நூலிழையில் தப்பித்த மனோஜ், உண்மையை அறிந்த ரோகினி, முத்து போடும் புது பிளான்- சிறகடிக்க ஆசை

0
362
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியலில் ‘சிறகடிக்க ஆசை’ ஒன்று. இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் டிஆர்பியில் டாப்பில் இருக்கிறது. இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த குடும்ப கதை. அண்ணாமலை பேச்சால் மீனாவை முத்து திருமணம் செய்தார். அதன் பின் முதல் மகனுக்கு பணக்கார பெண் என நினைத்து ரோகினியை திருமணம் செய்து வைத்தார் விஜயா. ஆனால், அவர் பணக்கார குடும்பமே இல்லை. அதற்கு பின் ரவி-சுருதி காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

-விளம்பரம்-

வழக்கம் போல் வீட்டில் மாமியார் அராஜகம் நடக்கிறது. சீரியலில் கடந்த வாரம் மனோஜ் கடையில் பெரிய ஆர்டர் வந்ததால் லட்சக்கணக்கில் பொருள்களை விற்று ஏமாந்து விட்டார். இதனால் விஜயா, மீனாவின் நகையை கொடுத்தார். ஆனால், மனோஜ் அடமானம் வைக்காமல் விற்று விட்டார். இன்னொரு பக்கம் வீட்டில் முத்து பாட்டிக்கு கிபிட் வாங்க, மீனா நகையை வாங்கி கடைக்கு சென்று இருந்தார். ஆனால், அது எல்லாம் கவரிங் என்று தெரிந்தது. பாட்டி பிறந்தநாள் என்பதால் முத்து அமைதியாக இருந்தார். வீட்டில் பாட்டி பிறந்தநாளை எல்லோரும் சிறப்பாக கொண்டாடி இருந்தார்கள்.

- Advertisement -

சிறக்கடிக்க ஆசை :

அப்போது பாட்டி, என்னுடைய பிறந்தநாளுக்கு மனதிற்கு பிடித்த பரிசு யார் கொடுக்கிறீர்களோ? அவர்களுக்கு நான் ஒரு கிப்ட் தரப்போகிறேன் என்று சொல்லி இருந்தார். இதனால் எல்லோரும் கிப்ட் வாங்கி தந்தார்கள். ஆனால், முத்து தன் பாட்டிக்காக அவருடைய பள்ளி நண்பர்களை அழைத்து வந்திருந்தார் . இறுதியில் பாட்டி, என்னுடைய மனதை குளிர வைத்தது முத்து-மீனா தான் என்று தன்னிடம் இருந்த விலைமதிப்பற்ற பரம்பரை நகையை கொடுத்தார். அடுத்த நாள் பாட்டி ஊருக்கு சென்ற பின் முத்து தன்னிடம் இருந்த கவரிங் நகை விஷயத்தை அண்ணாமலை இடம் சொன்னார்.

சீரியல் கதை:

அண்ணாமலை, என்ன விஜயா? என்று கேட்டவுடன், எனக்கு தெரியாது. மீனா வீட்டில் தான் நகை மாறி இருக்கும். அவருடைய தம்பி தான் இந்த வேலை எல்லாம் செய்திருப்பான் என்று விஜயா சொன்னார். இதனால் கோபமடைந்த மீனா, நாங்கள் ஏழைகள் தான். ஆனால், இப்படி எல்லாம் செய்ய மாட்டோம் என்று வாதம் செய்தார். இறுதியில் முத்து, இந்த வேலையை யார் செய்தது என்று எனக்கு தெரியும். ஆதாரத்துடன் நிரூபிக்கிறேன் என்கிறார். அதற்குப் பிறகு சுருதியை வைத்து வேற குரலில் மனோஜ் இடம் பேச வைத்தார். ஆனால், உஷாரான மனோஜ் சமாளித்து தப்பித்து விடுகிறார். பின் முத்து, மீனா இருவரும் விஜயாவின் தோழி பார்வதி வீட்டிற்கு உண்மையை கண்டுபிடிக்க சென்றார்கள்.

-விளம்பரம்-

சீரியல் டிராக்:

கடைசியில் உண்மை சொல்லும் வரும் நேரத்தில் விஜயா வந்து தடுத்து நிறுத்துகிறார். மேலும், நேற்று எபிசோடில், செல்வம்- முத்து இருவரும் பிரிட்ஜ் வாங்க ஒரு கடைக்கு சென்றார்கள். ஆனால், அந்த கடையில் இருந்தவர்கள் மனோஜ் இடம் பிரிட்ஜை ஏமாற்றி வாங்கிய கும்பல் . இந்த கும்பல் செய்த திருட்டு வேலையை அறிந்த போலீசார் எல்லோரையும் கைது செய்கிறார்கள். அப்போது போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த மனோஜ் நடந்ததைப் பற்றி போலீஸ் இடம் சொல்கிறார். இதை மறைந்து நின்று வீடியோ எடுத்த முத்து வீட்டில் காண்பிக்கிறார்.

இன்றைய எபிசோட்:

இதை பார்த்தவுடன் அதிர்ச்சியாகி விஜயா, ரோகினி நிற்கிறார்கள். வீட்டில் உள்ள எல்லோருமே எப்படி பணம் வந்தது? என்று கேட்க, மனோஜை அடித்து அந்த நேரத்தில் காப்பாற்றி விடுகிறார் விஜயா. இந்நிலையில் இன்றைய எபிசோடில், மனோஜை பயங்கரமாக திட்டுகிறார் ரோகினி. கடைசியில் மனோஜ் ரோகினி இடம் மீனாவின் நகையை அடகு வைத்து தான் அந்த பணத்தை கொடுத்தேன் என்று உண்மையை உளறி விடுகிறார். என்ன செய்வதென்று புரியாமல் இருக்கிறார் ரோகினி. இன்னொரு பக்கம், மனோஜ் பணம் வாங்கிய நண்பரிடம் சென்று முத்து விசாரிக்கிறார். அவர் நான் கொடுக்கவில்லை என்று சொன்னவுடன் எப்படியாவது மனோஜ் வாயில் உண்மையை வர வைக்க வேண்டும் என்று முத்து தில்லாலங்கடி வேலையை செய்கிறார். இதில் மனோஜ் மாட்டிக் கொள்வாரா? விஜயா திட்டம் தவிடு பொடி ஆகுமா? கவரிங் நகை உண்மை வெளியே வருமா? போன்ற விறுவிறுப்பான கட்டத்துடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது

Advertisement