விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் வீட்டில் மீனா எல்லோருக்கும் சமைத்து வைத்து இருந்தார். விஜயா டயட் இருப்பதாக சொல்லி யாருக்கும் தெரியாமல் சாப்பிட்டார். அதன் பின் பள்ளியில் பேரன்ஸ் மீட்டிங் இருப்பதால் அண்ணாமலை கிளம்பி இருந்தார். அதற்குப்பின் பள்ளியில் கிறிஸ், அவருடைய பாட்டியையும் பார்த்து மீனா- முத்து இருவரும் பேசினார்கள். ஆனால், கிரிஷ் பாட்டி ஏதோ காரணங்களை சொல்லி அங்கிருந்து சென்று விட்டார். இதனால் முத்து- மீனா ரொம்ப வருத்தப்பட்டார்கள். அதற்குப்பின் வீடியோ கால் மூலம் பேரன்ஸ் மீட்டிங் அட்டென்ட் பண்ணுவதற்காக ரோகிணி பயங்கரமாக கெட்டப் எல்லாம் போட்டார்.

அப்போது க்ரிஷ் அந்த பள்ளியில் தான் படிக்கிறார் என்ற உண்மை அண்ணாமலைக்கு தெரிய வந்தது. அதற்குப்பின் வீடியோ கால் மூலம் ரோகினி டீச்சரிடம் பேசி இருந்தார். அதை அண்ணாமலை உன்னிப்பாக கவனித்தார். தன் மாமனாரிடம் மாட்டிக்கொள்வோமா? என்று ரோகினி பயப்பட்டார். நேற்று எபிசோட்டில் அண்ணாமலைக்கு கடைசி வரை கிரிஸ் அம்மா யார் என்று தெரியவில்லை? ஏதேதோ பேசி ரோகினி, கிரிஷ் ஆசிரியரை சமாளித்து விட்டார்.
சிறகடிக்க ஆசை:
அதற்குப்பின் வெளியே வந்த கிரிஷிடம் முத்து-மீனா பேசி இருந்தார்கள். ஆனால், கிரிஷ் பாட்டி அவர்களிடம் சரியாக பேசாமல் சென்று விட்டார். இதனால் மீனாவிற்கு நிறைய சந்தேகம் வந்தது. அப்போது அவர், உங்களுடைய அண்ணன் தான் கிரிஸ் உடைய அப்பா, ஜீவா தான் அவருடைய அம்மாவாக இருக்கனும். அவர்கள் நம்மிடம் மறைக்க பார்க்கிறார்கள் என்று சொன்னவுடன் முத்துவிற்குமே சந்தேகம் ஏற்பட்டது. அதற்குப்பின் வீட்டில் பேரன்ஸ் மீட்டிங்கில் நடந்ததை பற்றி அண்ணாமலை சொல்லிக் கொண்டிருந்தார்.

நேற்று எபிசோட்:
அப்போது முத்து, வீடியோ காலில் எதற்கு மாஸ்க் போட வேண்டும்? எதையோ மறைக்க பார்க்கிறார்கள் என்று எல்லோரும் மாத்தி மாத்தி பேசிக் கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் கேட்ட ரோகினிக்கு பயம் ஏற்பட்டது. உடனே அவர், அடுத்தவர்களை பற்றி நாம் எதற்கு பேசனும் என்று அந்த இடத்தை விட்டு மனோஜை அழைத்துக் கொண்டு சென்றார். இதையெல்லாம் பார்த்த முத்து,மீனாவிற்கு சந்தேகம் அதிகமானது. இருவரும் எப்படியாவது, கிரிஷ் பின் மறைந்து இருக்கும் ரகசியத்தை கண்டுபிடிக்கன்னும் என்றார்கள்.

இன்றைய எபிசோட்:
இப்படி இருக்கும் நிலையில் இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மனோஜ் டயட்டீசனுக்காக வீட்டிற்கு அழைத்து வருகிறார். அவர், விஜயாவிற்கு என்னென்ன சாப்பிட வேண்டும்? எப்போது சாப்பிட வேண்டும்? எவ்வளவு சாப்பிட வேண்டும்? என்றெல்லாம் ஒரு லிஸ்ட் கொடுக்கிறார். இதை பார்த்தவுடன் எல்லோரும் ஷாக் ஆகிறார்கள். பின் அதையெல்லாம் மீனாவை சமைக்க சொல்கிறார் விஜயா. பின் மனோஜ்க்கும் சேர்த்து சமைக்க சொன்னவுடன் அவர் முடியாது என்கிறார்.

சீரியல் ட்ராக்:
உடனே முத்து, சமைத்துக் கொடுக்க வேண்டும் என்றால் பணம் கொடுக்க வேண்டும் என்ற உடன் வேறு வழி இல்லாமல் மனோஜ் ஒத்துக் கொள்கிறார். இன்னொரு பக்கம் அருண், வீட்டிற்கு சென்று பூ கொடுக்கிறார். சீதாவை பார்த்தவுடன் அருண் அம்மா ரொம்ப சந்தோஷப்பட்டு பேசுகிறார். அதற்குப்பின் அருண் வேலைக்கு கிளம்புகிறார். இன்னொரு பக்கம் விஜயா- சிந்தாமணி இருவரும் சேர்ந்து நடனம் ஆடுகிறார்கள். அந்த சமயம் பார்த்து மீனா, விஜயாவிற்கு சாப்பாடு கொண்டு வருகிறார். மீனாவை பார்த்தவுடன் வழக்கம்போல் விஜயா திட்ட ஆரம்பிக்கிறார். பின் நக்கலாக சிந்தாமணியும் மீனாவை வம்பு இழுக்கிறார். அது தெரியாமல் விஜயா, மீனாவை திட்டி கொண்டு ஏளனமாக பேசுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






