விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகினி, வீட்டில் உண்மையை சொல்ல வேண்டாம். நான் முதலில் மனோஜிடம் பேசுகிறேன். அதற்கு பிறகு வீட்டில் சொல்லலாம் என்று கெஞ்சினார். மீனா வேறு வழியில்லாமல் ரோகிணி செல்வதற்கு ஒத்துக்கொண்டார். அதற்குப்பின் கோபத்தில் வீட்டிற்கு வரும் போது முத்து, ரோகினி சொன்ன விஷயங்களை எல்லாம் நினைத்து பார்த்தார். பின் முத்து, வீட்டில் எல்லோரையும் வரவைத்தார் ரோகினி பார்த்தவுடன் முத்து, என்ன கல்யாணி என்றார். இதை கேட்டு ரோகிணி பதறிப் போனார்.

முத்து, மனோஜ் சொன்னது போல் கிரிஷ் தத்து கொடுத்து விடலாம். நல்ல ஐடியா தான். கிரிசை தத்து கொடுத்துவதற்கு அவருடைய உறவினர்கள் யாராவது இருக்க வேண்டும். ஆனால், அவர் அம்மா இறந்து போகவில்லை. அவர் உயிருடன் தான் இருக்கிறார். அவரை நான் பார்த்தேன். அவர் தவறான தொழில் செய்து கொண்டிருக்கிறார். அவரிடம் கிரிஷ் வளர்வதை விட நீ சொன்ன இடத்தில் வருவது நல்லது என்றார். இதைக் கேட்டு ரோகினிக்கு பயங்கர கோபம் வந்தது. முத்து மேலும் மேலும் கிரிஷின் அம்மாவை பற்றி ரொம்ப மோசமாக பேசிக் கொண்டிருந்தார். இதனால் கொந்தளித்த ரோகிணி, உங்களுக்கு தெரியுமா? வாய்க்கு வந்தபடி பேச தேவையில்லை.
சிறகடிக்க ஆசை:
கிரிஷ் அம்மா அப்படி கிடையாது என்றெல்லாம் சொன்னார். முத்து, உனக்கு தெரியுமா? கிரிஷ் அம்மா ரொம்ப கேவலமானவள் என்று சொன்னார். கோபத்தில் ரோகினி, நீ சொல்வதெல்லாம் பொய், நான்தான் கிரிஷ் அம்மா என்று ரோகிணி என்று உண்மையை உளறி விட்டார். மொத்த வீடுமே ஆடிப் போகிறது. அப்போது முத்து, இவள் பெயர் கல்யாணி. கிரிஷ் உடைய பாட்டி தான் ரோகிணி உடைய அம்மா என்று எல்லா உண்மையுமே சொல்லி விட்டார். இதைக் கேட்டு மனோஜ், விஜயா ரொம்பவே அதிர்ச்சியில் நின்றார்கள்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கிரிஷ் அம்மா ரோகினி தான் என்ற உண்மையை தெரிந்தவுடன் மொத்த வீடு கொந்தளிக்கிறது. கோபத்தின் உச்சிக்கு சென்ற விஜயா, ரோகினியை அடிக்கிறார். அண்ணாமலை வேண்டாம் என்று தடுத்து விடுகிறார். மனோஜ், ரோகினியை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். ரோகினி, போகமாட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் என்று எல்லோர் காலிலும் விழுந்து கெஞ்சுகிறார். ஆனால், விஜயா- மனோஜ் கேட்கவில்லை. ஒரு கட்டத்தில் விஜயா, அவளுடைய கழுத்தில் இருக்கும் தாலியை அறுத்தெறிந்து அவளை வெளியே அனுப்புடா என்று திட்டுகிறார்.

சீரியல் ட்ராக்:
மனோஜ், அந்த தாலியை வைத்து நான் என்ன செய்வது? ஒழுங்கு மரியாதையாக வீட்டை விட்டு வெளியே போ என்று ரோகிணி கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகிறார். ரோகினி, ரொம்ப நன்றி மீனா.எல்லா உண்மையும் முத்துவிடம் சொல்லிவிட்டீர்கள் தானே என்று செல்கிறார். இதனால் வீட்டில் உள்ள எல்லோருமே மீனா பக்கம் திரும்புகிறார்கள். முன்னாடியே உண்மை தெரியுமா என்று விஜயா, முத்து, அண்ணாமலை எல்லோரும் மாத்தி மாத்தி மீனாவை கேள்வி கேட்கிறார்கள். ஒரு கட்டத்தில் மீனா நடந்ததை எல்லாம் சொல்லி விடுகிறார். விஜயா, எல்லோரும் சேர்ந்து என் மகன் வாழ்க்கையை அழித்து விட்டீர்கள் என்று புலம்புகிறார். முத்து, ரோகிணி செய்தது தவறு என்றால் நீ செய்ததும் தவறுதான் என்று திட்டுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






