கிட்டத்தட்ட நான் இறந்து விட்டேன் என்று மருத்துவர்கள் கூறி விட்டார்கள்- சிறுத்தை சிவா தம்பி பாலா எமோஷனல் பேட்டி

0
241
- Advertisement -

பிரபல இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பி நடிகர் பாலா சமீபத்தில் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்பவர் பாலா. இவர் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ‘அன்பு’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். பின் இவர் காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், கலிங்கா, மஞ்சள் வெயில் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

பின் சில காலமாக இவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் பெரிய அளவில் இல்லை. அதனால், இவர் மலையாள மொழிக்குச் சென்று விட்டார். பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர் அஜித்தின் ‘வீரம்’ படத்தின் மூலம் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்து இருந்தார். தற்போது இவர் மலையாள படங்களில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அதோடு இவர் இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பி ஆவார்.

- Advertisement -

பாலாவின் திருமண வாழ்க்கை:

இதனிடையே நடிகர் பாலா கேரளாவை சேர்ந்த பிரபல பாடகி அம்ருதாவை 2010 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா என்ற ஒரு மகளும் இருக்கிறார். பின் சில காரணங்களால் 2019 ஆம் ஆண்டு அமருதாவை விவாகரத்து செய்து, 2021 ஆம் ஆண்டு கேரளாவை சேர்ந்த மருத்துவரான எலிசபெத் என்றவரை பாலா திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் தான் இவர்களுக்கும் விவாகரத்து ஆகிவிட்டது என்று செய்திகள் வந்துள்ளது.

பாலா பேட்டி :

தற்போது, நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் பாலா பேட்டி ஒன்று அளித்துள்ளார் அதில், மலையாளத்தில் ஒரு மாதத்தில் ஒரு படத்தை முடித்து விடுவார்கள். தமிழ் மாதிரி ஒரு வருஷம் எல்லாம் சூட்டிங் எடுக்க மாட்டாங்க. வேறு மாநிலங்களில் இருந்து ஹீரோக்கள் மலையாளத்தில் படம் பண்ணாங்கன்னா நல்லா ரெஸ்பான்ஸ் பண்ணுவாங்க. ஒரு படம் இல்லனா ரெண்டு படம் மட்டும்தான். அதுக்கப்புறம் திரும்ப அவங்களே அனுப்பி வச்சிருவாங்க. ஆனா, வேறு மாநிலங்களில் இருந்து மலையாளத்தில் நான் மட்டும் தான் 50 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறேன். இப்பவும் ஹீரோவாக நடிக்கிறேன்.

-விளம்பரம்-

யூடியூபர் சர்ச்சை:

தொர்ந்து பேசிய அவர், சமீபத்தில் என்னைப் பற்றி சில வதந்திகள் வந்தன. ஒரு யூடியூபரை துப்பாக்கியால் சுட முயன்றேன் என்று வதந்திகள் வந்தன. ஆனா, அப்போது கேரளாவில் உள்ள மக்கள், போலீஸ், ரசிகர்கள் அனைவரும் எனக்கு தான் சப்போர்ட் பண்ணாங்க. பத்து மாதங்களுக்குப் பிறகு இப்போ நான் எந்த தப்பு பண்ணவில்லை என்று தீர்ப்பு வந்திருக்கிறது. அந்த யூடியுபரையும் போலீஸ் அரெஸ்ட் பண்ணி இருக்காங்க. கடவுள் எல்லாத்துக்கும் ஒரு கணக்கு வைத்திருப்பார், தப்பு பண்ணவங்க தப்பிக்கவே முடியாது என்று கூறியுள்ளார்.

பாலா செய்யும் உதவிகள் :

பின், இது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் தான் என்னுடைய அமைப்பிற்கு கீழ் 1500 குழந்தைகள் மேல் படிக்கிறார்கள். எல்லாருக்கும் கண் ஆப்ரேஷன் ஃப்ரீயா தான் பண்ணி வைக்கிறேன். என்ன பொறுத்த வரைக்கும் எந்த ஒரு நோயாளியும் அய்யோ மருந்து வாங்க பணம் இல்லை என்று சாகக்கூடாது. மேலும், உங்க எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் தான். வாழ்க்கையில் மிகப்பெரிய பேரழிவு எனக்கு நிகழ்ந்தது. நான் இறந்துவிட்டேன் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள். என்னுடைய உள்ளுறுப்புகள் எல்லாம் வேலை செய்வதை நிறுத்திவிட்டது.

நான் பிழைக்க மாட்டேன்னு சொன்னாங்க :

அப்போ நான் பிழைப்பதற்கு ஜீரோ பர்சன்டேஜ் தான் வாய்ப்புகள் இருந்ததுன்னு சொன்னாங்க. அதுக்கு முன்னாடி நான் ஞானவேல் ராஜா பேனரில் ஒரு படம் பண்ண வேண்டியதாக இருந்தது. அந்தப் படத்துக்கு நான் தான் டைரக்டர், ஹீரோ எல்லாமே. அதுக்கப்புறம் தான் எனக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. நான் இறந்து விடுவேன் என்று சொல்லும்போது கூட நான் சந்தோஷமாகத்தான் இருந்தேன். நம்ம நல்ல வாழ்க்கை தான் வாழ்ந்து இருக்கோம் என்று. ஆனால் கடைசியில் கடவுள், நீ இன்னும் நிறைய விஷயங்கள் செய்ய வேண்டியது இருக்கிறது’ என்று நினைத்து என்னை பிழைக்க வைத்து விட்டார் என்று எமோஷனலாக பேசியுள்ளார்.

Advertisement