மீனா சொன்ன வார்த்தையால் முத்து வீட்டில் கலவரம், சந்தேகப்படும் விஜயா- விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

0
268
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கடந்த வாரம் ரோகினி, சிட்டியை சந்தித்த போது உங்கள் மாமியாரின் பணம் திருடு போனதற்கு காரணம் மீனாவின் தம்பி சத்யா தான். அது முத்துவிற்கும் தெரியும். அந்த வீடியோ முத்து போனில் இருக்கு. அதை வெளியே விட்டால் நீங்கள் சொல்லும் வேலையை நான் செய்கிறேன் என்று சொன்னவுடன் ரோகினி ஒத்துக் கொண்டார். இன்னொரு பக்கம், மீனா-மூத்து ஸ்கூட்டியில் போவதை பார்த்த சிட்டி, அவர்கள் மீது காரை விட்டு மோத பார்க்கிறார். அந்த சமயம் பார்த்து குறுக்கே வேறொரு வண்டி வந்ததால் முத்து-மீனா இருவருமே சிட்டியிடம் இருந்து தப்பித்து விட்டார்கள்.

-விளம்பரம்-

இந்த வாரம் முத்து, தன்னுடைய மொபைலை சார்ஜ் போட்டு விட்டு குளிக்கப் போனார். உடனே ரோகினி, முத்து போனை யாருக்கு தெரியாமல் எடுத்து செக் பண்ணார். அப்போது முத்துவின் மொபைலில் இருந்த சத்யா வீடியோவை பார்த்து ஷாக் ஆகி, அதை அவர் தன்னுடைய மொபைலுக்கு அனுப்ப பார்த்தார். ஆனால், போன் சுவிட்ச் ஆஃப் ஆகி இருந்தது. அப்போது முத்து தனது போனை தேட, போன் கிடைக்கவில்லை. எப்படியோ ரோகினி போனை வைத்துவிட்டு அங்கிருந்து தப்பித்து மாடிக்கு சென்று விட்டார். கடைசியில் மீனா, போனை கொண்டு போய் முத்துவிடம் தந்தார்.

- Advertisement -

சிறகடிக்க ஆசை:

இன்னொரு பக்கம் ரவி, தன்னுடைய ஓனர் உடன் சேர்ந்து ஹோட்டலுக்கு தேவையான பொருள் வாங்க சென்று இருந்தார். இதை பார்த்த ஸ்ருதி அம்மா கோபப்பட்டு ஸ்ருதியிடம் ரவியை பற்றி தவறாக சொல்லி இருந்தார். பின் மீனா, கொலு வைக்கும் விஷயத்தை முத்துவிடம் சொல்ல, அவரும் ஒத்துக் கொண்டு அண்ணாமலையிடம் சொன்னார். இதை கேட்ட விஜயா முதலில் மறுத்தார். பின் அண்ணாமலை, விஜயாவை புகழ்ந்து பேசி கொலு வைக்க எப்படியோ சம்மதம் வாங்கி விட்டார். இதனால் மீனா-முத்து ரொம்ப சந்தோஷப்பட்டார்கள்.

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோடில், வீட்டில் கொலு வைப்பது பற்றி விஜயா, பார்வதி இடம் பேசி கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் அந்த காதல் ஜோடிகள் தேவையில்லாத வேலைகளை செய்து கொண்டிருக்க, அதை பார்த்த மீனா, கோபப்பட்டு திட்டுகிறார். ஆனால், விஜயா வழக்கம் போல் மீனா சொல்வதை ஏற்றுக்கொள்ளாமல் அந்த காதல் ஜோடிகள் சொன்னதை நம்பி மீனாவை திட்டி அனுப்பி விட்டார். மேலும், வீட்டில் கொலு வைப்பதற்கு தேவையான பொம்மைகள் எல்லாம் முத்து வாங்கி வைத்திருந்தார். அதை பார்த்து மீனா சந்தோஷப்பட்டார். பின் முத்து, வீட்டில் உள்ளவர்களிடம் கொலு வைக்க பணம் கேட்டார். ஆனால், மனோஜ் மறுக்க, ரோகிணி தர ஒத்துக் கொண்டார்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

அதேபோல் ஸ்ருதியும் பணத்தை கொடுத்து விட்டார். இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில், கொலு வைக்கும் முறையை பற்றி ஸ்ருதிக்கு மீனா அழகாக எடுத்துச் சொல்லி இருந்தார். அதைக் கேட்ட ஸ்ருதி ஆச்சரியப்பட்டு மீனாவை பாராட்டியிருந்தார். அந்த சமயம் பார்த்து விஜயா வந்தவுடன், மீனா-சுருதி சண்டை போடுவது போல் நடிக்கிறார்கள். உடனே, விஜயா மீனாவை திட்டி இருந்தார். அதற்கு பின் மீனா ஒரு பொம்மையை பார்த்து, இதே போல் தான் வகுப்பில் இரண்டு மாணவர்கள் இருந்தார்கள். அது ஒரு வகை பாவம். எனக்கு தெரியவில்லை என்று சொன்னவுடன் மீண்டும் விஜயா கோபப்பட்டு பேசி இருக்கிறார்.

சீரியல் ட்ராக்:

உடனே மனோஜ்- ரோகினி இருவருமே சேர்ந்து கொண்டு மீனாவை தான் குறை சொல்லி பேசி இருந்தார்கள். அதற்கு முத்தவும் பதில் கொடுத்தார். கடைசியில் முத்து கேட்டதால் விஜயா எந்த பரத பாவத்தை செய்தார். ஆனால், அந்த மாணவர்கள் இப்படி செய்யவில்லை என்றவுடன் விஜயா கோபப்பட்டார். பின் அண்ணாமலை, நீ கவனமாக இரு. ஏதாவது தவறு நடந்தால் உன் மேல் தான் பழி வரும் என்று சொல்ல, இனிமேல் மீனா சாப்பாடு கொண்டு வர தேவை இல்லை என்று விஜயா சொல்லி விடுகிறார். பின் வகுப்பில் விஜயா சொல்லிக் கொடுக்கும் போது அந்த காதல் ஜோடிகள் செய்வதை கவனிக்கிறார். அவர்கள் வகுப்பை கவனிக்காமல் தேவையில்லாத வேலைகளை செய்தவுடன் விஜயாவிற்கு சந்தேகம் வருகிறது. இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement