தமிழ் சினிமாவில் ‘சிறுத்தை ‘என்ற ரீ-மேக் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் சிவா. அந்த படத்திற்கு பின்னர் அஜித்தை மொத்த குத்தகை எடுத்த சிவா வீரம்,வேதாளம்,விவேகம் விஸ்வாசம் என்று அஜித்தை வைத்து தொடர்ந்து 4 படங்களை இயக்கிவிட்டார்.
இந்த படத்தை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தையும் சிவா தான் இயக்கவிருக்கிறார் என்ற செய்தி கேட்டதும் ரசிகர்கள் தலையில் கை வைத்தனர். ஆனால், அது உண்மை இல்லை என்று தெரிந்ததும் தான் அஜித் ரசிகர்கள் சற்று ரிலாக்ஸ் ஆகினர்.
அதே போல பேட்டி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் சிவாவும் தன்னுடைய அடுத்த படம் அஜித்துடன் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் விஸ்வாசம் படத்தை தொடர்ந்து விஜயை வைத்து இயக்கஉள்ளதாக சில தகவல்கள் வெளியாகின. ஆனால், அதுவும் வதந்தி என்று பின்னர் தெரிய வந்தது.
இந்த நிலையில் சிவா அளித்துள்ள பேட்டி ஒன்றில் விஜய் நடித்த பத்ரி படத்தில் தான் கேமராமேனாக பணியாற்றியதாக தெரிவித்துள்ளார். அந்த படத்தில் வரும் பல பல காட்சிகளை சிவா தான் படம் பிடித்துள்ளார். மேலும், படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை கூட சிவா தான் எடுத்துள்ளாராம்.
அதே போல சமீபத்தில் ஆனந்த விகடன் பத்திரிகைக்கு பேட்டி கொடுத்துள்ள இயக்குனர் சிவாவிடம், விஜயுடன் பணிபுரியும் ஐடியா இருக்கிறதா என்று கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு பதிலித்துள்ள சிவா, வேதாளம் படத்திற்கு முன்னாள் நானும் விஜயும் சந்தித்துள்ளோம். அவரை வைத்து படம் எடுக்கணும்னு ஆசையா இருக்கு.சீக்கரம் அது நடக்கும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.