‘கலாய்க்கிறது கூட தெரியாத அப்பாவியா இருக்காரே’ – பக்கம் பக்கமாக விமர்சனம் எழுதியவருக்கு சிவாவின் பதில்.

0
780
- Advertisement -

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘அண்ணாத்த’ திரைப்படம் பல மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டது. இந்த நிலையில் இந்த படத்தை கேலி செய்யும் விதமாக ஒரு நீளமான விமர்சனத்தை ட்விட்டர் வாசி ஒருவர் பதிவிட்டுள்ளார். ஆனால், அது கேலி என்று புரியாமல் சிறுத்தை சிவா அந்த பதிவிற்கு நன்றி தெரிவித்து இருப்பது நெட்டிசன்கள் மத்தியில் பெரும் காமெடியாக மாறி இருக்கிறது. அப்படி என்னதான் அந்த ட்விட்டர்வாசி அண்ணாத்த படத்தை பற்றி கூறி இருந்தார் என்பதை படியுங்கள்.

-விளம்பரம்-

அண்ணாத்த – புரிந்துகொள்ளப்படாத உள்ளடக்கம்

- Advertisement -

ஒரே தகப்பனுக்கும் இருவேறு அம்மாக்களுக்கும் பிறந்த அண்ணன் தம்பிகளின் வெளிப்படாத பாசத்திற்கும் ஒரே தாய்க்கு பிறந்த அண்ணன் தங்கையின் பாசத்திற்கும் இடையே நிகழும் போராட்டமாக நாம் இதைக் கொண்டாலும், படம் இதைத் தாண்டியும் இன்னும் பல விரிவுகளைக் காணும் சாத்தியங்களை தனதேயாக்கியதாக உள்ளது. படத்தினுள் குறியிட்டுள்ள நிறைய அம்சங்களை நாம் காணத் தவறுகிறோமோ அல்லது காண விரும்பவில்லையா என்பதில் பெரிய கேள்வி இருக்கிறது.

இதையும் பாருங்க : ஸ்டார் ஸ்போர்ட்ஸ்ஸில் ஒரு நாளைக்கு பாவனா வாங்கும் சம்பளம் எவ்ளோ தெரியுமா ? அதான் விஜய் டிவி பக்கமே வரதில்ல போல.

முதல் பாதி முழுவதுமே மசாலா வணிக சினிமாவிற்கு என்னென்ன கூறுகள் இருக்கவேண்டுமோ அதுவும் ஒரு ரஜினி படத்தில் என்னென்ன இருக்க வேண்டுமோ அத்தனையும் இருக்கிறது. பாடல், சண்டை, நற்கருத்து போதித்தல், வாழ்க்கை தத்துவங்கள். நகைச்சுவை. எல்லாம் சரிவிகிதத்தில் கலந்து நன்றாகத்தான் இருந்தது . நாம் தற்போதைக்கு மாற்று சினிமாவிற்கு பழகியவர்களாக இருக்கிறோம்,அதனாலயோ என்னவோ மசாலா வணிக திரைப்படம் மோசமான திரைப்படமாக காட்சியளிக்கிறது, அதற்கேயுரிய அபத்தங்களை நாம் பூதாகரப்படுத்துகிறோம்.

-விளம்பரம்-

சிறுவயதில் தாயை இழந்த அண்ணனும் தங்கையும் ஒருவருக்கொருவர் ஆதுரமாக அன்பு செலுத்த வேறு யாரும் இல்லாமல் தங்களுக்குள்ளவே அன்பை பகிர்ந்து கொள்பவர்களாக, அண்ணனுக்கு தங்கை தாயாகவும் தங்கைக்கு அண்ணன் தந்தையாகவும் ஒரு வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கும்போது இனி இவள் வாழ்வில் எனக்கான இடம் பெரிதாக இல்லை அவளின் கணவனும் பிள்ளையும் தான் அவளுடைய வாழ்க்கையில் முக்கியமெனும் யதார்த்த நிலை அறிந்து நாயகன் கலங்குவது யதார்த்தை ஏற்றுக்கொள்ளப் பழகுதலின் முதல் அடி

அப்படி தன் தங்கையை ஒரு நல்லவனுக்கு திருமணம் செய்து வைக்கவேண்டும் என்று ஒரு அண்ணன் எண்ணுவதில் என்ன தவறு இருக்கிறது? தங்கையின் விருப்பத்தைக் கேட்டு திருமண ஏற்பாடு செய்து ஊரைக் கூட்டிய பிறகு தங்கை தன் காதலனோடு உடன்போக்கு சென்றுவிட்டாள். என்றறிந்ததும் அவன் உடைகிறான்.. அவள் காதலுற்ற செய்தியை தன்னிடம் வந்து சொல்வதற்கு எது அவளை தடுத்தது? என்னிடம் சொல்லி இருக்கலாமே என்னும் ஆதங்கம். அங்கு அவன் ஒரு அண்ணனாக தோற்றுப் போகிறான். ஆதங்கம் அழுகையாக மாறுகிறது.

