ஸ்விக்கி டெலிவரி, செக்யூரிட்டி வேலை- சிறகடிக்க ஆசை சீரியல் ஹீரோ முத்து வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள்

0
541
- Advertisement -

சிறகடிக்க ஆசை சீரியல் நாயகன் வெற்றி வசந்த் குறித்து பலரும் அறிந்திடாத தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் எப்போதும் டிஆர்பியில் டாப்பில் இருப்பது ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் தான். இந்த சீரியல், கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த கதை. தற்போது சீரியலில் முத்து, மீனா இருவரும் கிரிஷை தத்தெடுப்பது குறித்து வீட்டில் பேசி இருந்தார்கள்.

-விளம்பரம்-

ரோகினி இதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று நினைக்கிறார். இன்னொரு பக்கம் மனோஜ்க்கு பேங்கில் இருந்து 10 லட்சம் ரூபாய்க்கு கிரீட் ஆனதை அறிந்து ரொம்ப சந்தோஷப்படுகிறார். இதனால் என்ன ப்ரச்சனை அவருக்கு காத்து இருக்கிறது என்று தெரியவில்லை. வீட்டில் ரவி, தான் வேலை செய்யும் இடத்தில் திருமண ஜோடிகளுக்கு போட்டி நடப்பதை கூறியதை அடுத்து மூன்று ஜோடிகளும் போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

- Advertisement -

சிறகடிக்க ஆசை சீரியல்:

இதில் வெற்றி பெற்றால் ஒரு இலட்சம் பரிசு என்றவுடன் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று மூன்று ஜோடியும் நினைக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு நாளும் பல திருப்பத்துடன் சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த சீரியலில் முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வெற்றி வசந்த். இவர் இந்த சீரியலில் நடிப்பதற்கு முன்பு டிக் டாக், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்களை போட்டிருந்தார்.

வெற்றி வசந்த் குறித்த தகவல்:

அதன் மூலம் தான் இவருக்கு மக்கள் மத்தியில் அறிமுகம் கிடைத்தது. அதற்கு பின் இவர் நிறைய ஷார்ட் பிலிம்யில் நடித்திருக்கிறார். அதன் மூலம் தான் இவருக்கு சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது சிறகடிக்க ஆசை என்ற சீரியலில் கதாநாயகனாக வெற்றி வசந்த் கலக்கி வருகிறார். இந்த சீரியலின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்திருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில் வசந்துக்கு சிறந்த தொலைக்காட்சி நடிகருக்கான விருது வழங்கி இருந்தார்கள்.

-விளம்பரம்-

விழாவில் வெற்றி வசந்த் சொன்னது:

அப்போது அதில் அவர், இந்த இடத்தில் நான் இருப்பதற்கு காரணம் மக்கள் என்னை ஏற்றுக் கொண்ட காரணத்தினால் தான். என்னை உருவாக்கிய சீரியல் இயக்குனர், எழுத்தாளருக்கு எல்லாம் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் ஒவ்வொரு முயற்சியிலும் எனக்கு ஏணி படிகளாக இருந்தவர்களுக்கும் நன்றி. நீங்கள் இல்லை என்றால் இந்த இடத்தில் என்னால் இருக்க முடியாது. இதேபோல் நிறைய விருதுகளை நான் வாங்குவேன் என்று உணர்ச்சி பூர்வமாக பேசியிருந்தார்.

வெற்றி வசந்த் செய்த வேலைகள்:

அப்போது தொகுப்பாளர், கதாநாயகன் ஆகுவதற்கு முன்பு வெற்றி வசந்த், ஸ்விக்கி டெலிவரி வேலை செய்து இருக்கிறார். நிறைய செட்டுகளில் செக்யூரிட்டி வேலை பார்த்திருக்கிறார். பல கஷ்டங்களை கடந்து தான் இவர் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். தற்போது மக்கள் செலப்பிரேடியாக மலேசியா, சிங்கப்பூர் என்று பல வெளிநாடுகளுக்கு சென்று வருகிறார். இதற்கு காரணம் இவருடைய உழைப்பும், விடாமுயற்சி, தன்னம்பிக்கை தான் என்று புகழ்ந்து பேசியிருந்தார். தற்போது இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement