விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சீதா, அருண் கோபத்தில் என்னை அடித்துவிட்டார். எதற்கெடுத்தாலும் கோபப்பட்டு அடித்தார். மாமா பெயரை சொன்னால் அவருக்கு கோபம் அதிகமாகி என்ன செய்கிறேன் என்று தெரியாமல் நடந்து கொள்கிறார் என்றார். பின் சீதாவிற்கு மீனா ஆறுதல் சொல்லிவிட்டு கிளம்பினார். இன்னொரு பக்கம் ரோகினியை பார்ப்பதற்கு பார்க்கிங்க்கு மனோஜ் வந்திருந்தார். பின் ரோகினி வைத்த ஆட்கள் மனோஜை சுத்தி வளைத்து கேள்வி மேல் கேள்வி கேட்டு அடிக்கப் போனார்கள். அந்த சமயம் வந்த ரோகினி, அவர் என்னுடைய கணவர். அடிக்காதீர்கள் என்றார்.

பின் பார்க்கில் இருந்தவர்கள், சொந்த பொண்டாட்டியை சைட் அடிக்கிறாயா? என்று திட்டினார். மனோஜ், அவர் என்னுடைய மனைவி தான் என்று சொல்லிவிட்டார். இதையெல்லாம் ஒரு ஆதாரமாக ரோகினி சேகரித்து வைத்துக் கொண்டார். இன்னொரு பக்கம் அருணின் வீட்டிற்கு சென்ற மீனா, உங்களுக்கும் என் கணவருக்கும் நிறைய பிரச்சனை இருக்கிறது. இது எதார்த்தமாக நடந்த விபத்திற்கு என் கணவர் காரணம் இல்ல. சீதாவுடன் சந்தோஷமாக வாழுங்கள் என்றெல்லாம் அட்வைஸ் பண்ணுகிறார். அதற்குப்பின் அண்ணாமலை, இந்த விவாகரத்து சீக்கிரமாக கிடைக்காது. வேறு ஏதாவது ஏற்பாடுகள் செய்கிறோம் என்றார். முத்து- மீனா இருவரும் ரோகிணி ரொம்ப புத்திசாலி. எது வேண்டுமானாலும் செய்வார் என்றார்கள்.
சிறகடிக்க ஆசை:
முத்து-மீனா இருவரும் வித்யா, முருகனை சந்தித்து ரோகினி விவாகரத்து விஷயமாக பேசி இருந்தார்கள். வித்யா, நான் கோர்ட்டில் சாட்சி சொல்ல தயார் என்றார். அதற்குப்பின் மலேசியா மாமாவாக நடிக்க வந்த மணியை சந்தித்து முத்து-மீனா பேசி இருந்தார்கள். மணி உண்மையை சொல்ல வருகிறேன் என்று ஒத்துக்கொண்டார். இன்னொரு பக்கம் விஜயா, பார்வதியை சந்தித்து கோர்ட்டில் ரோகினி பற்றி பொய் சொல்ல சொன்னார். பார்வதி முடியாது என்கிறார். சிந்தாமணியிடம் விஜயா உதவி கேட்டார். சிந்தாமணியும் என்னால் முடியாது என்றார்.

சீரியல் ட்ராக்:
அதோடு சிந்தாமணி, விஜயா பேசும் விஷயத்தை எல்லாம் ரோகிணிக்கு போன் செய்து கேட்க வைத்தார். இதை அறிந்த ரோகினி உஷாராகி விட்டார். இன்னொரு பக்கம் ஸ்ருதியின் ஹோட்டலுக்கு சென்ற ரவி மன்னிப்பு கேட்டுவிட்டு வேலை செய்ய ஒத்துக்கொண்டார். அது மட்டும் இல்லாமல் நீத்துவுக்கு கொடுக்கவேண்டிய பணத்தை உன் அப்பாவிடம் வாங்கி கொடுக்க வேண்டும் என்று கண்டிஷன் சொன்றார். கோபத்தில் ஸ்ருதி, எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்றார். ரவி, நீ அதை செய்தால் நான் வேலைக்கு வருகிறேன் என்றார். உடனே ஸ்ருதி, உனக்கும் நீத்துவுக்கும் சம்மந்தமில்லை என்று சோசியல் மீடியாவில் பேசி வீடியோ போடு என்றார்.
https://www.youtube.com/watch?v=KBX_ESHBhao
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கோர்ட்டில் வித்யா, ரோகினிக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி கிருஷ் இருக்கும் விஷயம் எனக்கு தெரியும். ஆனால், இந்த உண்மை மனோஜ்க்கு தெரியாது என்கிறார். பின் மணி, நான் மலேசியா மாமாவாக நடிக்க வந்தேன். ரோகிணி பாப்பா சொல்லித்தான் செய்தேன் என்று சொல்கிறார். இதையெல்லாம் கேட்டு ரோகிணிக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக நிற்கிறார்.






