விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ஜீவாவை பற்றி சீதா சொன்னதைக் கேட்டு மீனா- முத்துவுக்கு சந்தேகம் வந்தது. உடனே முத்து, ஜீவாவை விசாரிக்க உண்மை தெரிந்தது. பின் முத்து அவரிடம் சண்டை போட்டு பணத்தை கேட்க, நான் மொத்த பணத்தையும் போன முறையே வட்டியுடன் செட்டில்மென்ட் செய்துவிட்டேன். அதற்கு சாட்சியே நீதான் என்று ஜீவா சொன்னவுடன் முத்து பழசை நினைத்து பார்த்தார். பின் இந்த விஷயத்தை வீட்டில் எல்லோரிடமும் சொல்ல வேண்டும் என்றதற்கு ஜீவா ஒத்து கொண்டார். பின் வீட்டில் அண்ணாமலை, விஜயாவை நீதிபதிகளாக உட்கார வைத்து, மனோஜை கூண்டில் நிறுத்தி முத்து கேள்வி கேட்டார்.
அப்போது முத்து, மனோஜ் செய்த தில்லாலங்கடி வேலையை பற்றி சொல்லி இருந்தார். இதனால் மொத்த பேருமே அதிர்ச்சியானார்கள். மனோஜ்-ரோகினிக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. உடனே ரோகினி, ஆதாரம் இல்லாமல் எதுவும் பேச வேண்டாம் என்றவுடன் ஜீவா உள்ளே வந்தார். பின் அவர், வீட்டில் உள்ள எல்லோரிடம் மன்னிப்பு கேட்டு நடந்ததை சொல்ல, விஜயாவிற்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது. கோபத்தில் அண்ணாமலை, மனோஜ்- ரோகினையும் திட்டிருந்தார். உடனே விஜயா, மனோஜின் சட்டையை பிடித்து எதற்கு இந்த மாதிரி செய்தாய்?என்று கேட்க, ரோகினி சொல்லி தான் நான் செய்தேன் என்று மனோஜ் சொன்னவுடன் ரோகினியை பார்த்து விஜயா முறைத்தார்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் விஜயா, மனோஜ் செல்வதெல்லாம் உண்மையா? என்று ரோகினையை பளார் என்று அடித்தார். என்ன சொல்வது என்று புரியாமல் ரோகினி அழுது கொண்டே இருந்தார். விஜயாவும், அவரை மீண்டும் மீண்டும் அடித்தார். கடைசியில் வேறு வழி இல்லாமல் ரோகினி, உண்மையை ஒத்து கொண்டு, அம்மாவாக அவனுக்காக என்ன செய்தீர்கள்? அவன் பெயருக்கு தான் படித்திருக்கிறான். வேலைக்கு போகிற அளவுக்கு திறமை இல்லை. அவன் ரொம்ப சோம்பேறி என்றெல்லாம் மனோஜை தரக்குறைவாக பேச, ஆத்திரம் தாங்க முடியாமல் விஜயா இன்னும் ரோகினியை அடித்தார்
நேற்று எபிசோட்:
உடனே கோபத்தில் ரோகினி அங்கிருந்து சென்று விட்டார். பின் ரவி – சுருதி, முத்து-மீனா நான்கு பேருமே ரோகினி- மனோஜ் செய்த வேலையை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் கேட்ட மனோஜ்க்கு ரொம்ப அவமானமாக இருந்தது. பின் இதை பற்றி அவர் ரோகினி இடம் கேட்க, அவர் கோபத்தில் பேசி இருந்தார். இதானால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமானது. இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மனோஜ், தான் செய்தது தவறு என்று யோசிக்காமல் ரோகினி சொன்னது தான் தவறு என்று வாக்குவாதம் செய்கிறார். கோபத்தில் ரோகினி, மனோஜை திட்டி வீட்டை விட்டு கிளம்புகிறார்.
இன்றைய எபிசோட்:
பின் இதைப் பற்றி தன்னுடைய அம்மாவிடம் சொல்ல, அவர் இன்னும் கோபமாக ரோகினியை திட்டுகிறார். உடனே அண்ணாமலை, நீ ரோகினியை அடித்து இருக்கக்கூடாது. உன் மகன் செய்ததும் தவறு தான் என்று சொல்ல, அவள் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தேன். என் நம்பிக்கையை உடைத்து விட்டால் என்று ரொம்ப ஆக்ரோஷமாக விஜயா பேசினார். இன்னொரு பக்கம் தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்ற ரோகினி, நடந்த விஷயத்தை தன்னுடைய அம்மாவிடம் சொல்லி அழுகிறார்.
சீரியல் ட்ராக்:
அவரும் ஆறுதல் சொல்லி அறிவுரை செய்கிறார். இதனால் ரோகினி அங்கிருந்து கிளம்பி விடுகிறார். பின் வீட்டிற்கு வந்த ரோகினியை பார்த்தவுடன் தான் மனோஜ்க்கு நிம்மதி வருகிறது. ஆனால், விஜயா மட்டும் கோபத்திலேயே இருக்கிறார். அதோடு அந்த கோபத்தை எல்லாம் மீனா மீது காண்பித்துக் கொண்டிருக்கிறார். அதோடு மனோஜ் – ரோகினி இருவரையும் பேச விடாமல் விஜயா தடுக்கிறார். பின் ரோகினி, மன்னிப்பு கேட்டு விஜயாவிடம் பேச வரும்போது அவர் இன்னும் ஆக்ரோஷத்தில் ரோகினியை திட்டி விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.