விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மனோஜ், அவள் சொல்வதெல்லாம் பொய். நடிக்கிறாள் என்று சொன்னார். உடனே ரோகினி, முதலை கண்ணீர் வடித்து நிறைய டிராமா போட்டார். பின் நீதிபதி, இந்த வழக்கை நான் ஆறு மாதத்திற்கு ஒத்தி வைக்கிறேன். ஆனால், அதுவரை ரோகிணிக்கும் அவருடைய குழந்தைக்கும் தேவையான செலவை மனோஜ் தான் செய்ய வேண்டும். மாதம் 25,000 கொடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார். இதனால் ரோகிணி ரொம்பவே சந்தோஷப்பட்டார். விஜயாவிற்கு பயங்கர கடுப்பாகிறது.

அதற்குப்பின் ட்ரிப் முடித்து வீட்டிற்கு சுருதி-ரவி இருவரும் வந்துவிட்டார்கள். எல்லோருமே நிச்சயதார்த்தத்திற்கு தயாரானார்கள். விஜயா, மனோஜ் நிச்சயதார்த்தத்திற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்தார். அப்போது வந்த மனோஜ், நிச்சயதார்த்த மோதிரத்தை காணவில்லை என்று சொன்னார். வீட்டில் யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. விஜயா, எங்கே போச்சு என்று பதறினார். அண்ணாமலை ஷாக்கில் இருந்தார்.
சிறகடிக்க ஆசை:
இன்றைய எபிசோட்டில் ரேகா, என்னைப் பற்றி நீ தெரிந்து கொள்ளணும் என்கிறார். சத்யாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. அப்போது ரேகா, சிந்தாமணியின் புகைப்படத்தை காண்பித்து இவர் தான் என்னுடைய அம்மா என்று சொல்கிறார். அதைப் பார்த்து சத்யா ஷாக்கானார். பின் ரேகா, நம்முடைய காதலை பற்றி எங்கள் வீட்டில் தெரிந்தால் பிரச்சனை தான் வரும் என்று சொல்கிறார். சத்யா , உன் அம்மாவால் என் குடும்பத்திற்கு நிறைய பிரச்சனை வந்திருக்கிறது. என்னுடைய அக்கா ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்கிறார் என்கிறார். ரேகா, முதலில் உன் அக்கா மாமாவிடம் பேசலாம் என்று சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் மீனாவை சந்திக்க அவருடன் வேலை செய்பவர்கள் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய கோரிக்கையை மீனாவிடம் சொல்கிறார்கள். ஆனால், அவர்களை பேசவிடாமல் விஜயா மாற்றி மாற்றி மீனாவிற்கு வேலை வைக்கிறார். உடனே முத்து, விஜயா செய்ய சொல்லும் வேலைகள் எல்லாம் செய்கிறார். இதை பார்த்து மீனாவுடன் வேலை செய்பவர்களுக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது. முத்து-மீனா ஜோடியை பார்த்து புகழ்ந்து தள்கிறார்கள். அதற்குப்பின் சத்யா-ரேகா இருவரும் பைக்கில் வருகிறார்கள். அதை சிந்தாமணி பார்த்து விடுகிறார். சிந்தாமணி அவர்களை பின் தொடர்ந்து வரும் போது இருவரும் வேறு வழியாக சென்று விடுகிறார்கள்.
https://www.youtube.com/watch?v=UqVhvbchi_g
சீரியல் ப்ரோமோ:
இந்த நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் மனோஜ் தான் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணுடன் ஆட்டோவில் செல்கிறார். அப்போது அவருக்கு உடல்நிலை முடியாமல் போகிறது. இதை கவனித்த ரோகிணி, அந்த பெண் தனியாக இருக்கும்போது பேசுகிறார். பின் அந்தப் பெண் ரோகினியின் பார்லருக்கு வருகிறார். அங்கு ரோகினி மனோஜ் உடன் இருக்கும் புகைப்படத்தை காண்பிக்கிறார். அதை பார்த்து அந்த பெண் விசாரிக்கிறார். ரோகிணி, இவர் தான் என் கணவர் என்று சொல்கிறார். உடனே அந்த பெண், நான் இவரை தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று சொல்கிறார். உடனே ரோகினி அழுது டிராமா போடுகிறார்.






