விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனாவை வீட்டை விட்டு அனுப்ப சொல்லி பார்வதியிடம் கேட்டார். பார்வதி முடியாது என்றார். இதனால் கோபப்பட்டு விஜயா வீட்டிற்கு வந்தார். அப்போது மீனா ஜாதகம் பார்த்த விஷயத்தையும், ஜோசியர் வீட்டில் விளக்கேற்ற சொல்லி பூஜை செய்ய சொன்னதையும் சொன்னார். விஜயா ஒத்துக்கொள்ளவில்லை. மீனாவை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார் விஜயா. ஆனால், அண்ணாமலை ஏற்றுக்கொள்ளவில்லை. முத்து- ரவி எல்லோருமே அறிவுரை சொல்லியுமே விஜயா ஏற்றுக் கொள்ளவில்லை. பின் அண்ணாமலை, விஜயாவை திட்டி அனுப்பி விட்டார்.

அதற்குப்பின் மனோஜ், ரோகினி சந்திக்க ஹோட்டல் போனார். அங்கு மனோஜ், விவாகரத்து கொடுக்க விருப்பம் என்று ஒரு டாக்குமெண்ட்டை ரெடி பண்ணி அதில் கையெழுத்து போட சொன்னார். ரோகிணி, அதற்கு முன்பு நான் கொடுக்கும் டாக்குமெண்டில் கையெழுத்து போடு. அதில் விவாகரத்து வேண்டாம் என்று எழுதி இருக்கிறது. மனோஜ் அதற்கு ஒத்துக்கொள்ளவே இல்லை. உடனே ரோகினி, நீ கையெழுத்து போடவில்லை என்றால் நான் இங்கேயே தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினார். மனோஜ் பயந்து வெளியே தப்பிக்க பார்த்தார். ரோகினி விடவில்லை. பாத்ரூமுக்கு சென்ற மனோஜ், தன் அம்மாவிற்கு ஃபோன் செய்து சொன்னார்
சிறகடிக்க ஆசை:
ரோகிணி தன்னை பிளாக்மெயில் செய்யும் விஷயத்தைப் பற்றி மனோஜ், விஜயாவிடம் சொன்னார். பதறிப் போன விஜயா வீட்டில் ரோகினி செய்த விஷயத்தை சொன்னார். பின் முத்து-மீனா இருவரும் மனோஜை காப்பாற்றுவதற்காக ஓட்டலுக்கு சென்றார்கள். இன்னொரு பக்கம் ஓட்டலில் ரோகிணி, கையெழுத்து போடுகிறாயா? நான் தூக்கு மாட்டட்டுமா? என்று மிரட்டிக்கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் மனோஜ் பயந்து கொண்டு கையெழுத்து போட போனார். உடனே அந்த இடத்திற்கு கிரிஷ் வந்து விட்டார். கிரிசை பார்த்த ரோகினி, யார் உன்னை அழைத்து வந்தது என்றார்

சீரியல் ட்ராக்:
அப்போது முத்து-மீனா இருவரும் உள்ளே வந்தார்கள். ரோகினி, தன்னுடைய திட்டம் எல்லாம் சொதப்பிவிட்டதே என்று கோபப்பட்டார். முத்து, மனோஜை திட்டி அங்கிருந்து அழைத்து செல்கிறார். மீனாவுமே ரோகிணிக்கு வார்னிங் கொடுத்துவிட்டு செல்கிறார். பின் வீட்டிற்கு வந்த முத்து, ஹோட்டலில் நடந்தது எல்லாம் சொல்கிறார். விஜயா, மனோஜை பயங்கரமாக திட்டிக் கொண்டிருந்தார். ரவி, அண்ணாமலை எல்லோருமே திட்டினார்கள். பின் விஜயா, இதற்கெல்லாம் காரணம் மீனாவுடைய ராசி தான். அவள் இந்த வீட்டை விட்டு போனால் எல்லா பிரச்சனையும் தீர்ந்துவிடும் என்றார்.
https://www.youtube.com/watch?v=Kov4wpZgVlQ
சீரியல் ப்ரோமோ:
இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அண்ணாமலை வாக்கிங் வந்து கொண்டிருக்கும்போது பைக் ஓட்டி வந்த நபர் அவரை மோதி விட்டு செல்கிறார். இதனால் அண்ணாமலை ஹாஸ்பிடலில் இருக்கிறார். வீட்டில் உள்ள எல்லோருமே ரொம்பவே அண்ணாமலை நினைத்து கவலைப்படுகிறார்கள். கோபத்தில் விஜயா, உன்னுடைய நேரம் தான் என் புருஷனை இப்படி செய்கிறது. அந்த சாமியாரம்மா சொன்னதெல்லாம் நடக்கிறது. தயவு செய்து என் வீட்டை விட்டு போய்விடு என்றெல்லாம் ரொம்ப மோசமாக பேசி விடுகிறார். மீனா மனம் உடைந்து ஹாஸ்பிடல் இருந்து வெளியேறுகிறார்.






