நான் பெண் வேஷம் போடுறது என் மனைவிக்குப் பிடிக்கலை! – சிரிச்சா போச்சு’ ராமர் சீரியஸ்

0
3854
Ramar
- Advertisement -

விஜய் டிவி-யின் `அது இது எது?’, `கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர்கள் பலர். சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர் உள்பட பலரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அந்த வரிசையில் `என்னம்மா… இப்படிப் பண்றீங்களேம்மா’ ராமர் முக்கியமானவர். அந்த கேரக்டராகவே மாறி சிரிக்கவைக்கும் இவர், இப்போது திரைப்படங்களிலும் நடித்துவருகிறார். அவருடன் பேசியதிலிருந்து…

-விளம்பரம்-

ராமர்

- Advertisement -

பெண் கேரக்டர்கள்தான் உங்க ஸ்பெஷல். அதை நீங்க எப்படிப் பார்க்கிறீங்க?

“முதல்முறையா `பருத்திவீரன்’ படப் பாட்டி வேஷம் போட்டேன். அப்புறம், `கிங்ஸ் ஆஃப் காமெடி’யில் ரோபோ சங்கர்கூட சேர்ந்து கலா மாஸ்டர் கெட்டப்போட்டது நல்லா ரீச். தொடர்ந்து `என்னமா… இப்படிப் பண்றீங்களேம்மா’ புரோகிராம் செம வைரல். அதுதான் என்னை எல்லா பக்கங்களுக்கும் கொண்டுபோய் சேர்த்திருக்கு. அந்தச் சமயம் சிவகார்த்திகேயன் போன் பண்ணி, `ஷோ பயங்கரமா இருந்துச்சுண்ணே’னு பாராட்டினார். லாரன்ஸ் மாஸ்டர் கூப்பிட்டு தன் `காஞ்சனா’ படத்துல நடிக்கச் சொன்னார். இப்ப சமீபத்துல, கரகாட்டம் ஆடும் பெண்ணா வேஷம் போட்டிருந்தேன். அதைப் பார்த்துட்டு `பிக் பாஸ்’ பரணி போன் பண்ணி பாராட்டினார். `நாம சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம்ணே’னு சொல்லியிருக்கார். நான் பெண் வேஷம் போட்டால், அப்படியே எங்க அம்மா மாதிரியே இருப்பேன்.”

-விளம்பரம்-

ராமர்

பெண் வேடம் போடுவது பற்றி உங்க வீட்ல என்ன சொல்றாங்க?

“பெண் வேஷம் போடுறது என் மனைவிக்குப் பிடிகக்கலை. எனக்குமே ஒரே மாதிரி பண்றோமேனு ஒரு யோசனை. என் குழந்தைகளும், `ஏன், அப்பா பெண் வேஷமே போடுறார்?’னு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. நானும் டைரக்டர்கிட்ட சொல்லி பெண் வேஷம் போடுறதைக் குறைச்சுக்கிட்டிருக்கேன். என்னை எல்லாருக்கும் தெரியவைச்சது இந்தப் பெண் கெட்டப்புகள்தான். ஆனாலும், அடுத்தடுத்த லெவலுக்குப் போகணும்ல பாஸ். `இவனுக்கு இதுதான்’னு செட் ஆகிடக் கூடாதில்லையா, அதனாலதான்.”’

ராமர்

நீங்க மத்தவங்க மாதிரி பெர்ஃபாம் பண்ணிட்டிருந்தது போய், இன்று உங்களை மாதிரியே பலர் பண்றாங்க. அதையெல்லாம் கவனிக்கிறீங்களா

“ஆமாம், `கிங்ஸ் ஆஃப் காமெடி ஜூனியர்’ ஷோவில் `கதையல்ல கப்சா’னு என்னைய மாதிரியே ஒரு பையன் நடிச்சான். நல்லா பண்ணியிருந்தான். அவனை நேர்ல பார்த்துப் பாராட்டிட்டேன். என்னை மாதிரியும் பண்றாங்கனு ரொம்ப சந்தோஷமா இருக்கு. அவன் குரல், காஸ்ட்யூம் எல்லாமே அப்படியே என்னைய மாதிரியே இருக்கும். இதுக்கெல்லாம் காரணம், எங்க டைரக்டர் தாம்சன் சார்தான். அவருக்கு என்னைக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கேன்.”

இப்ப என்னென்ன படங்கள் பண்ணிட்டிருக்கீங்க

“இதுவரை ஏழு படங்கள்ல நடிச்சிருக்கேன். நாலு படங்கள் ரிலீஸ் ஆகிடுச்சு. இதுதவிர, எட்டு படங்கள்ல கமிட் ஆகியிருக்கேன். நாலு படங்கள்ல நடிச்சு முடிச்சுட்டேன். மீதி நாலு படங்கள் ஷூட்டிங் போயிட்டிருக்கு. படங்கள்லயுமே பெண் வேஷம் போடச் சொல்லிதான் வாய்ப்புகள் வருது. அதனாலேயே, அப்படி வந்த 13 படங்களை வேணாம்னு தவிர்த்துட்டேன். இப்போ கேரக்டர் என்னனு கேட்டுட்டுதான் ஓகே சொல்றேன்.”

Advertisement