விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் பைனான்சியரை சந்தித்த ரோகினி ரொம்பவே எமோஷனலாக அழுது மனோஜை வெளியே விட சொல்லி கேட்டார். பைனான்சியர் முடியாது என்றார். பின் ரோகிணி, சிந்தாமணி இடம் பேசி பாருங்கள் என்றார். பைனான்சியர் சிந்தாமணியிடம் போன் செய்து ரோகினி வந்த விஷயத்தை சொன்னார். சிந்தாமணி, முடிந்த வரை அவளிடம் பணம் வாங்கிக்கொள் என்றார். பைனான்சியர், உன் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. நான் கேட்கும் பணத்தை கொடுத்தால் மனோஜின் மீது இருக்கும் கேசை வாபஸ் வாங்குகிறேன் என்றார். ரோகிணியுமே பைனான்ஸ் சொல்லும் கண்டிஷனுக்கு எல்லாம் ஒத்துக்கொண்டார்.

இன்னொரு பக்கம் வீட்டில் அண்ணாமலை ரொம்பவே மன உளைச்சலில் இருந்தார். முத்து, வக்கீல் உங்களிடம் கையெழுத்து வாங்கி வர சொல்லியிருக்கிறார் என்றார். அண்ணாமலையுமே வேதனையுடன் போட்டார். பின் சிந்தாமணியின் மோசமான செயலை எல்லாம் மீனா சொன்னார். விஜயா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். இன்னொரு பக்கம் கிறிஸ் பெரியப்பாவை சந்தித்து ரோகினி உதவி கேட்டார். அவர்களுமே தங்களால் முடிந்த 5 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்தார்கள்.
சிறகடிக்க ஆசை:
பின் முத்து- மீனா சிந்தாமணிக்கு எதிராக ஆதாரங்களை எல்லாம் திரட்டிக் கொண்டிருந்தார். இதை அறிந்த சிந்தாமணி ரொம்பவே பயந்து இருந்தார். அந்த சமயம் வந்த ரோகினி, ஐந்து லட்சம் பணத்தை ரெடி பண்ண விஷயத்தை சிந்தாமணி இடம் சொன்னார். சிந்தாமணி, மீனாவின் மூலம் மனோஜ் வெளியே வரக்கூடாது. ரோகினி மூலம் வந்தால் தான் நமக்கு நினைத்தது நடக்கும் என்றார். பின் பைனான்சியருக்கு போன் செய்த சிந்தாமணி கேஸை வாபஸ் வாங்க சொன்னார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் ரோகினி பணத்தை கொண்டு போய் கொடுத்ததாலும், சிந்தாமணி சொன்னதாலும் பைனான்சியர் போலீஸ் ஸ்டேஷன் சென்று மனோஜ் மீது இருக்கும் கேசை வாபஸ் வாங்குகிறார். அதோடு ரோகினியை பெருமையாக பேசுகிறார். இதையெல்லாம் பார்த்து மனோஜ்க்கு
மனம் தடுமாறுகிறது. இதை பார்த்து முத்து- மீனா இருவரும் கோபப்படுகிறார்கள். பின் ரோகிணியின் சதி வலையில் மனோஜ் விழக்கூடாது என்று போராடுகிறார்கள். இருந்தாலுமே மனோஜ், ரோகினி செய்த செயலை நினைத்து சந்தோஷப்படுகிறார்.

சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் வீட்டிற்கு வந்த முத்து, போலீஸ் ஸ்டேஷனில் நடந்ததை எல்லாம் சொல்கிறார். ரோகினி எதற்காக இப்படி செய்யணும் என்று ஸ்ருதி-ரவி கேட்கிறார்கள். முத்து, மனோஜை தன் வலையில் விழ வைக்க தான் இப்படி எல்லாம் செய்கிறார். அதோடு இந்த புகார் கூட ரோகினி தான் கொடுத்து இருக்கனும் என்று சொல்கிறார். உடனே மனோஜ், ரோகிணி செய்த செயலை பாராட்டி பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார். அண்ணாமலைக்கு ஒன்றுமே புரியவில்லை. கோபத்தில் விஜயா, மனோஜை திட்டி அவள் மூலம் வந்த எந்த உதவியும் தேவையில்லை. அவளை பெருமையாக பேசுவதை நிறுத்து என்றெல்லாம் சொல்கிறார்.






