விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கல்லூரியில் தேர்வு எழுத முடியாததால் சத்யா வீட்டுக்கு வந்திருந்தார். இதை அறிந்த முத்து, நான் எப்படியாவது எழுத வைக்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்தார். இந்த வாரம் சுருதிக்கு வந்த கொரியரை விஜயா பிரித்து பார்த்தார். அந்த சமயம் வந்த ஸ்ருதி, தன் மாமியார் என்று கூட பார்க்காமல் திட்டி விட்டார். இன்னொரு பக்கம் முத்து-மீனா இருவருமே சத்யாவிற்காக கல்லூரிக்கு சென்றார்கள். அங்கு பிரின்ஸ்பலை பார்க்க முடியாது என்று துரத்தி விட்டார்கள்.

அதற்கு பின் வீட்டில் முத்து, எப்படியாவது சத்யாவை கல்லூரியில் சேர்க்க வேண்டும். அதற்காக நான் குடித்து உன்னை அடிப்பது போல் நடிக்கிறேன். சத்யாவை கல்லூரியில் ஏற்றுக்கொள்வார்கள் என்று சொல்ல மீனாவும் ஒத்துக் கொண்டார். மறுநாள் கல்லூரி முதல்வர் முன்பு முத்து குடிப்பது போல நடித்து மீனாவை அடித்தார். அந்த சமயம் வந்த சத்யா, நிஜமாகவே தன் அக்காவை மாமா அடிக்கிறார் என்று தடுக்க பார்த்தார். உடனே அந்த கல்லூரி முதல்வர், உன் குடும்ப சூழ்நிலை எனக்கு தெரியவில்லை.
சிறகடிக்க ஆசை:
மீண்டும் நீ கல்லூரியில் சேர்ந்து கொள் என்று சொல்ல மீனா-சத்யா சந்தோசப்படுகிறார்கள். ஆனால், முத்து மீது போலீசில் புகார் கொடுத்து விடுவதால் அவரை போலீஸ் கைது செய்து விடுகிறது. பின் நடந்த உண்மையை மீனா போலீசிடம் சொல்ல, அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. நேற்று எபிசோட்டில், முத்துவை எப்படியாவது வெளியே கொண்டு வர வேண்டும் என்று மீனா எல்லோருக்கும் போன் செய்து பேசி இருந்தார். அப்போது ஸ்ருதிக்கு போன் செய்து நடந்ததை சொல்லி மீனா உதவி கேட்டார். ஸ்ருதி தன்னுடைய அப்பாவிடம் உதவி கேட்க, அவர் முடியாது என்று மறுத்து விட்டார்.

நேற்று எபிசோட்:
இதுதான் சந்தர்ப்பம் என்று ஸ்ருதி அம்மா, ஒன்னுக்கு ரெண்டு ஆக முத்து அம்மாவிடம் பேசி இருந்தார். உதவி எதுவும் கிடைக்காததால் மீனா வேதனையில் வீட்டிற்கு வந்துவிட்டார். அப்போது வீட்டில் எல்லோருமே ஒன்று கூடி மீனாவை டார்கெட் செய்து பேச, அண்ணாமலை, நீங்கள் நல்லதுக்கே செய்தாலும் ஒரு வார்த்தை என்னிடம் கேட்டிருக்க வேண்டும். நீங்கள் பண்ண முறை தப்பு என்று கோபப்பட்டு பேசி இருந்தார். இதை பார்த்து விஜயா ரொம்ப சந்தோஷப்பட்டார். மறுநாள் போலீஸ் ஸ்டேஷனில் முத்து எந்த தவறும் செய்யவில்லை என்று அவரை விடுதலை செய்தார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்துவை மீனா வீட்டிற்கு அழைத்து வருகிறார். அதை பார்த்த விஜயா வழக்கம்போல் இருவரையும் திட்டிக் கொண்டிருக்கிறார். அண்ணாமலை எதுவுமே பேசவில்லை. உடனே கோபத்தில் முத்து-விஜயா இருவருக்கும் வாக்குவாதம் நடக்கிறது. கடைசியில் அண்ணாமலை, இனி இந்த தவறு செய்யாதே என்று சொல்கிறார். அதற்குப்பின் சுருதிக்கு உடம்பு சரியில்லாததால் வேலைக்கு லீவு போட சொல்லி கேட்கிறார். ஆனால், ரவியின் ஓனர் கண்டிப்பாக வந்தே தீர வேண்டும் என்று சொல்வதால் கிளம்பி விடுகிறார்.

சீரியல் ட்ராக்:
இதனால் கோபப்பட்ட சுருதி வீட்டை விட்டு கிளம்புகிறார். மீனா எவ்வளவு தடுத்துமே சுருதி கேட்கவில்லை. அப்போது வந்த விஜயா, மீனாவை திட்டிவிட்டு சுருதியை சமாதனம் செய்கிறார். ஆனால், ஸ்ருதி கேட்காமல் சென்று விடுகிறார். இதனால் விஜயாவிற்கு பயங்கர கோபம் வருகிறது. பின்விஜயா, ரவிக்கு போன் செய்து நடந்ததை சொல்லி, நீ அவளை கூப்பிட போகாதே. அவளாக வரட்டும். திமிர் பிடித்தவள் உன் பேச்சைக் கேட்க வேண்டும் என்றெல்லாம் தேவையில்லாததை சொல்லித் தருகிறார். ஆனால், ரவி அமைதியாகவே இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






