விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனா மீது ஒரு கார் மோதும்படியாக வந்து நின்றுவிட்டது. ஆனால், அந்த காரில் இருந்த செல்வம் தான். பின் மீனா மயக்கம் போட்டு கீழே விழுதார். உடனே ஸ்ருதி- ரவி இருவரும் மீனாவை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடல் போனார்கள். அப்போது மீனா சாப்பிடாததால் தான் மயக்கம் வந்தது என்று சொல்லிவிட்டார்கள். வீட்டில் எல்லோரும் சாப்பிட சொல்ல, மீனா மறுத்தார். அந்த சமயம் பார்த்து முத்து வீட்டிற்கு வந்தார். முத்து, கோபமாக தான் மீனாவிடம் பேசி இருந்தார். மீனா, நான் செய்த தவறுக்கான தண்டனை தான் இது என்று சொல்லி அழுதார்.

இன்னொரு பக்கம் ரோகினி-சிந்தாமணி இதுவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போ ரோகினி, நான் இந்த நிலைமை இருப்பதற்கு காரணம் முத்து-மீனா. அவர்களை எப்படியாவது பழிவாங்க வேண்டும். எனக்கு மனோஜ் வேண்டும் என்று சொன்னார். சிந்தாமணி, விஜயா உங்கள் இருவரையும் சேர்த்து வைக்க மாட்டார் என்று சொன்னார். அதற்கு ரோகினி, மனோஜை அவர்களிடம் இருந்து நான் பிரித்து விடுவேன் என்றெல்லாம் வில்லியாக பேசி இருந்தார். சிந்தாமணி, நான் உனக்கு துணையாக இருக்கிறேன் என்றார்.
சிறகடிக்க ஆசை:
ரோகினி சென்ற பிறகு சிந்தாமணி, இவளை வைத்து தான் நான் அந்த வீட்டை எழுதி வாங்கணும். இவள் எனக்கு ஒரு பகடைக்காய் என்று ஒரு புது திட்டம் போட்டார். இன்னொரு பக்கம் மீனாவின் உடல் நிலை அறிந்து அண்ணாமலை வீட்டிற்கு வந்துவிட்டார். பின் அண்ணாமலை, மீனா- முத்துவிற்கு அறிவுரை சொல்லி சாப்பிட சொன்னார். பின் முத்து கொஞ்சம் சமாதானமாகி மீனாவை சாப்பிட சொன்னார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பார்வதி வீட்டிற்கு சென்ற விஜயா, உன்னால் தான் என் மகன் வாழ்க்கை அழிந்துவிட்டது. நீதான் இந்த பிரச்சனை சரி செய்யணும் என்று சண்டை போடுகிறார். பார்வதி,
நான் ரோகினி அறிமுகம் தான் செய்து வைத்தேன். ஆனால், உன் பேராசை தான் இந்த பிரச்சனை நடந்தது. நான் என்ன செய்ய முடியும் என்று சொல்கிறார். உடனே கோவப்பட்ட விஜயா, பார்வதியை திட்டி விட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார். அதற்குப்பின் வீட்டில் மனோஜ் ரொம்ப சோகமாகவே இருக்கிறார். அதற்கு விஜயா, சீக்கிரமாகவே மனோஜின் வாழ்க்கையை விட்டு ரோகினியை வெளியே அனுப்பனும். இருவருக்கும் விவாகரத்து வாங்கி தந்து என் மகனின் வாழ்க்கையை காப்பாற்றணும் என்கிறார்.

சீரியல் ட்ராக்:
அண்ணாமலை, உன்னுடைய அவசர புத்தியால்தான் மனோஜின் வாழ்க்கை இப்படி நடந்தது.
எதுவாக இருந்தாலும் நிதானமாக செய்யணும். அமைதியாக இரு என்று திட்டுகிறார். அந்த சமயம் பார்த்து வீட்டிற்கு வந்த ஸ்ருதியின் அம்மா, அண்ணாமலையின் குடும்பத்தை ரொம்ப மோசமாக
பேசுகிறார். கோபத்தில் அண்ணாமலை சண்டை போடுகிறார். பின் முருகன்-வித்யா இருவரும் மீனாவை பார்ப்பதற்காக வந்திருக்கிறார்கள். அப்போது முத்து, வித்யா- மீனா செய்த வேலையை பற்றி திட்டிக் கொண்டிருக்கிறார்.






