விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகினி, அந்த கேரளா பூசாரியின் நம்பரை எனக்கு கொடுங்கள். விஜயா மந்திரம் பலிக்காத மாதிரி நான் செய்கிறேன் என்று சொன்னார். இன்னொரு பக்கம் வித்யாவை காதலிக்கும் முருகன், புதிதாக வீடு வாங்குவதற்கு அவரை அழைத்தார். அப்போது வித்யா, நான் என்னுடைய காதலுக்கு உதவியவரை அழைத்து வருகிறேன் என்று சொன்னார். அதற்குப்பின் மீனா, வித்யாவை சந்தித்து பேசி இருந்தார். அப்போது வித்யா, மீனாவை வெளியே கூப்பிட்டார். அதற்கு அவர், நானும் வருகிறேன். இருந்தாலும் உங்கள் தோழி ரோகினியை வரவையுங்கள் என்று அறிவுரை சொல்லிவிட்டு சொன்னார். அதற்கு பின் வீட்டுக்கு வந்து ரோகினி, வீட்டுக்கு மீனா வந்ததை பற்றி கேட்டு கோப்பட்டார்.

பார்வதி, விஜயா இருவருமே வசியம் பண்ண சாமியாரை பார்க்க போனார்கள். அங்கு விஜயா, என் மகன், மருமகளையும் பிரிக்கணும். அவள் எங்கள் வீட்டிற்கு நிறைய பிரச்சனை செய்தார் என்று இல்லாதது பொல்லாதது எல்லாம் ரோகினியை பற்றி சொல்லி மந்திரச்ச கயிறு ஒன்றை வாங்கிக் கொண்டார். அதற்குப்பின் விஜயா, ரோகினி- மனோஜ் பிரித்தவுடன் முத்து-மீனாவையும் பிரிக்கணும் என்று சொன்னார். உடனே பார்வதி, இது தேவையில்லாத வேலை. அவர்களை எதற்கு பிரிக்கணும், அதெல்லாம் செய்யாதே என்று திட்டி இருந்தார். அதற்குப்பின் அதே சாமியாரை பார்க்க ரோகினி வந்தார்.
சிறகடிக்க ஆசை:
அவர், என்னையும் என் புருஷனையும் என் மாமியார் பிரிக்க பார்த்தார். அவரையும் அவர் அம்மாவையும் பிரிக்கணும் என்று ரொம்ப எமோஷனாக பேசினார். உடனே அந்த சாமியார் ஒரு மந்திரத்தை கயிறை கொடுத்தார். இன்னொரு பக்கம் முத்துவை பார்க்க முருகன் வந்தார். வரும் வழியில் அவர் ரோகினி ஏமாற்றிய கதிரை அழைத்துக் கொண்டு வந்தார். கதிர், முத்து கண்ணில் படவில்லை. கடைசியில் விஜயா, கயிறை சாமி ரூமில் வைத்து இருந்தார். அப்போது வீட்டிற்கு வந்த முத்து, சாமி ரூமில் இருக்கும் கயிறை பார்த்து அண்ணாமலைக்கு கட்டி விட்டார். அப்போது விஜயா, இந்த கயிறை எதற்கு கட்டினீர்கள்? இது மனோஜ்க்கு வாங்கினது என்று ஏதேதோ சொல்லி சமாளித்தார். ஆனால், முத்து- அண்ணாமலை விடாமல் பதில் கொடுத்தார்கள். விஜயாவால் எதுவுமே சொல்ல முடியவில்லை.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜயா, மனோஜிற்கு குழந்தை பிறக்க வேண்டும் என்று தான் அந்த கயிறை எடுத்து வந்தேன் என்று பொய் சொல்கிறார். அதனால் முத்து, அண்ணாமலை எதுவும் பேசாமல் கயிறை கொடுத்து விடுகிறார்கள். அதற்குப்பின் விஜயா, மனோஜின் கையில் கயிறு கட்டி விடுகிறார். அதற்குப்பின் வந்த ரோகினியும் மனோஜ் கையில் கயிறை கட்டுகிறார். மனோஜால் எதுவும் பேசாமல் இரண்டு கைகளிலும் கயிறு கட்டிக் கொள்கிறார். மறுநாள் காலையில் மனோஜ் வேலைக்கு தயாராகும்போது அயன் பாக்ஸில் சூடு வைத்துக் கொள்கிறார். மனோஜ் கோபத்தில் ரோகினியை திட்டுகிறார்.

சீரியல் ட்ராக்:
இதையெல்லாம் வெளியில் இருந்து பார்த்த விஜயா ரொம்ப சந்தோஷப்படுகிறார். அதற்குப்பின் விஜயா, ரோகினியை திட்டுகிறார். உடனே மனோஜ், இது எங்கள் விஷயம். நீங்கள் தலையிட தேவையில்லை. வெளியே போங்கள் என்று திட்டி விடுகிறார். இதனால் விஜயா மனம் உடைந்து அழுகிறார். வீட்டில் உள்ள எல்லோருமே விஜயா அழுவதை பார்த்து கவலைப்படுகிறார்கள். பின் அண்ணாமலை விசாரிக்க, மனோஜ் திட்டி விட்டான் என்று சொல்லுகிறார் விஜயா. இன்னொரு பக்கம் முத்து, முருகனும் புது பிளாட்டை பார்க்க செல்கிறார்கள். அங்கு வித்யா, மீனா இருவருமே வருகிறார்கள். ஒருவரை ஒருவர் சந்தித்தவுடன் ஷாக் ஆகிறார்கள். சந்தோசமாக இருங்கள் என்று அவர்களுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு வருகிறார்கள் முத்து-மீனா. இத்துடன் சீரியல் முடிகிறது.
https://www.youtube.com/watch?v=gOu2wMnqzYo
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் சிந்தாமணி, உங்கள் மகன் என் வீட்டில் உள்ள பணத்தை எல்லாம் எடுத்து வந்து விட்டான் என்று சொல்கிறார். உடனே பார்வதி, அவர்களுடைய பணத்தை தானே எடுத்து வந்தார்கள் என்று சொல்கிறார். கோபப்பட்ட விஜயா, எதற்காக ஆட்களை வைத்து அவளுடைய பணத்தை திருடு பார்த்தீர்கள். மீனா கையையும் உடைத்திருக்கிறீர்கள். இனிமேல் என் மகன், மருமகள் விஷயத்தில் நீங்கள் தலையிடாதீர்கள். அவளுடைய தொழிலில் பிரச்சனை செய்யாதீர்கள் என்று ரொம்ப ஆவேசமாக பேசுகிறார். இதைக் கேட்டு சிந்தாமணி ஷாக் ஆகிறார்.






