விஜயா சொன்ன வார்த்தையால் ஷாக் ஆன ரோகினி, முத்து செய்த வேலை- சிறகடிக்க ஆசை

0
164
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ புது டீலர், விளம்பரத்தில் நடிக்க 2 லட்சம் கொடுத்த பணத்தை யாருக்கும் தெரியாமல் மனோஜ் மறைத்தார். ஆனால், ஒரு கட்டத்தில் உண்மை வெளிவந்தது. இதனால் எல்லோரும் மனோஜ் மீது கோபப்பட்டார்கள். பின் ஓரு வழியாக பணத்தை ரோகினி எல்லோருக்கும் அனுப்பி விட்டார். இன்னொரு பக்கம் பார்வதி வீட்டிற்கு சென்ற மீனாவை அவமானப்படுத்தி இருந்தார் விஜயா. அதற்கு மீனா எதுவும் பேசவில்லை. பின் பீரோவில் பணம் இல்லை என்று பார்வதி சொன்னவுடன் விஜயா ஷாக் ஆகி தேடிப் பார்த்தார். ஆனால், அங்கு பணம் இல்லை.

-விளம்பரம்-

பார்வதி உடைய நகைகள், பணமெல்லாம் இருந்தது. ஆனால், விஜயா பணம் மட்டும் இல்லை. இதனால் விஜயா, மீனா தான் எடுத்துப்பார் என்று சொல்ல, பார்வதி அப்படி எல்லாம் இருக்காது. பழி போடாதே என்று சொன்னார். இருந்தாலுமே விஜயா கேட்கவில்லை. பின் வீட்டில் விஜயா, பார்வதி பணம் காணவில்லை. மீனா தான் எடுத்திருப்பார் என்று சொல்ல, மீனாவுக்கு ஆத்திரம் தாங்க முடியலவில்லை, பயங்கரமாக அழுதார். அண்ணாமலை-முத்து இருவரும் மீனாவிற்கு சப்போர்ட் செய்து பேசி இருந்தார்கள். ஆனால், விஜயா கேட்கவில்லை.

- Advertisement -

சிறகடிக்க ஆசை:

மீண்டும் மீண்டும் மீனா மீது தான் பழி போட்டாள். நேற்று எபிசோட்டில் முத்து , உண்மையை கண்டுபிடிக்க பார்வதி வீட்டிற்கு போனார். அப்போது முத்து கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பார்வதி தவித்தாள். உடனே முத்து, போலீஸ்- புகார் என்று சொன்னவுடன் பார்வதி, பயத்தில் அது என்னுடைய பணமில்லை. விஜயா பணம். சத்யா கேஸ் மூலமாக வக்கீல் கொடுத்தது என்று சொன்னவுடன் முத்துவிற்கு பயங்கர கோபம் வந்தது. பின் வீட்டிற்கு வந்த முத்து, மீனா தான் பணத்தை திருடினாள் என்று ஒரு ட்ராமா போட்டார்.

நேற்று எபிசோட்:

எல்லோரும் நம்பிவிட்டார்கள். இருந்தாலும் மீனா எந்த தவறும் செய்யவில்லை என்று அண்ணாமலை உறுதியாக இருந்தார். வழக்கம்போல் மனோஜ்- விஜயா இருவருமே மீனாவை திட்டி பேசி இருந்தார்கள். ஆனால், முத்து உண்மையை வரவைக்க தான் மீனா மீது பழி போட்டார். கடைசியில் முத்து, மீனா பணத்தை எடுக்கவில்லை. இதை எல்லா வேலையும் செய்தது அம்மா தான் என்று சொன்னவுடன் அண்ணாமலை அதிர்ச்சி அடைந்தார். பின் அண்ணாமலை கோபப்பட்டு விஜயாவை திட்டி மீனாவிடம் மன்னிப்பு கேட்க சொன்னார். ஆனால், விஜயா முடியாது என்றார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் அண்ணாமலை, உன்னால் தான் முத்து-மீனா கஷ்டப்பட்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

அவர்கள் இழந்த மொத்த பணத்தையும் நீதான் கொடுக்க வேண்டும் என்று சொன்னதற்கு விஜயா முடியாது என்று மறுக்கிறார். உடனே ஸ்ருதி, விஜயாவிற்கு எதிராக பேசி இருந்தார். கடைசி வரை விஜயா பணம் தர முடியாது என்று சொன்னதால் அண்ணாமலை அந்த பணத்தை நானே உங்களுக்கு தருகிறேன் என்று வாக்குறுதி கொடுக்கிறார். முத்து, வேண்டாம் என்று சொல்லியும் அவர் கேட்கவில்லை. பின் விஜயா, மனோஜ்- ரோகினி இருவரிடமே நடந்ததை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது மனோஜிடம் பணத்தை கேட்க, அவர் இல்லை என்று மறுத்து விடுகிறார். பின் ரோகினி இடம் கேட்க, அவருமே ஏதேதோ காரணத்தை சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:

உடனே விஜயா, மலேசியாவிற்கு டிக்கெட் போடு. உங்க அப்பாவை சந்தித்து பணம் வாங்கலாம் என்று சொன்னதற்கு ரோகினி ஷாக்காகி, நம்மையும் கைது செய்து விடுவார்கள். நான் உங்களுக்கு பணத்தை ரெடி பண்ணி தருகிறேன் என்று வாக்குறுதி கொடுத்தார். பின் மனோஜ் இடம் ரோகினி பணம் கேட்டார். அவர், பார்ட்டிலேயே செலவாகிவிட்டது என்று சொல்ல, இருவருக்கும் இடையே வாக்குவாதமானது. அதற்குப் பின் ரோகினி, தன்னுடைய தோழியிடம் வீட்டில் நடந்ததை பற்றி சொல்லி புலம்பி இருந்தார். பின் பார்வதி வீட்டிற்கு சென்ற ரோகினி, வீட்டில் நடந்ததை சொல்லி உதவி கேட்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement