விஸ்வாசம் படத்தின் டீஸர் வெளியிட்டு தேதி எப்போது..!இயக்குனர் சிவா அறிவிப்பு..!

0
367

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்து வரும் விஸ்வாசம் படத்தின் படபிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், படத்தின் பாடல்கள் நேற்று வெளியாகி இருந்தது.

வரும் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக ஜனவரி 10 ஆம் தேதி இந்த திரைப்படம் ரஜினியின் பேட்ட படத்துடன் வெளியாகவுள்ளது. விஸ்வாசம் படத்திற்கு பின்னர் தொடங்கப்பட்ட பேட்ட படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

ஆனால், விஸ்வாசம் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையிலும் படத்தின் டீஸர் வெளியாகாமல் இருப்பது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சிவா படத்தின் டீஸர் குறித்து தகவலை தெரிவித்துள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற சிவாவிடம் விஸ்வாசம் படத்தின் டீஸர் எப்போது என்று கேள்வி கேட்டதற்கு இன்னும் 10 நாட்களில் எதிர்பார்க்கலாம் என்று கூறியுள்ளார். அனேகமாக வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையன்று டீஸர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.