விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மனோஜ்-ரோகினி செய்த வேலையை பற்றி ஜீவா சொன்னவுடன் எல்லோரும் அதிர்ச்சி ஆனார்கள். உடனே கோபத்தில் விஜயா, ரோகினியை பளார் என்று அடித்தார். பின் ரோகினி, மனோஜை தரக்குறைவாக பேச, ஆத்திரம் தாங்க முடியாமல் விஜயா இன்னும் ரோகினியை அடித்தார். பின் இதை பற்றி மனோஜ், ரோகினி இடம் கேட்க, இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமானது. உடனே கோபத்தில் ரோகினி, மனோஜை திட்டி வீட்டை விட்டு தன்னுடைய அம்மா வீட்டிற்கு போனார். அப்போது அவர், நடந்த விஷயத்தை தன்னுடைய அம்மாவிடம் சொல்லி புலம்பி இருந்தார்.

வீட்டிற்கு வந்த ரோகினியை பார்த்தவுடன் தான் மனோஜ்க்கு நிம்மதி ஆனது. பின் விஜயா, மனோஜ் - ரோகினி இருவரையும் பேச விடாமல் தடுத்தார். ரோகினி, மன்னிப்பு கேட்டும் விஜயா ஏற்றுக்கொள்ளவில்லை. பின் ரோகினிக்கு போன் செய்த ஸ்ருதியின் அம்மா, வீட்டில் நடந்ததை பற்றி விசாரித்தார். உடனே கோபத்தில் ரோகினி, எங்கள் வீட்டு விஷயத்தை பற்றி நீங்கள் பேச வேண்டாம் என்று போனை வைத்து விட்டார். பின் அவர், விஜயாவுக்கு போன் செய்து ரோகினி சொன்னதை சொல்ல, கொந்தளித்த விஜயா, ரோகினியை வெளுத்து வாங்கி இருந்தார். இதனால் கோபத்தில் ரோகினி, சுருதியிடம் சண்டை போட்டார்.
சிறகடிக்க ஆசை:
பின் மனோஜ்க்கு ரோகினி போன் செய்ய, அவர் எடுக்கவே இல்லை. உடனே மனோஜ், தன்னுடைய அம்மாவிற்கு ஃபோன் செய்து நடந்ததை சொன்னார். நேற்று எபிசோடில் விஜயா வீட்டிற்கு வராதே என்று சொன்னதால் வேதனையில் மனோஜ் கடையில் இருந்தார். அந்த சமயம் வந்த முத்து, சாப்பாடு கொடுத்து உன்னால் பசி தாங்க முடியாது. கோபத்தில் எதுவும் யோசிக்காதே என்று ஆறுதல் சொல்லி அவரை சாப்பிட வைத்தார். மனோஜூம் சாப்பிட்டுவிட்டு, நீ இந்த ஷோ ரூமை பங்கு கேட்க தான் இப்படி எல்லாம் செய்கிறாயா? என்று ரொம்ப மோசமாக பேச, கோபத்தில் முத்து அவரை திட்டி விட்டு வந்தார்.

நேற்று எபிசோட்:
இன்னொரு பக்கம் மீனா, ரோகினிக்காக சமைத்துக் கொண்டு போய் தந்தார். அவரும் சாப்பிட்டுவிட்டு, மீனாவை கடுமையாக பேசி இருந்தார். இதனால் மீனா-ரோகினி இடையே வாக்குவாதம் வந்தது. மறுநாள் மீனா, தன் வீட்டில் நடந்ததை பற்றி தன்னுடைய அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது சத்யா, ரோகினி இது மட்டும் இல்லாமல் நிறைய தில்லாலங்கடி வேலை எல்லாம் செய்கிறார். சிட்டியிடம் அவர் நிறைய கடன் வாங்கி இருக்கிறார் என்று சொன்னவுடன் மீனாவுக்கு சந்தேகம் வந்தது. இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ரோகினி, வெளியே வரவில்லை என்று விஜயா கோபத்தில் பயங்கரமாக கதவை தட்டுகிறார்.

இன்றைய எபிசோட்:
பின் வெளியே வந்த ரோகினி, அசந்து தூங்கிவிட்டேன் என்று சொல்ல, விஜயா திட்டி விடுகிறார். பின் மனோஜ் ரெடியாக உள்ளே போனவுடன் ரோகினி கதவை மூட பார்த்தார். உடனே விஜயா, கதவு திறந்து இருக்கட்டும். நீ உன் வேலையை மட்டும் பார் என்று இருவரையும் பேசவிடாமல் தடுக்கிறார். இது எல்லாம் பார்த்து முத்துவிற்கு பயங்கர கோபம் வருகிறது. அதற்குப்பின் வீட்டிற்கு வந்த அண்ணாமலை இடம் ரோகினி மன்னிப்பு கேட்கிறார். அதற்கு அவர், நீ என்ன சொன்னாலும் நீ செய்தது தவறு என்று கிளம்பி விடுகிறார். அதற்கு பின் எல்லோரும் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்கிறார்கள். ரோகினி சாப்பிட வந்தார்.

சீரியல் ட்ராக்:
உடனே விஜயா, அவரை எழுந்திரு என்று திட்டி விடுகிறார். எல்லோருமே ரோகினியை சாப்பிட சொல்லியுமே அவர் கேட்கவில்லை. பின் ரோகினி, எனக்காக யாரும் வாக்குவாதம் செய்யாதீர்கள். ஆன்டி சொல்லும் வரை நான் சாப்பிடவில்லை. நான் இந்த வீட்டிலேயே சாப்பிடவில்லை என்று கோபமாக சொல்லிவிட்டு கிளம்புகிறார். இன்னொரு பக்கம் மீனா, சிட்டி இடம் ரோகிணி பணம் வாங்கிய விஷயத்தை முத்துவிடம் சொன்னவுடன், அவருக்கு சந்தேகம் வருகிறது. கடைசியில் ரோகினி, பார்வதியிடம் விஜயா செய்ததை பற்றி சொல்லி புலம்பி அழுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






