90 ஸ் ரசிகர்களின் அபிமானமான தொடரின் இரண்டாம் பாகம்.! ரசிகர்களை குஷி படுத்திய ராதிகா.!

0
7735
radhika
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரை உலகில் 1980 முதல் 1975 ஆம் ஆண்டு காலகட்டங்களில் முன்னணி நடிகையாக விளங்கியவர் ராதிகா சரத்குமார். இவர் இவர் சினிமா திரை உலகின் முன்னணி நடிகர் மற்றும் அரசியல்வாதியும் ஆன சரத்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.ராதிகா அவர்கள் தமிழ் சினிமாவில் 80களில் இருந்து தொடங்கி இன்று வரை இடைவிடாமல் வெள்ளித்திரை, சின்னத்திரை என மாறி மாறி நடித்து வருகிறார். மேலும் சினிமா துறையில் தனக்கென ஒரு அடையாளத்தையும் உருவாக்கியவர். இவர் பிரபல சன் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அண்ணாமலை, வாணி ராணி,செல்வி, அரசி என பல்வேறு தொடர்களில் நடித்து வந்தார்.

-விளம்பரம்-
Related image

கடைசியாக அவர் சந்திரகுமாரி என்ற சீரியலிலும் நடித்து உள்ளார். சில காரணங்களால் சந்திரகுமாரி தொடரில் இருந்து விலகினார். தமிழில் ‘கிழக்கே போகும் ரயில்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானார். அதன் பிறகு தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்து இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். ராதிகா சரத்குமார் திரைப்பட நடிகை , தயாரிப்பாளர் என பல துறைகளில் பணியாற்றி வருகிறார்.தற்போது, ராதிகா சரத்குமார் அவர்கள் திரையுலகில் தாய் மற்றும் கவுரவ கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இவர் வெள்ளித்திரையில் மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் பிரபலமானவர்.

- Advertisement -

தொலைக்காட்சி என்றாலே அனைவருக்கும் மனதில் வருவது ஒன்றுதான் அது சீரியல். அப்படி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் நாளுக்கு நாள் மிகுந்த அளவு மக்களிடையே வரவேற்கப்படுகிறது.சினிமா உலகத்திற்கு ராதிகா, நடிகை ராதிகா என்று சொல்லி வந்தாலும் சீரியல் பார்க்கும் குடும்பங்களுக்கு ராதிகாவை ‘சித்தி’ என்று தான் செல்லமாக அழைப்பார்கள். அந்த அளவிற்கு தொடர்களில் பிரபலமாகியுள்ளார். மேலும் சன் டிவிக்கும், ராதிகாவும் உள்ள பந்தம் இன்றுவரை தொடர்ந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் சன் டிவி நிறுவனத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒளிபரப்பான “சித்தி” சீரியல் மூலம் தமிழக மக்களிடையே அதிக வரவேற்புபெற்றவர் ராதிகா சரத்குமார். தற்போது “சித்தி 2” சீரியல் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக போகிறது என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Image result for sithi serial

அப்போதெல்லாம் “சித்தி” சீரியல் என்றாலே போதும் அனைவரும் டிவி முன்னாடி சாப்பாடு தட்டை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விடுவார்கள். எந்த வேலையுமே செய்ய மாட்டார்கள். அந்த அளவுக்கு சித்தி சீரியல் ரொம்ப பிரபலமாக இருந்தது. மேலும், சின்னத்திரையில் ராதிகா அவர்கள் இந்த அளவிற்கு உயர்ந்து இருக்கிறது காரணம் சித்தி சீரியல்தான். தற்போது சித்தி சீரியலின் இரண்டாம் பாகத்திற்கான நடிகர்களை தேர்வு செய்து உள்ளார்கள் என்ற தகவல் வெளியானது. மேலும், இந்த சித்தி 2 சீரியலை கே.விஜயன் என்பவர் இயக்க உள்ளார். இந்த சீரியலில் ராதிகா, பொன்வண்ணன், ரூபினி, நிஷாந்தி (பானுப்பிரியாவின் தங்கை), டேனியல் பாலாஜி உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்க உள்ளார்கள் என்ற தகவலும் வெளிவந்தது. மேலும்,சித்தி 2ம் பாகத்திற்கான சில காட்சிகள் படமாக்கப்பட்டு வெளிவர உள்ளது என்ற தகவல் இணையங்களில் பரவியது.இதனால் ரசிகர்கள் அதிக ஆர்வமுடன் சீரியலை எதிர்நோக்கி உள்ளனர்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement