முன்னணி ஹீரோவின் வீட்டின் கதவை தட்டிய சிவா.! இவர் தான் அடுத்த பட ஹீரோவா.!

0
1357
Siva

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள ‘விஸ்வாசம்’ படத்திற்கு பின்னர் இயக்குனர் சிவா கோலிவுடில் படு வான்டட் இயக்குனராக மாறிவிட்டார். விஸ்வாசம் படத்திற்கு பின்னர் சிவா அடுத்து யாரை வைத்து படம் எடுக்க போகிறார் என்று அனைவரும் ஆவளுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

சிவா அடுத்த படத்தை மீண்டும் அஜித்தை வைத்து எடுக்க போகிறார் என்ற சில வதந்திகள் வந்தது. ஆனால், அது பொய்யான தகவல் என்று அஜித் தரப்பில் இருந்து தெரிவிக்கபட்டது.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் சூர்யாவை கடந்த வாரம் அவரது இல்லத்தில் சந்தித்து, சூர்யாவும், அவரது சகோதரர் கார்த்தியும் இணைந்து நடிக்கும் டபுள்ஹீரோ சப்ஜெக்ட் ஒன்றைச் சொல்லியிருக்கிறாராம். இதற்கு சூர்யா தரப்பில் உடனே டபுள் ஓகே சொல்லப்பட்டிருக்கிறது என்று கூறப்படுகிறது. சிவா ஏற்கனவே சூர்யாவின் தம்பி கார்த்தியை வைத்து ‘சிறுத்தை’ படத்தை இயக்கியுள்ளார் என்பதும்குறிப்பிடக்காது .

சூரியா தற்போது NGK, காப்பான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களை தொடர்ந்து இறுதி சுற்று இயக்குனர் சுதா இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படங்களை முடித்து விட்டு சிவா கூட்டணியில் சூர்யா நடிக்க திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியகியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement