விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சாமியாடி மீனாவை தேடி வீட்டிற்கு வந்து விட்டார். அப்போது சாமியாடி, ரோகிணியை பார்த்து முறைத்தார். பின் மீனாவைப் பார்த்து இங்கு இருக்காதே, கிளம்பி விடு, அவளை கூட்டிட்டு போ என்றெல்லாம் சொல்லி கொண்டிருந்தார். இதனால் மீனாவிற்கு இன்னும் பயமாகிறது. பாட்டியுமே என்ன நடக்கப்போகிறதோ என்று கவலையில் இருந்தார். அதற்குப் பின் மறுநாள் காலையில் எல்லோரும் தீபாவளிக்காக தயாராகி கோவிலுக்கு சென்றார்கள். இன்னொரு பக்கம் தன்னுடைய கணவருக்கு திதி கொடுப்பதற்காக லட்சுமி, ரோகினிக்கு போன் செய்து வர வைத்தார்.

லட்சுமி, இவள் தான் என்னுடைய ஒரே மகள் கல்யாணி. அவருடைய மகன் தான் கிரிஷ் என்று ஐயரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். இதை அந்த பக்கம் வந்த மீனா கேட்டு விட்டார். பின் ரோகினி சொன்ன பழைய கதைகளை எல்லாம் நினைத்து பார்த்து மீனா சாக்கில் இருந்தார். மீனாவிற்கு எல்லா உண்மையும் தெரிந்து விட்டதை ரோகிணி பார்த்து பயப்பட்டார். பின் கோபத்தில் மீனா பளார் என்று அறைய ரோகிணி கீழே போய் விழுந்தார். ரோகினி, காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு வீட்டில் சொல்ல வேண்டாம் என்றார்
சிறகடிக்க ஆசை:
மீனா, உன்னை மாதிரி என்னால் குடும்பத்திற்கு துரோகம் செய்ய முடியாது. இவ்வளவு பொய்யா? உன்னிடம் உண்மையே இல்லையா? என்று பயங்கரமாக வெளுத்து வாங்கினார். லக்ஷ்மி தன் மகளுக்காக சப்போர்ட் செய்து பேசினார். ஆனால் மீனா அவர்களையும் திட்டி விட்டார். கடைசியில் மீனா, நான் உண்மையை வீட்டில் சொல்லத்தான் போகிறேன் என்றார். அப்போது ரோகினி, நீ உண்மையை சொன்னால் நான் செத்து விடுவேன் என்று மிரட்டினார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ரோகினி, மீனாவின் காலில் விழுந்து கெஞ்சி கதறுகிறார். ஆனால், மீனா கேட்கவே இல்லை. பின் ரோகினி-கிரிஷ் உடன் ஆற்றில் குதிக்க செல்கிறார். அப்போது லட்சுமி, நீ உண்மையை சொன்னால் என் மகளும் என் பேரனும் செத்துவிடுவார்கள் என்று சொல்கிறார். இதனால் மீனா எதுவும் சொல்லாமல் அங்கிருந்து அமைதியாக வந்து விடுகிறார். மீனா, வீட்டிலும் யாரிடமும் எந்த உண்மையையும் சொல்லவில்லை. ரோகினி பயத்தில் அமைதியாகவே இருக்கிறார். பின் கோயிலில் பூஜை நல்லபடியாக முடிந்து விடுகிறது. அந்த சமயம் வந்த சாமியாடி, உண்மை வெளிவந்துவிட்டது. ஆனால், நல்லவர் அந்த உண்மையை சொல்லப்போவதில்லை.

சீரியல் ட்ராக்:
இருந்தாலுமே நீ சீக்கிரத்தில் மாட்டிக் கொள்வாய் என்றெல்லாம் ரோகினியை பார்த்து சொல்லிக் கொண்டிருக்கிறார். இதை பார்த்து மீனாவிற்கு கோபம் அதிகமாகிறது. இன்னொரு பக்கம் லட்சுமி, கிரிஸ் இருவரும் வந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது லட்சுமி, மீனாவிற்கு தெரிந்த உண்மை மொத்த வீட்டிற்கு தெரிந்தால் ரோகினி நிலைமை என்ன ஆகுமோ? என்று தன் மகளைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து முத்து அங்கு வந்து விடுகிறார். பின் முத்து, எப்ப வந்தீர்கள் என்றெல்லாம் விசாரிக்கிறார். அதற்கு லட்சுமி, என் கணவருக்கு திதி கொடுக்கணும் என்று எல்லாம் சொல்கிறார் . இத்துடன் சீரியல் முடிகிறது






