விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகினி, சின்ன வயதிலேயே என் அம்மா வேதனையிலேயே இறந்து விட்டார். அதற்கு பிறகு கஷ்டப்பட்டு படித்து நான் ஒரு பார்லர் தொடங்கினேன். மனோஜை பார்த்தவுடன் பிடித்தது. அப்போது தொடங்கினேன். அத்தை பணக்கார பெண்ணை தேடுகிற விஷயம் தெரிந்துதான் நான் இப்படி பொய் சொல்லி திருமணம் செய்து கொண்டேன் என்று சொன்னவுடன் விஜயா, இன்னும் என்னென்ன பொய் சொல்கிறாய் என்று அதிகமாக கோபப்பட்டார். உடனே அண்ணாமலை, இது மட்டும் தானா, வேற ஏதாவது மறைக்கிறாயா? எதுவாக இருந்தாலும் உண்மையை சொல்லிவிடு. இந்த குடும்பத்திற்கு உண்மையாக இரு என்று சொன்னார். அதற்கு ரோகினி, அவ்வளவுதான் என்று தான் திருமணம் செய்த விஷயத்தை மறைத்தார்.

பாட்டி, இனிமேல் நீ இந்த வீட்டிற்கு உண்மையாகவும், மனோஜிற்கு உண்மையாகவும் இருக்க வேண்டும். சத்தியம் செய் என்று சொன்னார். ஒரு நிமிடம் செய் அமைதியாக இருந்தார். உடனே அண்ணாமலை, வேறு ஏதாவது சொல்லனுமா? என்று கேட்டதற்கு ரோகினி, எதுவும் இல்லை. நான் எல்லா உண்மையும் சொல்லிவிட்டேன். நான் இந்த குடும்பத்திற்கு நேர்மையாக இருப்பேன் என்று சத்தியம் செய்தார். இதையெல்லாம் பார்த்து விஜயாவுக்கு இன்னும் கோபம் அதிகமானது. ரோகினி, முத்து-மீனா இருவரையும் முறைத்துக் கொண்டே ரூமிற்கு சென்றார்.
சிறகடிக்க ஆசை:
அதற்குப்பின் பாட்டி, விஜயா மீதும் தவறிருக்கிறது. மருமகள்களை சமமாக நடத்து என்று திட்டி இருந்தார். அதற்குப்பின் ரூமில் ரோகினி, மனோஜ் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். ரோகினி, மனோஜ், நீ சொல்வதில் எது உண்மை என்று நம்ப முடியவில்லை. அந்த அளவிற்கு நீ பொய் சொல்கிறாய். உன் மீது எனக்கு நம்பிக்கையும் இல்லை என்று பேசி இருந்தார். ரோகினி எவ்வளவு எடுத்துச் சொல்லியுமே மனோஜ் கேட்கவே இல்லை. இன்னொரு பக்கம் மாடியில் சுருதி, முத்து, மீனா, ரவி எல்லோரும் ரோகினி பஞ்சாயத்தை பற்றி தான் பேசிக் கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் மனோஜ் கேட்டு வேதனைப்பட்டார்.

நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் மீனா எல்லோருக்குமே சமைத்து வைத்து கூப்பிட்டார். வீட்டில் உள்ள எல்லோருமே ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டார்கள். அப்போது முத்து, மீனா, ஸ்ருதி சாப்பிட்டு இருந்தார்கள். விஜயாவை கிண்டல் அடித்து கேலியாக பேசி இருந்தார்கள். இதனால் கோபமடைந்த விஜயா கத்தி இருந்தார். ஆனால், கடைசியில் அது விஜயா கண்ட கனவு. இதற்கெல்லாம் காரணம் ரோகினி தான் என்று அவரை முறைத்துக் கொண்டிருந்தார். அதற்குப்பின் பாட்டி, நான் ஊருக்கு கிளம்புகிறேன். சண்டை போடாமல் எல்லோரும் ஒற்றுமையாக இருங்கள். சீக்கிரத்தில் குழந்தையை குழந்தையை பெற்றுக் கொடுங்கள் என்று சொல்லிவிட்டு சொன்னார்.

சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் மனோஜ்- ரோகினி இருவரும் வேலைக்கு கிளம்பி இருந்தார்கள். அப்போது மனோஜிடம் விஜயா, நீ இனிமேல் ரோகினி இடம் பேசக்கூடாது. அவள் தனியாகவே போகட்டும். அவள் பேசக்கூடாது. ரூமுக்கு போகக்கூடாது என்று நிறைய கண்டிஷன் போட்டார். மனோஜால் எதுவுமே பேச முடியவில்லை. ரோகினி, எனக்கு தான் ஆடிட்டிங் தெரியும் என்று சொன்னவுடன் இன்னும் கோபப்பட்ட விஜயா, என் மகனை ஏமாத்தாதே. அவன் பார்த்துக் கொள்ளுவான். உன் வேலையை செய் என்று மிரட்டி அனுப்புகிறார். வேதனையில் உள்ளே சென்று ரோகினி அழுது கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து போன் செய்து அவருடைய அம்மா, என்னுடைய பிறந்தநாளை மறந்து விட்டாயா? என்று பேசி இருந்தார். பின் ரோகினி தன்னுடைய அம்மாவையும் மகனையும் நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருந்தார்.
https://www.youtube.com/watch?v=aUaKFzGwjF0
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ரோகினி கிச்சனில் சமைத்துக் கொண்டிருக்கிறார். அதை பார்த்த சுருதி, இனிமேல் நீங்க சமையல் செய்யணுமா? மாமியார் போட்ட ஆர்டரா?என்று ரோகினியை வெறுப்பேற்றும் மாதிரி பேசிக் கொண்டிருக்கிறார். இதனால் ரோகினிக்கு பயங்கர கடுப்பாகிறது. சுருதி, ரோகினியை கிண்டல் செய்வதை பார்த்து மீனா உள்ளுக்குள்ளே சிரித்துக் கொள்கிறார்.
இதனால் ரோகினிக்கு கோபம் தலைக்கு மேல் ஏறுகிறது. இனி அடுத்து என்ன? என்று விறுவிறுப்பில் சீரியல் சென்று கொண்டு இருக்கிறது .






