விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகினி புது காண்ட்ராக்ட் விசயமாக கோகிலாவின் தோழியை சந்தித்து பேசி இருந்தார். அவர்களுமே அந்த ஆர்டரை ரோகிணிக்கு கொடுத்து விட்டார்கள். பின் இதைப்பற்றி ரோகினி, மனோஜிடம் சொல்லி சந்தோஷப்பட்டார். பின் மனோஜ், ரோகினி இருவருமே ஸ்வீட் புடவை எல்லாம் வாங்கி வந்து விஜயாவிடம் கொடுத்து விஷயத்தை பற்றி சொன்னார்கள். ரோகினி, தானே வாங்கியது போலவே பில்டப் விட்டு செல்வதால் சுருதிக்கு பயங்கர கடுப்பானது.

தங்களுக்கு கிடைத்திருக்கும் புது ஆர்டர் பற்றி ரோகினி சொன்னார். மனோஜ், இதனால் 40 லட்சம் profit கிடைக்கப் போகிறது என்றார். இதை கேட்டவுடன் விஜயா வாயை பிளந்தார். இதற்கெல்லாம் காரணம், ரோகினி தான் என்று மனோஜ் சென்றார். விஜயா, ரோகிணியை ரொம்ப பெருமையாகவும் பாசமாகவும் நடத்தினார். இதையெல்லாம் பார்த்து சுருதிக்கு பயங்கர கடுப்பானது. முத்து, மீனாவிற்குமே புது ஆர்டர் கிடைத்திருந்தது. அவரும் லச்சத்தில் லாபம் கிடைக்கும் என்றெல்லாம் சொல்வதால் விஜயாவிற்கு கடுப்பானது.
சிறகடிக்க ஆசை:
பின் சுருதி, மீனா, ரோகினி பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது சுருதி, இந்த ஆர்டர் மீனாவால் தான் கிடைத்தது. ஆனால், ஒரு நன்றி கூட சொல்லவில்லை. நீங்களே செய்தது போல தம்மட்டம் அடித்துக் கொள்கிறீர்கள் என்றெல்லாம் சொன்னார். அதற்கு ரோகினி, மீனாவால் மட்டும் கிடைக்கவில்லை. அந்த மேடம் எனக்கு ரொம்ப பழக்கம். என்னுடைய உழைப்புக்காக தான் அவர் தந்தார் என்று மீனா செய்த நன்றியை கொஞ்சம் கூட யோசித்துப் பார்க்காமல் ஏளனமாக பேசிவிட்டு அங்கிருந்து சென்றார். இதையெல்லாம் பார்த்து சுருதிக்கு இன்னும் கோபம் அதிகமாகின்றது. அதற்குப்பின் மீனா, ரோகினிக்கு கிடைத்த ஆர்டரை பற்றி முத்துவிடம் சொன்னார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பார்வதி-சிவன் பேசி கொண்டு இருப்பதை பார்த்த விஜயா, யோகா கிளாஸ் இல்லை என்று சிவனை வெளியே அனுப்பி விடுகிறார். அதற்குப்பின் விஜயா, ரோகிணி சொன்ன புது ஆர்டரை பற்றி பார்வதியிடம் சொல்லி சந்தோஷப்படுகிறார். அந்த சமயம் வந்த சிந்தாமணியிடமும் மீனாவுக்கு கிடைத்த புது ஆடர் பற்றி சொல்லுவதால் சிந்தாமணி ரொம்பவே பொறாமைப்படுகிறார். பின் விஜயா, ரோகினியை தன் மருமகளாக ஏற்றுக் கொண்டேன். இனி மனோஜ்-ரோகினி பிரிந்து வாழ தேவையில்லை. அவர்கள் சந்தோஷமாக சேர்ந்து வாழட்டும் என்று முடிவெடுக்கிறார்.

சீரியல் ட்ராக்:
பின் சிந்தாமணியை விட்டு மனோஜ் ரூமில் அலங்காரம் செய்து வைக்க சொல்கிறார் விஜயா. பின் வீட்டில் சிந்தாமணி- பார்வதி இருவருமே அலங்காரம் செய்து முடித்து விடுகிறார்கள். அப்போது வீட்டிற்கு வந்த முத்து, ரவி, சுருதி யாருக்குமே ஒன்றுமே புரியவில்லை. விஜயா, ரோகினி- மனோஜ் இருவரும் சேர்ந்து வாழ ஒத்துக் கொண்டேன் என்றெல்லாம் சொல்கிறார். இதைக் கேட்டு மனோஜ் -ரோகினி சந்தோஷப்படுகிறார்கள். அதற்குப்பின் ரோகினி- மனோஜ் இருவருமே சந்தோசமாக தங்களுடைய ரூமுக்கு செல்கிறார்கள். அங்கு மனோஜ், பாட்டு பாடி ரோகிணியை வெறுப்பேற்றிக் கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