தன்னுடைய எதிர்பார்ப்புகளை தங்கையின் மீது சுமத்தியதும் தங்கை அண்ணன் மீது வைத்திருந்த மரியாதையும் இருவருக்கும் இடையே சுவராக நின்று மன விருப்பத்தை சொல்லத் தடையாகவும் இருந்து விடுகிறது. உறவினர் “ஓடுகாலி அவளை வெட்டிக் கொன்னு விடுவோம் மாப்ள,” என்பர். அங்கேயே இவர்கள் ஆணவக்கொலையை செய்வதற்கு அஞ்சாதவர்கள் என்பது காட்சிப்படுத்தப் படுகிறது. இப்படிப்பட்ட கூட்டத்திலிருந்து ஒவ்வொருவராகத்தான் வெளிவர முடியும்.

காளையன் அதில் ஒருவனாக இருக்கிறான். அவன் ஒன்றும் பெருந்தன்மையாக அவளை போ என்று சொல்வதில்லை.. அவள் முன்னமே வந்து இவனைத்தான் காதலிக்கிறேன் என்று சொல்லி இருந்தால் அவனுக்கே மணமுடித்து வைக்கக்கூடியவன்தான் காளையன் அவனுடைய போ என்பது பெருந்தன்மை அல்ல . அண்ணனை புரிந்துகொள்ளாமலே போகிறாயே போ என்பதான குமுறலின் வழியனுப்பல்.

தங்கையைத் தேடி கல்கத்தா வந்ததும் தங்கை தன் அண்ணனின் இருப்பை உணர்ந்து கொண்டே தான் இருக்கிறாள். தங்கையிடம் நாயகன் சொல்வதைச் சொல்லும் கிளிப்பிள்ளையாக நாயகி தைரியம் சொல்லியதும்”நீங்க பேசுற மாதிரியே தான் எங்க அண்ணன் பேசும்” என்பாள் தங்கை. பிரியமானவர்களின் சொற்களை வேறு யாரோ சொல்லக் கேட்டு நீங்கள் வாழ்வில் ஒரு கணமேனும் திகைத்ததே இல்லையா?

நாயகிக்கு பிரச்சனை உண்டாவது வில்லனிடம் “நல்ல குடும்பத்தில் பிறந்தவன் இப்படி பேசமாட்டான்” என்று சொல்லிய பிறகு தான். ஒரு வப்பாட்டி மகனுக்கு அது சுருக்கென்று தைக்கிறது.அவளைப் துன்புறுத்துவதின் வழியாக தந்தையின் அங்கீகார மனைவின் மகனான, தனது தாயைக் கொன்றவனான, தன்னால் எதிர்க்கவே முடியாதவனான, நாயகி சொன்ன அதே சொற்களை அடிக்கடி சொல்லக் கூடியவனான, அண்ணனை துன்புறுத்துவதாக எண்ணிக் கொள்கிறான்.

ஒரு நிலையில் உன் தாயோடு சேர்த்து உன்னையும் கொன்று இருப்பேன் உனக்கு நான்கு வயது அப்போது நான்தான் உயிர்ப்பிச்சை கொடுத்தேன் அதுலருந்து நீ உனக்கு அப்பன் நான்தான் என்று வில்லனின் அண்ணன் சொல்கிறான். அங்கு தம்பியின் கோபம் ஒரு குழப்ப நிலையை அடைந்து அண்ணனை தகப்பனாக ஏற்றுக்கொள்கிறது.அண்ணாத்தயிடம் தோல்வியடைந்த தம்பி அண்ணனிடம் தஞ்சம் அடைகிறான். இத்தனை அடுக்குகளைக் கொண்ட ஒரு படத்தைத்தான் நாம் எளிதாகப் புறந்தள்ளிக் கொண்டிருக்கிறோம். கூட்டு கேலி மனப்பான்மையில் ஒரு படத்தை உள்வாங்கிக் கொள்ளக்கூட நமக்கெல்லாம் பொறுமை இல்லாமல் போய்விட்டது. அண்ணாத்த – நன்று என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement