விஸ்வாசம் படத்தை பார்த்துவிட்டு வெளிவந்தவுடன் விஜய் குறித்து பேசிய சிவா.!

0
1270
- Advertisement -

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் நேற்று (ஜனவரி 10) வெளியாகி இருந்தது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளிவந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், நல்ல குடும்ப சென்டிமன்ட் படமாகவும் இது அமைந்துள்ளது. 

-விளம்பரம்-

சிறுத்தை சிவாவுடன் வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து நான்காவது முறையாக இணைந்தார் அஜித். இதனால் மீண்டும் சிவாவுடநா என்று ரசிகர்கள் கொஞ்சம் வருத்தத்தில் இருந்து வந்தனர்.

- Advertisement -

ஆனால், அந்த கவலையை போக்கி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளார். நேற்று இந்த படத்தை பார்க்க வந்த சிவாவை அஜித் ரசிகர்கள் கைக்கொடுத்து, பாராட்டி கொண்டாடி விட்டனர், படத்தை பார்த்து வெளியே வந்த சிவாவிடம் ஊடக நபர்கள் பேட்டி கண்டனர்.

அப்போது நான்கு முறை அஜித்தை வைத்து படம் எடுத்துவிட்டர்கள் விஜயை வைத்து எப்போது படம் எடுப்பீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சிவா, கண்டிப்பாக அவரை வைத்து எடுக்க வேண்டும் என்று ஒரு ஆசை இருக்கிறது கடவுளின் வரம் கிடைத்தால் கண்டிப்பாக எடுப்பேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement