விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மனோஜ், ரோகினிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை பிறந்த விஷயத்தை சொல்லவில்லை என்று நடந்தது எல்லாவற்றையும் சொன்னார். அதைக் கேட்டு மாத சங்கத் தலைவி ஷாக் ஆகினார். முத்து, ரோகினியின் பித்தலாட்ட வேலை எல்லாம் சொன்னார். இதனால் கோபப்பட்ட மாத சங்கத் தலைவி, இனி நாங்கள் ரோகிணிக்கு எந்த உதவியும் செய்ய மாட்டோம் என்றார். அந்த சமயம் வந்த ரோகிணியை தலைவியை திட்டி அனுப்புகிறார். பின் வீட்டிற்கு வந்த முத்து நடந்தது எல்லாம் சொன்னார். அண்ணாமலை ரொம்ப சந்தோஷப்பட்டார்.

மாதர் சங்க தலைவியின் பிரச்சனையில் இருந்து காப்பாற்றியதற்காக மனோஜ் நன்றி சொன்னார். அதை பார்த்து முத்துவிற்கு ஷாக்கிங் ஆக இருக்கிறது. அதற்குப்பின் பூக்கடை வியாபார சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு நிற்க சொல்லி சிந்தாமணியிடம் பேசி இருந்தார்கள். சிந்தாமணி, எனக்கு பதவி ஆசை இல்லை, வேண்டாம் என்று நடிக்கிறார். இருந்தாலும் அங்கிருந்தவர்கள் தேர்தலில் நிற்க சொல்லி கட்டாயப்படுத்தினார்கள். சிந்தாமணியும் தேர்தலில் நிற்க ஒத்து கொண்டார். இன்னொரு பக்கம் மீனாவை தேர்தலில் நிற்க சொல்லி அவருடைய தோழிகள் எல்லோரும் சொன்னார்கள்.
சிறகடிக்க ஆசை:
மீனா, வேண்டாம் என்று சொன்னார். ஆனால், முத்து-மீனாவின் தோழிகள் எல்லோருமே கட்டாயப்படுத்தி தேர்தலில் நிற்க மீனா ஒத்துக்க வைத்தார்கள். பின் இதைப்பற்றி மீனா தன்னுடைய அம்மாவிடம் சொன்னார். மீனாவின் அம்மா, சிந்தாமணி எதிர்த்து போட்டியிட முடியுமா? எதற்கு இந்த பிரச்சனை? என்றார். முத்து, அதெல்லாம் முடியாது. நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். இன்னொரு பக்கம் மீனா தன்னை எதிர்த்து போட்டியிடுவதை அறிந்த சிந்தாமணி கோபப்பட்டார். அதற்குப்பின் விஜயாவை சந்தித்து இதை பற்றி சிந்தாமணி சொன்னார். மீனா இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் உங்களை மதிக்க மாட்டாள் என்றெல்லாம் ஒண்ணுக்கு ரெண்டாக ஏற்றி விட்டார் சிந்தாமணி.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சிந்தாமணி, மீனா தேர்தலில் வெற்றி பெற்றால் உங்களுக்கு வீட்டில் மரியாதை இருக்காது. உங்களை வீட்டை விட்டு துரத்தி விடுவாள் என்று ஒன்றுக்கு இரண்டாக பயமுறுத்தி விடுகிறார். இன்னொரு பக்கம் வீட்டில் முத்து, அண்ணாமலை இடம் ஸ்வீட் கொடுத்து மீனா தேர்தலில் நிற்கும் விஷயத்தை சொல்கிறார். வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷப்படுகிறார்கள். அப்போது வந்த விஜயா, ஸ்வீட்டை தட்டி விட்டு மீனா தேர்தலில் நிற்க கூடாது என்று சொல்கிறார். முத்து, ஏன்? என்று கேட்கிறார்.

சீரியல் ட்ராக்:
விஜயா, மீனா என்னை மதிக்க மாட்டாள். சிந்தாமணி எதிர்த்து யாராலும் போட்டியிட முடியாது என்றெல்லாம் வழக்கம் போல மீனாவை ரொம்ப தரக்குறைவாக பேசிக் கொண்டிருக்கிறார். அண்ணாமலை, முத்து எல்லோருமே மீனாவிற்கு சப்போர்ட் செய்து பேசுகிறார்கள். ஆனால் விஜயா இந்த தேர்தலில் நிற்கக்கூடாது என்று சொல்கிறாள். மீனாவுமே அமைதியாக நிற்கிறார். அண்ணாமலை சொன்னதால் மீனா தேர்தலில் நிற்க ஒத்துக் கொள்கிறார். பின் தேர்தலுக்கான வேலைகளில் மீனா-முத்து இருவரும் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.






