சிறகடிக்க ஆசை சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகை – வெளியான காரணம் இதோ.

0
198
- Advertisement -

விஜய் டிவில தான் முக்கியம் என்று சன் டிவி சீரியலில் இருந்து நடிகை விலகியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே, தமிழ் சின்ன திரையில் சன் டிவி, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த இரு சேனல்களிலுமே போட்டி போட்டுக் கொண்டு வித்தியாசமான கதைகளுடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.

-விளம்பரம்-

இதனால் வாரம் வாரம் இந்த இரு சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தான் டிஆர்பி ரேட்டிகளில் முன்னிலையில் வகுத்து வருகின்றது. அது மட்டும் இல்லாமல் விஜய் டிவி- சன் டிவி சீரியல் மூலம் பல நடிகர் நடிகைகள் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார்க.ள் இப்படி இருக்கும் நிலையில் விஜய் டிவி சீரியல் நடிகை சன் டிவி சீரியலில் இருந்து விலகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

விஜய் டிவி சீரியல்:

அதாவது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது. சீரியலில் கதாநாயகன் முத்து வீட்டில் அவருடைய தாய், அவருடைய முதல் மற்றும் இளைய மகனுக்கு மட்டும் தான் சப்போர்ட்செய்கிறார். முத்து படிக்கவில்லை என்றும் அவன் ஓவராக பேசுகிறான் என்றும், தன்னுடைய தந்தைக்கு ஆதரவாக நிற்கிறான். இதனாலே சிறு வயதில் இருந்தே அவருடைய தாய்க்கு முத்து மீது வெறுப்பு கோபம் இருக்கிறது.

சிறகடிக்க ஆசை சீரியல்:

தன்னுடைய தாயின் பாசத்திற்காக முத்து ஏங்குகிறார். இன்னொரு பக்கம் கதாநாயகி பூக்கடை வியாபாரம் செய்கிறார். ஒரு விபத்தில் அவருடைய தந்தை இறந்து விடுகிறார். பின் அண்ணாமலை பேச்சால் அவரை முத்து திருமணம் செய்து கொள்கிறார். அதற்கு பின் வீட்டில் வரும் இரண்டு மருமகள்களும் பணக்காரர்கள் என்று மீனாவை கொடுமை செய்கிறார் மாமியார். மேலும், இந்த சீரியலில் ஸ்ருதி என்ற கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர் பிரீத்தா ரெட்டி.

-விளம்பரம்-

பிரீத்தா ரெட்டி குறித்த தகவல்:

இவர் இதற்கு முன்பே நிறைய சீரியல்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் சிறகடிக்க ஆசை சீரியலில் இவருடைய கதாபாத்திரம் எதைப் பற்றியும் கவலைப்படாமல், யோசிக்காமல் தன் மனதில் நினைப்பதை பேசுவது. இதனாலே இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இது மட்டும் இல்லாமல் இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா சீரியலிலும் நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவர் கதாநாயகனின் தங்கை அக்ஷயா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

சீரியலை விட்டு விலகிய பிரீத்தா ரெட்டி:

இப்படி இருக்கும் நிலையில் ஒரே நேரத்தில் இரண்டு சீரியல்களிலும் நடிப்பது கஷ்டமாக இருப்பதால் இனியா சீரியலில் இருந்து நடிகை ப்ரீத்தா ரெட்டி விலகி இருக்கிறார். அதோடு இவருக்கு சிறகடிக்க ஆசை சீரியலில் தான் அவருடைய கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருக்கிறது. இதனால் தான் இனியா சீரியல் இருந்து விலகி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

Advertisement