தனது சொந்த தம்பி திருமண வாழ்வில் நேர்ந்த சோகத்தை வைத்து தான் விஸ்வாசம் எடுத்தாரா சிவா – அவரே அளித்த விளக்கம்.

0
3422
bala
- Advertisement -

வீரம் படத்தில் அஜித்துக்கு தம்பியாக நடித்த நடிகர் பாலா தன்னுடைய காதல் மனைவியை விவாகரத்து செய்து உள்ளார். தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த நியூஸ் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது என்றும் சொல்லலாம். நடிகர் பாலா அவர்கள் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த அன்பு என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானர். பின் காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், கலிங்கா, மஞ்சள் வெயில் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்து உள்ளார். பின் சில காலமாக இவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் பெரிய அளவு இல்லை என்றவுடன் மலையாள மொழிக்கு சென்று விட்டார்.

-விளம்பரம்-
Image result for veeram actor bala wife

நடிகர் பாலா மலையாள மொழி படங்களில் முன்னணி நடிகராக இருந்து வந்தார். சமீபத்தில் தான் இவர் அஜித் நடிப்பில் வெளி வந்த ‘வீரம்’ படத்தில் அஜித் தம்பிகளில் ஒருவராக நடித்தார். இந்த படத்தை இயக்கிய சிறுத்தை சிவா தான் இவருடைய அண்ணன். நடிகர் பாலா கேரளாவை சேர்ந்த பிரபல பின்னணி பாடகி அம்ருதாவை ரொம்ப காலமாக காதலித்து வந்தார். பின்னர் இவர்கள் இருவரும் 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு அவந்திகா என்ற ஒரு மகள் இருக்கிறார். இவர்களுடைய மணவாழ்க்கை நன்றாக போய்க் கொண்டிருக்கும் போது அம்ருதா தனியாக இசைக்குழு ஆரம்பித்த பின்னர் தான் இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிய வந்தது.

- Advertisement -

சின்ன சின்ன விஷயங்களை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொண்டு அம்ருதா அவர்கள் அவருடைய தந்தை வீட்டிற்கு குழந்தையை அழைத்துக் கொண்டு சென்று விடுவாராம்.சில வருடங்களாகவே இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. பின் 2015 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் பிரிந்து தான் வாழ்ந்து வந்தார்கள்.இவர்கள் கேரள மாநிலம் எர்ணாகுளம் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு போட்டார்கள். பின் இந்த வழக்கில் நீதிமன்றம் சில தினங்களுக்கு முன்பு தான் இவர்களுக்கு விவாகரத்து வழங்கியது.

சமீபத்தில் சிறுத்தை சிவா இயக்கிய விஸ்வாசம் படத்திற்கான சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை வென்றார் இமான். இப்படி ஒரு இந்த படத்தை பாலாவின் வாழ்க்கையை வைத்து தான் சிவா எடுத்தார் என்ற செய்தி வைரலானது. இதுகுறித்து சிவாவிடம் கேட்ட போது, இந்த நேரத்துல ‘விஸ்வாசம்’ இசை குறித்து மட்டுமே பேச விரும்புறேன். சோஷியல் மீடியா எதுலயும் நானில்லை. அதனால அங்க என்ன எழுதியிருக்காங்கன்னு எனக்குத் தெரியல. கதைக்கும், என் தம்பி பாலாவின் வாழ்க்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement