பார்த்த மீனா, முத்துவிடம் வம்பிழுக்கிறார். அவருக்கு ஒண்ணுமே புரியவில்லை. இன்னொரு பக்கம் வீட்டில் நடந்ததை பார்வதியிடம் விஜயா சொல்கிறார். அப்போது வந்த ரோகினியை பார்த்தவுடன் பார்வதி மிரளுகிறார். ரோகினி அப்பாவுடைய ஆத்மா தான் வந்திருக்கும் என்று சொல்லி சாமியாரை வீட்டிற்கு வர வைக்கிறார்கள். அவர், விஜயாவை பார்த்தவுடன் மொத்த கெட்ட ஆத்மா இவருடைய உடம்பில் தான் இருக்கிறது என்று சொன்னவுடன் எல்லோருமே ஷாக் ஆகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.