விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து, அவர்கள் நம்மை வீட்டை விட்டு வெளியே அனுப்பி சீல் வைப்பதற்குள் நாமே இங்கிருந்து சென்றுவிடலாம் என்றார். அண்ணாமலைக்கு ரொம்பவே வேதனையாக இருக்கிறது. மீனா, எல்லோரையும் தன்னுடைய வீட்டிற்கு அழைத்தார். விஜயா இவ்வளவு நடந்துமே மீனாவின் குடும்பத்தை தரக்குறைவாக பேசி இருந்தார். பின் சுருதி வீட்டிற்கு செல்வதாக விஜயா சொன்னார். அண்ணாமலை, மீனாவின் வீட்டிற்கு செல்ல முடிவெடுத்தார். பின் அண்ணாமலை- விஜயா இருவருமே பிரிந்து ஒவ்வொரு திசைக்கு சென்றார்கள்.

விஜயா, ஸ்ருதியின் அம்மா வீட்டிற்கு சென்று விட்டார். அங்கு சுருதின் அம்மா நடந்ததை விசாரித்து, ஆறுதல் சொன்னார். அதற்குப்பின் காபி என்ற பெயரில் கிரீன் டீ கொடுத்தார். விஜயாவினால் அதை குடிக்கக்கூட முடியவில்லை. விஜயா முகம் சுழித்துக் கொண்டு அமைதியாக இருந்தார். இன்னொரு பக்கம் அண்ணாமலையை மீனாவின் குடும்பத்தார் ரொம்பவே அன்போடும் அக்கறையோடும் பார்த்துக் கொண்டார்கள். இருந்தாலும் அண்ணாமலைக்கு வருத்தமாக இருந்தது.
சிறகடிக்க ஆசை:
அதற்குப்பின் முத்து-மீனாவை அவமானப்படுத்துவதற்காக சிந்தாமணி வந்தார். ஆனால், அதற்கு முன்பே முத்துவின் வீடு பூட்டி இருப்பதை பார்த்து விட்டார். சிந்தாமணி, நம்மிடம் அசிங்கப்படக்கூடாது என்பதற்காக தான் முத்து அவன் குடும்பத்தை அழைத்து சென்று விட்டான். அவனை நான் சும்மா விட மாட்டேன் என்று வீட்டிற்கு சீல் வைக்க சொல்லி நோட்டீஸ் ஓட்டுகிறார்கள். இன்னொரு பக்கம் மனோஜ், சந்தோசஷ் இடம் வீட்டில் நடந்ததை சொல்லி வருத்தப்பட்டு கொண்டிருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மீனாவின் வீட்டில் வசதி இல்லை என்றாலும் அண்ணாமலையை நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள். ஸ்ருருதி வீட்டில் வசதி இருந்தாலும் விஜயா தனக்கேற்றவாறு இல்லாமல் கஷ்டப்படுகிறார். சுருதியின் வீட்டில் செய்யும் சாப்பாடு எதுமே விஜயாவுக்கு பிடிக்கவில்லை. சாப்பிட முடியாமல் விஜயா ரொம்பவே கஷ்டப்படுகிறார். ஸ்ருதியின் அம்மா இதுதான் சந்தர்ப்பம் என்று நக்கலாக பேசுகிறார். இன்னொரு பக்கம் மனோஜ், கொசுத்தொல்லை, சந்தோஷின் குறட்டை, எலி தொல்லை என்று ரொம்பவே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:
எலியை பிடிப்பதற்காக எலி கூண்டை வைத்துக்கொண்டு இரவு முழுக்க மனோஜ் சுற்றிக் கொண்டிருக்கிறார்.
இதையெல்லாம் அறிந்த சிந்தாமணி, ரோகினியை வரவைத்து விஜயா குடும்பத்தை பற்றி சொல்கிறார். மனோஜை உன் வசம் கொண்டு வர இதுதான் சந்தர்ப்பம். என்றெல்லாம் சொல்கிறார். ரோகினியும் மனோஜை தன் வீட்டில் தங்க வைப்பதற்காக யோசிக்கிறார். இன்னொரு பக்கம் முத்து- மீனா இருவரும் எப்படியாவது வீட்டை மீட்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.






