அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான விஸ்வாசம் படம் சூப்பர் ஹிட் அடைந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்திற்கு போட்டியாக வந்த போதும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூல் ரீதியாகவும் லாபத்தை ஈட்டியது.
விஸ்வாசம் படத்திற்கு பின்னர் இயக்குனர் சிவா பல தயாரிப்பாளர்கள் மற்றும் ஹீரோக்களின் தேர்வாக மாறியுள்ளார். இதனால் சிவா அடுத்து யாரை வைத்து எடுக்க போகிறார் என்ற கேள்வி பலரது மத்தியிலும் எழும்பியுள்ள நிலையில் தற்போது சிவாவின் அடுத்த படத்தில் ரஜினி நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரஜினிக்கு இரண்டு வேடங்கள் என்றும், ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்த சமயத்தில் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்குநர் சிவா சந்தி்த்துள்ளார். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது.
இதுகுறித்து விசாரிக்கையில் ரஜினி அண்மையில் ‘விஸ்வாசம்’ படம் பார்த்ததாகவும், படம் பிடித்திருந்ததால் இயக்குநர் சிவாவை அழைத்துப் பேசியிருக்கிறார். தந்தை மகள் உறவைப் பற்றி பேசியுள்ள அந்தப் படம் மிகவும் நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் சிவாவைப் பாராட்டியுள்ளார்.