விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அண்ணாமலை எவ்வளவு எடுத்து சொல்லியுமே முத்து கேட்கவில்லை. அவருடைய முடிவில் பிடிவாதமாக இருந்தார். இதனால் மீனா விடம் அண்ணாமலை, நான் முத்துவிடம் எடுத்துச் சொல்லி புரிய வைக்கிறேன். நீ கவலைப்படாதே என்று ஆறுதல் சொன்னார். அதற்கு பின் வீட்டிற்கு வந்த ரோகினி, இன்று கடையில் நல்ல பிராஃபிட் கிடைத்தது. பழைய பொருட்களுக்கு புதிய பொருட்கள் என்று சொல்லிருந்தேன். நிறைய லாபம் கிடைத்தது என்று சொன்னார். இதைக் கேட்டு விஜயா, மனோஜ் ஷாக் ஆனார்கள். உடனே அண்ணாமலை, எதுவாக இருந்தாலும் நியாயமாக செய்யணும். ஏமாற்றி எதுவும் பண்ணக்கூடாது என்று அறிவுரை சொன்னார்.

அதற்கு பின் ரோகினி, நாங்கள் இருவரும் சேர்ந்து கடைக்கு போகிறோம் என்றவுடன் விஜயா ஒற்றுக்கொண்டார். அடுத்த நாள் மீனா, சீதா வேலை செய்யும் இடத்திற்கு சென்று ஆறுதல் சொல்லிக் கொண்டிரு ந்தார். பின் முத்து காரில் வந்து கொண்டிருக்கும்போது ஒரு பெண் விஷம் குடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் அவருடைய அம்மா அழுது கொண்டிருந்தார். உடனே அவரை, சீதா வேலை செய்யும் ஹாஸ்பிடலுக்கு முத்து அழைத்து வந்தார். அப்போது அந்த அம்மா, அவளுடைய காதலுக்கு சம்மதம் சொல்லி இருந்தால் இந்த நிலைமை என் மகளுக்கு வந்திருக்குமா? என்று அழுது கொண்டிருந்தார். இதையெல்லாம் பார்த்து முத்து மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் ஹாஸ்பிடலில் என் மகளுக்கு பிடித்த பையனை திருமணம் செய்து வைக்க என் மகனிடம் அறிவுரை சொல்லுங்கள் என்றார். அதற்கு மீனா, அவளுக்கு பிடித்தவரை திருமணம் செய்து கொள்ளட்டும் என உங்கள் வாயால் சொல்லுங்கள் என்றார். கோபத்தில் முத்து, மீனாவை முறைத்தார். பின் முத்து, அவர்கள் குடும்ப விஷயத்தில் நான் எதுவும் சொல்ல முடியாது என்று சொன்னார். பின் சீதா, நான் எந்த தவறான முடிவும் எடுக்க மாட்டேன். தைரியமாக இருங்கள் மாமா என்று அறிவுரை சொன்னார். இன்னொரு பக்கம் விஜயா, பார்வதி இருவரும் நீத்துவை சந்தித்து பேசி இருந்தார்கள். அப்போது விஜயா, உனக்கு நான் ஒரு நல்ல மாப்பிள்ளை பார்த்து இருக்கிறேன்.

நேற்று எபிசோட்:
ரொம்ப அழகானவன் என்றெல்லாம் சொன்னார். உடனே நீத்து, எனக்கு ரவி மாதிரி பையன் இருந்தால் போதும் என்று ரொம்ப புகழ்ந்து பேசி இருந்தார். இது எல்லாம் கேட்டு விஜயாவிற்கு பயங்கர கோபம் வந்தது. பின் வீட்டிற்கு வந்த விஜயா, நீத்து சொன்ன விஷயத்தை எல்லாம் சுருதியிடம் சொன்னார். இன்னொரு பக்கம் மீனாவின் அம்மா, சத்யா இருவரும் முத்துவை சந்தித்து சீதாவின் கல்யாணம் விஷயமாக பேசி இருந்தார்கள். அப்போது முத்து, அவன் குணம் சரியில்லை. நான் நல்ல மாப்பிள்ளை பார்க்கிறேன் தயவுசெய்து இதைப் பற்றி பேசாதீர்கள் என்று தன்னுடைய மாமியாருக்கு அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தார். பின் இதைப்பற்றி முத்து, மீனாவிடம் சொன்னார்.

இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோடில் மீனா, மீண்டும் மீண்டும் சீதாவின் நிலைமையும், அவருடைய காதலையும் பற்றி எடுத்து சொல்லி புரிய வைக்கிறார். ஆனால், முத்து மாறவே இல்லை. சீதாவிற்கு அவள் பிடித்த மாதிரி ஒரு நல்ல மாப்பிள்ளை கொண்டு வருகிறேன் என்று சொல்கிறார். இதனால் மீனாவிற்கு என்ன செய்வது என்றே புரியவில்லை வேதனைப்படுகிறார். இன்னொரு பக்கம் அருணின் அம்மா, முத்துவிடம் சொல்வதற்காக பரதநாட்டியம் கிளாஸ்க்கு போகிறார். அங்கு அருணின் அம்மா, அருண்- சீதா காதலிக்கும் விஷயத்தை பற்றி சொன்னவுடன் விஜயா கோபப்படுகிறார். அதோடு மீனாவையும் முத்துவையும் ரொம்ப கேவலமாக பேசுகிறார்.

சீரியல் ட்ராக்:
இதனால் அருணின் அம்மாவிற்கு கோபம் வந்து அங்கிருந்து கிளம்பி விடுகிறார். பின் பார்வதி, ஏன் இப்படி செய்தாய்? என்று கேட்கிறார். உடனே விஜயா, சீதாவிற்கு நல்ல வசதியான குடும்பம் கிடைத்தால் அவருடைய அம்மாவை கையில் பிடிக்க முடியாது. அதனால் தான் அப்படி பேசினேன் என்கிறார். அதற்குப்பின் மனோஜின் வாய் கட்டை எடுப்பதற்காக சாமியார் ஒருவரை வீட்டிற்கு விஜயா வரவைக்கிறார். அப்போது சாமியாரை பார்த்தவுடன் முத்து, பேய் ஓட்டுபவர் தான் வந்திருக்கிறார் என்று வீட்டில் கலவரம் செய்து கொண்டிருக்கிறார். கடைசியில் அவர் மனோஜின் வாய் கட்டை எடுக்க வந்தவர் என்று தெரிய வருகிறது. இத்துடன் சீரியல் முடிகிறது.






